இவர் யார் என்று சொல்லுகிறீர்கள்? Phoenix, Arizona, USA 64-12-27 1. காலை வணக்கம், நண்பர்களே. இந்த சபைக்கு வந்திருப்பதை சிறந்த சிலாக்கியமாக நிச்சயம் கருதுகிறேன். முதலாவதாக இதன் பெயர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அது “இயேசுவின் நாமம்'' என்றழைக்கப்படுகிறது. அது எனக்குப் பிடித்திருக்கிறது. அந்த நாமத்தினால்தான் - அழகிய நாமமாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினால் - நான் மீட்கப்பட்டேன். மற்றும் இந்த அருமையான ஞாயிறு காலை வேளையில் என் நல் நண்பர்களுடன் பீனிக்ஸில் இந்த இடத்தில் ஒன்று கூடியிருப்பதென்பது இதைக் காட்டிலும் எனக்கு இருக்கப்பிடிக்கும் வேறு நல்ல இடம் எனக்குத் தெரியவில்லை - உங்களோடு மகிமையில் இருக்கும் அந்த இடத்தைத் தவிர. அந்த மகத்தான சம்பவம் என்றாகிலும் ஒரு நாள் நடக்கும் என்று நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 2. வியாதியாயுள்ள ஒருவருக்காக இங்கு வந்து ஜெபிக்க எனக்கு இன்று அழைப்பு வந்தது. என் விலையேறப்பெற்ற நண்பர் சகோ. அவுட்லாவுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். இங்கு வர வேண்டுமென்று அவர் அன்புடன் என்னை அழைத்தார். பீனிக்ஸிலுள்ள எல்லா போதகர்களுமே எனக்கு நல்லவர்களாக இருந்து வந்துள்ளனர். 3. நான் ஏன் டூசானுக்கு சென்றேன் என்று சில நேரங்களில் வியக்கிறேன். நான் மூன்று ஆண்டுகளாக அங்கு வசிக்கிறேன், ஆனால் எந்த பிரசங்க பீடத்துக்கும் நான் அழைக்கப்படவில்லை. எனவே நான் எண்ணுகிறேன் நான்... நான் டூசானுக்கு... இல்லை, பீனிக்ஸுக்கு விஜயம் செய்ய வேண்டுமென்று. இங்கு எனக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஒருக்கால், இவர்களும் கூட சலிப்படைந்து... உங்களுக்குத் தெரியுமா, அங்கு அன்றொரு இரவு மூன்று மணி நேரம் பிரசங்கம் செய்தேன், அவர்கள் என்னை மறுபடியும் வரும்படி கேட்டுக் கொள்ளாததில் வியப்பொன்றுமில்லை. 4. ஆனால் என் இருதயத்தில் தேவனுக்கும் அவருடைய மக்களுக்கும் மிகுந்த உணர்ச்சி உள்ளது. நான் மிகவும் மெள்ள பேசுகிறதால், போதியதை அளிக்காமல் சிலவற்றை விட்டுவிடுவேனோ என்னும் பயம் குடி கொண்டது. எனவே நான் மூன்று நான்கு செய்திகளை ஒரே செய்தியில் சேர்த்துவிடுகிறேன். எனவே நான் நிச்சயம்... அன்று அங்கு வந்திருந்த இங்குள்ளவர்களுக்கு, உங்களை நீண்ட நேரம் வைத்துக் கொண்டதற்காக மன்னிப்பு கோருகிறேன். அப்படி நான் செய்திருக்கக் கூடாது. 5. 3 6. மற்றும் இன்று காலை இங்கு சகோ. கார்ல் வில்லியம்ஸ், இளம் ஜிம், பாடல் குழுவினர், என் நண்பர் மாஸ்லி சகோதரருடன் இருப்பதற்காக எனக்கு மகிழ்ச்சி. நான் பிராட், சகோ. ஜான் ஷார்ரட், இன்னும் பல நண்பர்களை காண்கிறேன், கென்டக்கியிலிருந்து தொலை தூரம் வந்துள்ள சகோ. பாட் டைலர், இன்னும் என் நண்பர்கள் பலர் இன்று காலையில் இந்த அசெம்பிளியில் கூடியுள்ளனர். பாருங்கள், டூசான் இன்னும் மற்ற இடங்களிலிருந்து வந்துள்ள என் நண்பர்கள் அநேகர் இங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதைக் கண்டேன். 7. இவையெல்லாம் முடிவடைந்தவுடனே நாம் ஓரிடத்தில் ஒன்று கூடும் ஒரு நாளை எண்ணிப் பார்க்கிறேன். அங்கு நாம் மாட்டோம்... இந்த அருமையான பாடலை கேட்காமல் நிறுத்த வேண்டிய அவசியமிருக்காது, பாருங்கள். சகோ. வில்லியம்மின் மகன் அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதை நான் காண நேரிட்டது. அவன் அன்றொரு இரவு 'ரமதா இன்'னில் சாட்சி கூறினான். அவன் ஏறக்குறைய ஆறு அடி உயரம் என்று நினைக்கிறேன். ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், அந்த சாட்சிக்குப் பிறகு அவனுடைய உயரம் பத்து அடியாக ஆகிவிட்டது என்று எண்ணுகிறேன். அவன்... அந்த பையன் கூறினதை நான் உண்மையில் ரசித்தேன். அது மிகவும் அற்புதமான சாட்சி. 8. 4 9. இந்த இளைஞர்கள் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட அவர்களுடைய விசுவாசத்தை சாட்சியாகக் கூறுவதை நான் கேட்கும் போது... எனக்கு வயதாகின்றது, நான்... ஒரு நாள் நான் இவ்விடம் விட்டு வீடு செல்லவேண்டும். இந்த இளைஞர்கள் ஆயத்தமாகி, நான் விட்டு செல்லும் இடத்திலிருந்து அவர்கள் தொடர்வதற்கு ஆயத்தமாயிருப்பதைக் காணும்போது... அப்படித் தான் நாம் செய்கிறோம். அப்படித்தான் நமது வாழ்க்கை அமைக்கப்பட்டுள்ளது. நாம் ஒரு சந்ததி தோன்றுகிறது... தகப்பனும் தாயும். அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்து, பிள்ளைகள் மணம் புரிந்து கொள்வதைக் காண்கின்றனர். பேரப் பிள்ளைகள் பிறக்கின்றனர். சில நாட்கள் கழித்து, அப்பாவும் அம்மாவும் புழுதிக்குச் செல்கின்றனர். அதற்குள்ளாக, பிள்ளைகள் பேரப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள ஆயத்தமாகின்றனர். அதன் பிறகு அவர்களும் புழுதிக்குச் செல்கின்றனர். ஆனால் இந்நாட்களில் ஒன்றில் ஒரு பெரிய, பொதுவான உயிர்த்தெழுதல் உண்டாயிருக்கும். நாம் எல்லோருமே தேவனுடைய சமுகத்துக்கு அழைக்கப்பட்டு, தேவன் நமக்கு அளித்த இயேசு கிறிஸ்துவை நாம் என்ன செய்தோம் என்று கணக்கு ஒப்புவிக்க வேண்டியிருக்கும். எனவே இந்த சந்ததியில், உலகம் முழுவதிலும் நான் சந்தித்த மிக அருமையான ஜனங்களுடன் வாழ்ந்தேன் என்பதைக் குறித்து நான் மிக்க மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன். நான் தேவனுக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். என்றாவது ஒருநாள், ஆஜராகும்படி எனக்கு அழைப்பு வரும்போது, நான் இவ்விடம் விட்டு சென்று நான் செய்த கிரியைகளைச் சந்திக்க வேண்டும். அவையனைத்தும் தேவனுக்கு மகிமையும் கனத்தையும் கொண்டு வருபவைகளாயிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். 10. 5 11. அநேக காரியங்கள் உள்ளன. நான்... புத்தாண்டை மறக்க நாம் அணுகிக் கொண்டிருக்கிறோம். அவைகளை நான் மறக்க முடிந்தால் நலமாயிருக்கும். அவைகளைத் தவறுகளாக அவரிடம் அறிக்கை செய்துவிட்டேன், அவைகளை அவர் மறதி என்னும் கடலில் போட்டுவிட்டார் என்று அறிந்திருக்கிறேன். அவர் அதை இனி ஒருபோதும் நினைப்பதில்லை. இப்பொழுது பாருங்கள், நாம் அந்த விதமாக உண்டாக்கப்படவில்லை. நாம் எப்பொழுதும் அதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டேயிருப்போம். நாம் ஒருவரையொருவர் மன்னிக்கக் கூடும். ஆனால் நாம் அதை மறப்பதில்லை. ஏனெனில் நாம் வித்தியாசமாக உண்டாக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் தேவனுக்கோ அதை மன்னிக்கவும் மறக்கவும் முடியும். அது நடக்காதது போல் அதை துடைத்துவிட முடியும். பாருங்கள்? ஏனெனில் அவருக்கு மறதி என்னும் கடல் ஒன்றுண்டு, நமக்கோ அது கிடையாது. நாம் பாவம் செய்தோம் என்று தேவனுக்கு நினைவில் இல்லவே இல்லை என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். அதை சற்று எண்ணிப் பாருங்கள் பாடல் குழுவினரே, இளைஞர்களே, ஒருக்கால் அதைக் குறித்து என்ன? நாம் பாவம் செய்தோமென்று அவர் நினைவு கூருவதேயில்லை, பாருங்கள், அவர் முழுவதையும் மறந்து விட முடியும். அது அவருடைய ஞாபகத்துக்கு இனி ஒருபோதும் வராது. அது மிகவும் நல்ல செயல் அல்லவா? 12. 6 13. இது தமாஷ் பண்ணுவதற்கு இடமல்ல. எனக்கு தமாஷ் பண்ணுவதில் நம்பிக்கையில்லை... என் நண்பர் ஒருவர் என் நினைவுக்கு வருகிறார். அவர் இப்பொழுது மகிமைக்கு சென்றுவிட்டார். நகர்புறத்திலிருந்து நகரத்துக்கு தங்க வந்த தம்பதிகளைக் குறித்த ஒரு சிறு கதையை அவர் ஒருமுறை என்னிடம் கூறினார். அவர்களுக்கு ஒரு... இந்த இளம் தம்பதிகளுக்கு வயது சென்ற ஒரு தகப்பன் இருந்தார். அவர் உண்மையில் தேவனுக்காக அனல் கொண்டிருந்தார். அந்த இளம் பெண் (அது அவளுடைய தகப்பன்)... அவர்கள் சில உயர் வகுப்பு மக்களிடம் தொடர்பு கொண்டனர். உங்களுக்குத் தெரியும், இந்த விதமான உயர்தர விருந்தோம்பல் போன்றவை. ஒருநாள் அவள் தன் வீட்டில் இத்தகைய விருந்தோம்பலை ஒழுங்கு செய்திருந்தாள். 14. அவளுடைய தகப்பன் பகல் உணவிற்கு பிறகு, வேதாகமத்தை எடுத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்று சிறிது நேரம் படித்துக் கொண்டிருப்பார். அதன்பிறகு அவர் வேதாகமத்தை கீழே வைத்துவிட்டு, அழுது, கூச்சலிட்டு, கதறி, முழங்காலிலிருந்து எழுந்து, மூக்குக் கண்ணாடியைப் போட்டுக்கொண்டு, மறுபடியும் வேதாகமத்தை படிப்பார். அதில் ஏதாவதொன்றைக் கண்டு, அதை கீழே வைத்துவிட்டு, அழவும் கூச்சலிடவும் தொடங்குவார். அவள், “இது என் விருந்துக்கு இடையூறாக இருக்கும். எனவே நான் - நான் - நான்... அப்பாவைக் குறித்து ஏதாவதொன்று செய்ய வேண்டும். என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை'' என்று எண்ணினாள். அவள் அவரை மேல் மாடிக்கு அனுப்பிவிடுவதென்று முடிவு செய்தாள். 15. 7 16. அவள், “அவரிடம் வேதாகமத்தைக் கொடுக்கக் கூடாது. கொடுத்தால் மேல் மாடியிலும் அதையே செய்வார்'' என்று எண்ணினாள். எனவே அவள் பூகோள புத்தகம் ஒன்றைக் கொடுத்து, ''அப்பா, நாங்கள் விருந்துண்ணும் போது, நீங்கள் உலகப் படங்களை பார்த்துக் கொண்டிருங்கள்'' என்று சொல்லி அவரை மேலே அனுப்பிவிட்டாள். அவள் தொடர்ந்து ”எங்களுக்கு அதிக நேரம் பிடிக்காது. நாங்கள் கீழே... சிறிது நேரம் கழித்து கீழே வந்துவிடுங்கள். ஸ்திரீகள் உள்ள இடத்தில் உங்களுக்கு இருக்கப்பிடிக்காது என்று எனக்குத் தெரியும்'' என்றாள். 17. அவர், ''தேனே, பரவாயில்லை. நான் மேலே செல்கிறேன்'' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். 18. எனவே அவர்... அவள் அவருக்கு ஒரு விளக்கையும் ஒரு இடத்தையும் ஒழுங்குபடுத்திக் கொடுத்தாள். அவள், ''இத்துடன் தொல்லை முடிந்தது. அவர் படங்களைப் பார்த்து விட்டு, சிறிது பூகோளம் படிப்பார், அதன்பிறகு சிறிது நேரம் கழித்து அவர் கீழே இறங்கி வருவார். எல்லாம் சரியாகிவிடும்“ என்று எண்ணினாள். 19. 8 20. அவர்கள் 'பிங்க்' நிற எலுமிச்சை சாற்றைக் குடித்துக் கொண்டு, விருந்தை நடத்திக் கொண்டிருந்த நடுவில் சிறிது நேரம் கழித்து வீடு அதிர ஆரம்பித்தது. கிழவர் கூச்சலிட்டும் குதித்துக் கொண்டும் அறைக்குள் இங்கும் அங்கும் ஓடினார். அவள், ''அவருக்கு என்ன நேர்ந்தது? அவரிடம் வேதாகமம் இல்லையே... அவருக்கு எப்படியாவது வேதாகமம் கையில் கிடைத்திருக்கும்'' என்று எண்ணினாள். 21. அவள் படிக்கட்டுகளில் ஓடிச்சென்று, “அப்பா, நீங்கள் படிப்பது வேதாகமம் அல்ல, அது பூகோளப் புத்தகம்'' என்றாள். 22. அவர், “தேனே, எனக்குத் தெரியும். அன்றொரு நாள் நான் வேதாகமத்தில் இயேசு நம்முடைய பாவங்களை மறதி கடலில் போட்டுவிடுவதாகவும் அதை இனி ஒருபோதும் நினையாதிருப்பதாகவும் கூறியுள்ள பாகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். சில இடங்களில் அவர்கள் கடலின் கடையாந்தரங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்று இந்த பூகோளப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. சற்று யோசித்துப் பார். அது போய்க் கொண்டேயிருக்கிறது'' என்றார். 23. அது அவரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. எனவே நீங்கள் எங்கு பார்த்தாலும் தேவனைக் காணலாம். பாருங்கள், நீங்கள் சுற்றிலும் நோக்கினால், எல்லாமே அவரைக் குறித்து பேசும். 24. 9 25. நான் உண்மையாக இதைக் கூறுகிறேன். நான் சகோ. அவுட்லாவிடம், ''இந்தக் காலை வேளையில் நான் என்ன பேச வேண்டும்? உங்கள் கிறிஸ்துமஸ் செய்தியை பிரசங்கித்துவிட்டீர்களா?'' என்று கேட்டேன். 26. அவர், “ஆம்” என்றார். 27. ''உங்கள் புத்தாண்டு செய்தியை?'' என்று கேட்டேன். 28. “இல்லை” என்றார். 29. யாராகிலும் என்னைப் பேச அழைத்தால், என் புத்தாண்டு செய்தியை அளிப்பேன் என்று எண்ணி, அதற்கான சில குறிப்புகளை இங்கு எழுதி வைத்திருந்தேன். அடுத்த வாரம் அந்த செய்தியை அளிக்க நான் சகோ. அவுட்லாவுக்கு விட்டுவிடலாம் என்று எண்ணினேன். 30. கர்த்தருக்கு சித்தமானால், சில நிமிடங்கள் பேசுவதற்கென ஒரு சிறு பொருளைத் தெரிந்து கொள்ளலாமென்று எண்ணினேன். அவர் நம்மை ஆசீர்வதிப்பார் என்று நாம் நம்புகிறோம். இங்கு பேசும்படி என்னை அழைத்ததற்காக சகோ. அவுட்லாவுக்கும் இங்குள்ள சபையோருக்கும் நன்றி செலுத்த விரும்புகிறேன். நான்... சகோ. அவுட்லா கூறினதுபோல், ''எங்கள் நட்பு ஒரு போதும் வாடிப்போனதேயில்லை“. தேவனுடைய கிருபை எங்களை இம்மட்டும் காத்து வந்துள்ளது. பீனிக்ஸில் என்னை அழைத்து நான் வந்த முதல் சபை இதுவே. 31. 10 32. எனக்குத் தெரியும்... நான் இங்கு சகோ. ட்ரோவை நோக்கிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை... முன்னால் உட்கார்ந்திருப்பவர். அது சரிதானா, சகோ. ட்ரோ? அந்த சமயத்தில் அவரும் இங்கு இருந்தார் என்று நினைக்கிறேன். அந்த சமயத்தில் அவர் எனக்கு சில பொருட்களைக் கொடுத்தார். சிறு... அவர்கள் ஏதோ ஒன்றைக் கொண்டு அதை வார்க்கிறார்கள். இங்கு நீங்கள் வாழும் இடத்தில் கிடைக்கும் செம்பு உலோகத்தைக் கொண்டு நீங்கள் சுற்றிலும் பார்க்கும் போது... நாம் இவ்விடம் விட்டு கடந்து சென்று ஜனங்களைச் சந்திக்கப்போகும் அந்த காலை எவ்வாறிருக்குமென்று வியக்கிறேன்... அவர்கள் சொல்லுகின்றனர், “நல்லது, அங்கு...'' உங்களுக்குத் தெரியுமா, நாம் அப்பொழுது, இப்பொழுது உள்ளதைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமாகக் காணப்படுவோம். நாம்... அது உண்மை. நமக்கு பாவத்தின் அடையாளங்களோ வயோதிபத்தின் அடையாளங்களோ இருக்காது. நாம் பரிபூரணமாய் இருப்போம். ஓ, அந்த நாளுக்காக நான் ஆவலாய்க் காத்திருக்கிறேன். (நீங்களும் அல்லவா?). அப்பொழுது எல்லா தொல்லைகளும் நீங்கியிருக்கும். 33. 11 34. இப்பொழுது, தேவனிடமிருந்து ஒரு செய்தியை நான் பெற்றிருப்பதாக உணருகிறேன். நான்... நான் வித்தியாசமாக இருக்க விரும்பவில்லை, ஆனால் நான் உண்மையுள்ளவனாக இருக்கவேண்டும். நான் உறுதி கொண்டுள்ளவைகளை வெளியரங்கமாகப் பேசாமல் போனால், உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இருக்க முடியாது. ஏனெனில் அப்படி செய்யாவிட்டால் நான் ஒரு துரோகியாக, ஒரு மாய்மாலக்காரனாக இருப்பேன். அதைத் தவிர நான் வேறெதாவதாக இருக்க விரும்புகிறேன். ஒருக்கால் அதன் விளைவாக இவ்வுலகில் சில நண்பர்களை நான் இழக்க நேரிடலாம். ஆனால் நான் உறுதி கொண்டுள்ளவைகளுக்கு உண்மையாயிருக்க விரும்புகிறேன் - நான் சரியென்று கருதுபவைகளுக்கு. 35. 12 36. அநேக ஆண்டுகளுக்கு முன்பு, நான் தொடங்கினபோது அது மிக எளிதாயிருந்தது - அடையாளங்களும், செய்தியும், பிரசங்கமும், எல்லாவிடங்களிலும் விரித்த கரங்களுடன் ''வருக! வருக! வருக! வருக!'' என்று எனக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் பாருங்கள், தேவனிடத்திலிருந்து வந்த ஒவ்வொரு உண்மையான அடையாளத்துக்கும் ஒரு செய்தி, ஒரு சத்தம் உண்டு. பாருங்கள், அது அதை தொடர்ந்து வருகிறது. அப்படி இல்லையென்றால்... தேவன் அப்படிப்பட்ட ஒன்றை வேடிக்கைக்காக கொடுப்பதில்லை. அவர் சொல்லப் போவதற்கு கவனத்தைக் கவரவேண்டும் என்பதற்காகவே அவர் இப்படிப்பட்ட ஒன்றை அனுப்புகிறார். பாடற்குழு அருமையான பாடல்களை நமக்கு பாடின வண்ணமாக, அது என்ன செய்தது? வரப்போகும் செய்திக்கு ஜனங்களை அமரிக்கையாயிருக்கச் செய்தது. 37. அதைத்தான் ஒரு அடையாளமும் செய்கிறது. மோசே அடையாளங்களைப் பெற்றிருந்தான். அதைக் குறித்து அன்றிரவு நாம் பேசினோம். இந்த அடையாளங்களுக்கு சத்தங்கள் உள்ளன. மற்றும்... அந்த சத்தம் பேசினபோது... இயேசு வியாதியஸ்தர்களை சொஸ்தப்படுத்திக் கொண்டு சென்றார். அவர் பெரியவராயிருந்தார். ஆனால் பூமியிலிருந்த அந்த தீர்க்கதரிசிக்கு வேளை வந்தபோது... அவர்களுக்கு 400 ஆண்டுகளாக ஒரு தீர்க்கதரிசி இருக்கவில்லை. அவர் பூமியில் தோன்றி அற்புதங்களை செய்தார். அப்பொழுது அவர் அருமையானவராக இருந்து, எல்லோராலும் விரும்பப்பட்டு அழைக்கப்பட்டார். ஆனால் அந்த அடையாளத்தை தொடர்ந்து ஒரு செய்தி வந்தபோது (சத்தம்)... ஒருநாள் அவர் உட்கார்ந்து கொண்டு, “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்'' என்று கூறினபோது, ஓ என்னே! அது வித்தியாசமான ஒன்றாக இருந்தது. அது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. பாருங்கள்? 38. அது... நண்பர்களே, உலகம் அப்படித்தான் இருக்கிறது. பாருங்கள்? அவர்கள். அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற எதுவும் அவர்களுக்கு உதவியாயிருக்குமானால், பாருங்கள்... அவர்களை அது தொல்லைப்படுத்தாத வரைக்கும், அவர்கள் அதைக் கடைபிடிப்பார்கள். ஆனால் அவர்கள் தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வரும்போது, அப்பொழுது தான் தொல்லை ஏற்படுகிறது. 39. 13 40. பாருங்கள், நாம் ஒரு கட்டிடத்தைக் கட்டிக்கொண்டிருக்கிறோம், ஒரு சுவற்றை அல்ல. கட்டுபவர்கள் நேர் வரிசையில் கற்களை வைத்துக் கட்டிக்கொண்டு போகிறார்கள். அதை கட்டுபவன் எவனும் செய்யலாம். ஆனால் மூலையைத் திருப்பி கட்டுவதற்கு ஒரு சிறந்த கொத்தனார் அவசியம். பாருங்கள்? நீங்கள் மூலையைத் திருப்பிக் கட்டும் நேரத்தில்தான்... நீங்கள்... உண்மையில் சிறந்த கொத்தனாரா இல்லையா என்று தெரிந்துவிடும் - நீங்கள் மூலையைத் திருப்பிக் கட்டி, கட்டிடத்தின் மற்ற பாகங்களுடன் அதை தொடர்ச்சியாக அமைக்கும் போது மாத்திரமே. இந்த மூலைகளில்தான் தொல்லை ஏற்படுகிறது. கட்டுபவர்கள் நேர் வரிசையில் கட்டிக்கொண்டே போகப் பார்க்கிறார்கள். நாம் ஒரு சுவற்றைக் கட்டவில்லை, ஒரு கட்டிடத்தைக் கட்டுகிறோம். 41. இன்று காலை இதை நாம் அணுகும் போது, நீங்கள் எனக்காக ஜெபியுங்கள், நானும்... நான் எப்பொழுதும் உங்களுக்காக ஜெபிக்கிறேன். இப்பொழுது நாம் மகத்தான யேகோவா தேவனின் பிரசன்னத்தில் சிறிது நேரம் தலை வணங்குவோம். நமது குறைகளை நாம் உணருகிறோம் - நாம் எல்லோருமே அப்படி செய்கிறோம். தேவையில்லாதவர்கள் ஒருவரும் இங்கில்லை. நாம் ஜெபிக்கும் போது, யாருக்காகிலும் விசேஷித்த தேவைகள் உண்டா? 42. 14 43. உங்களுக்குத் தெரியுமா, முடிவற்ற தேவன், அன்றொரு நாள் இங்கு பீனிக்ஸில் நடந்த கூட்டத்தில் நான் கூறின வண்ணமாக... அது தொலைக்காட்சியைப் போல் வந்து கொண்டிருக்கிறது. கிறிஸ்து இப்பொழுது இந்தக் கட்டிடத்தில் இருக்கிறார். பாருங்கள், நீங்கள் ஒவ்வொரு முறை அசைக்கும் போதும், ஒவ்வொரு முறை கண் இமைக்கும் போதும், அது அழிந்துவிடுவதில்லை. அது காற்றிலுள்ள ஈதர் அலைகளில் உள்ளது. தொலைக்காட்சி அதை உற்பத்தி செய்வதில்லை. அது அந்த அலையை உங்களுக்காக பொறுக்கியெடுத்து அதை திரையில் காண்பிக்கிறது. அது எப்படியும் அங்குள்ளது. அது எப்பொழுதும் அங்கிருந்து வருகிறது. நீங்கள் அசைத்த ஒவ்வொரு அசைவும் உயிருடன் காற்றில் இருக்கிறது. எனவே நாம் நியாயத்தீர்ப்பில் எப்படி இருக்கப் போகிறோம் என்பதை உங்களால் காண முடிகிறதா? 44. எனவே, தேவனும் அதேவிதமாக இங்கிருக்கிறார். அவரை நாம் காண்பதில்லை - தொலைக்காட்சி படங்களை நாம் காண முடியாதது போல. அந்த சத்தத்தையும் படத்தையும் பொறுக்கி நமக்குத் திரையில் அளிக்க ஒரு குறிப்பிட்ட குழாய் அல்லது படிகம் (crystal) நமக்கவசியம். அது ஆதாம் இருந்த போதே பூமியில் இருந்தது. ஆனால் அது இருக்கும் இடத்தை இப்பொழுது தான் நாம் கண்டுபிடித்தோம். தேவன் இன்று காலை இங்கிருக்கிறார். இந்நாட்களில் ஒன்றில், ஆயிரம் வருட அரசாட்சியின் போது, அதை நாம் உணரப்போகிறோம். அது தொலைக்காட்சி போன்றவைகளைக் காட்டிலும் அதிக தத்ரூபமுள்ளதாய் இருக்கும் - அவர் இக்காலை இந்த கூட்டத்தில் இருந்தார் என்பது. 45. இப்பொழுது நாம் அதை மனதில் கொண்டவர்களாய், உங்கள் தேவைகளை உங்கள் இருதயத்தில் வைத்து, அவரிடம் உங்கள் கரங்களையுயர்த்துங்கள். அப்படி செய்வீர்களா? “ஆண்ட வரே...'' என்று சொல்லி உங்கள் இருதயத்தில் உங்கள் தேவைகளை நினைத்துக் கொள்ளுங்கள். 46. 15 47. பரலோகப் பிதாவே, இந்த ஒரு அணுகுமுறையை மாத்திரமே நாங்கள் பெற்றிருக்கிறோம், அது ஜெபத்தின் மூலமாகவே. நாங்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வருகிறோம். அந்த பெயரை உச்சரிக்கவும் எங்களுக்கு தகுதியில்லை. நாங்கள்... எந்த விதத்திலும் எங்களைத் தகுதியுள்ளவர்களாக நாங்கள் கருதவில்லை. அவ்வாறு செய்ய நாங்கள் அழைக்கப்பட்டிருக்கும் காரணத்தால் செய்கிறோம். அவர், ''என் நாமத்தினாலே நீங்கள் பிதாவை வேண்டிக் கொள்வதெதுவோ, அதை நான் உங்களுக்குச் செய்வேன்“ என்று கூறியுள்ளார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நாங்கள்... எங்கள் விசுவாசம் மாத்திரம், அதைக் கூறினது யாரென்றும், அது அவருடைய வார்த்தை என்றும் அறிந்து, அதன் பின்னால் நிற்குமானால், நாங்கள் கேட்பதைப் பெற்றுக் கொள்வோம் என்னும் நிச்சயமுடையவர்களாயிருக்கிறோம். ஒவ்வொரு விண்ணப்பத்தையும் நீர் கண்டீர். என் கரத்தையும் நீர் கண்டீர். என் விண்ணப்பத்தையும் நீர் அறிந்திருக்கிறீர். 48. பிதாவே, இவர்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் வேண்டிக் கொள்கிறேன். அவர்களுடைய தேவைகள் அனைத்துக்காகவும் கர்த்தாவே, இப்படிப்பட்ட ஒரு குழுவினர் தவறான எதையும் கேட்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன். அது உம்முடைய இராஜ்யம் பரம்புவதற்காக இருக்கலாம், அல்லது தங்கள் சொந்த சுகத்துக்காக இருக்கலாம். அப்படி செய்வதன் மூலம் அவர்கள் விரும்புகிறது என்னவெனில்... அல்லது நினைப்பது என்னவெனில், தேவனுடைய ராஜ்யத்தை அதன் மூலம் பரப்ப அவர்கள் விரும்புகின்றனர். 49. 16 50. தேவனே, ஒவ்வொரு விண்ணப்பமும் நிறைவேற்றப்பட வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இந்த சபையையும், அதன் போதகரையும், அதன் கூட்டாளிகளையும், டீகன்மார்களையும், தர்மக்கர்த்தாக்களையும், அதன் அங்கத்தினர் அனைவரையும் இங்கு விஜயம் செய்திருப்பவர்களையும், அந்நியரையும் ஆசீர்வதிப்பீராக. கர்த்தாவே, இவர்கள் அந்நியர் அல்ல. நாங்கள் அனைவரும் கிருபையினால் கிறிஸ்துவின் மூலம் உமது பிள்ளைகளே. இன்று காலை எங்களுக்கு நீர் ஜீவ அப்பத்தை அளித்து, எங்கள் விண்ணப்பங்கள் அருளப்பட்டன என்னும் உறுதியுடன் இங்கிருந்து நாங்கள் செல்ல வேண்டுமென்று ஜெபிக்கிறோம். 51. ஆண்டவரே, வார்த்தையை நான் படிக்கும் போது அதை ஆசீர்வதித்து தாரும். வார்த்தைக்கு அர்த்தம் உரைக்க எந்த மனிதனும் தகுதியுள்ளவன் அல்ல. சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய கரத்தில் புத்தகம் உள்ளதை யோவான் கண்டான். வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும், அந்த புத்தகத்தைப் பார்க்கக் கூட தகுதியுள்ளவர் எவருமே இருக்கவில்லை. ஆனால் மூப்பர்களில் ஒருவன் ''இதோ யூதா கோத்திரத்துச் சிங்கம் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். யோவான் சிங்கத்தைக் காண நோக்கின போது, அடிக்கப்பட்ட ஒரு ஆட்டுக்குட்டியை கண்டான். இரத்தம் தோய்ந்த ஒரு ஆட்டுக்குட்டி அந்த புத்தகத்தை வாங்கி, சிங்காசனத்தின்மேல் ஏறி உட்கார்ந்தது. வானத்திலிருந்த பிரபலமானவர் அனைவருமே தங்கள் கிரீடங்களை கழற்றி அவருக்கு முன்பாக வணங்கினர். அவர் பாத்திரர் என்பதை அறிந்திருந்தனர். 52. கர்த்தாவே, இக்காலை வேளையில் எங்கள் இருதயமாகிய சிங்காசனத்துக்கு அவர் வரவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். நீர் சிங்காசனத்துக்கு ஏறி எங்கள் ஒவ்வொரு சிந்தனையையும் ஆட்கொண்டு எங்களிடம் பேசி, அவரைக் குறித்தும், எங்கள் வாழ்க்கையில் அவர் கொண்டுள்ள திட்டத்தையும் நாங்கள் அதிகமாக அறிந்து கொள்ளும்படி செய்வீராக. இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 53. 17 54. இப்பொழுது, நீங்கள் வேதாகமத்தைத் திருப்ப விரும்பினால்... அந்த வேதபாகம் பரி. மத்தேயு 21-ம் அதிகாரத்தில் காணப்படுகிறது. நாம் தொடங்குவது... நாம் மத்தேயு 21-ம் அதிகாரத்தின் 10-ம் 11-ம் வசனங்களைப் படிக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் வீடு திரும்பின பிறகு, விடுமுறை நாட்களில், இதை நீங்கள் ஏற்கனவே செய்திராவிட்டால், இந்த முழு அதிகாரத்தையும் படிப்பது நல்லது - முக்கியமாக, இந்த காலத்திற்கும் பரிசுத்த ஆவியானவர் இன்று காலை என் மூலம் அளிப்பார் என்று நான் நம்பியிருக்கும் இந்த செய்தியுடன். 55. நாம் படிக்கும் போது 10-ம் வசனத்தைக் கவனியுங்கள், 11-ம் வசனத்தையும் கூட. 56. அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். 57. அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள். 58. மத். 21 :10-11 59. இப்பொழுது நாம் தேவன் தாமே வாசிக்கப்பட்ட வேத பாகமாகிய அவருடைய வார்த்தையுடன் இதன் சந்தர்ப்பத்தையும் கூட்டுவாராக. 60. 18 61. அது எந்த வேளை என்று நமக்குத் தெரியும். உங்களில் அநேகர் இந்த குறிப்பிட்ட அதிகாரத்தின் வசனங்களை நன்கு அறிந்திருக்கிறீர்கள். அது உண்மையில், கிறிஸ்து கழுதையின் மேலேறி எருசலேமுக்குள் பிரவேசித்த நாள். நாம்... அது ஒரு வெள்ளைக் கழுதை என்று புராதனக் கதை ஒன்று கூறுகிறது. அவருடைய இரண்டாம் வருகையின் போது அவர் ஒரு வெள்ளைக் குதிரையின் மேலேறி வருவதற்கு இது ஒரு முன்னடையாளமாகத் திகழ்ந்தது என்று எண்ணுகிறேன். அந்த நேரத்தில் அவர், “தாழ்மையுள்ளவராய், கழுதையின் மேல் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்'' என்று தீர்க்கதரிசி உரைத்தான் (சக. 9:9). அப்படித்தான் அவர் சுமை சுமக்கும் ஒரு சிறு கழுதையின் மேலேறி வந்தார். ஆனால் அடுத்த முறை அவர் மகிமையிலிருந்து வரும்போது (வெளிப்படுத்தல் 19-ம் அதிகாரம்), அவர் மகத்தான வெற்றி சிறந்தவராக வருவார். அவருடைய வஸ்திரம் இரத்தத்தில் தோய்க்கப்பட்டிருக்கும், அவர் வெள்ளைக் குதிரையின் மேலேறி வருவார். பரலோகத்திலுள்ள சேனைகள் வெள்ளைக் குதிரைகளின் மேலேறி அவரைப் பின் தொடர்ந்து வருவார்கள். புரானக் கதை (இது வேத வசனம் அல்லது வரலாறு கூறுவதல்ல)... அவர் எருசலேமுக்குள் வெள்ளைக் கழுதையின் மேலேறி பிரவேசித்ததாக புரானக் கதை ஒன்று கூறுகிறது. 62. 19 63. இப்பொழுது அந்த... இதை நான் தெரிந்து கொண்ட காரணம்... நாம் இன்னும்... ஏனெனில் நாம் நிழல்களில் கிறிஸ்துமஸ் காலத்திலும் புத்தாண்டு வரப்போகும் காலத்திலும் இருக்கிறோம். பழைய ஆண்டு முடிவடைந்து புத்தாண்டு தொடங்கப் போகிறது. இன்னும் சில நாட்களில் அநேகர் புது வாழ்க்கை தொடங்கி, புது காரியங்களைச் செய்து, புது பொருத்தனைகளை செய்து கொள்வார்கள். புத்தாண்டு தொடங்கவிருக்கிறது. இது கிறிஸ்துமஸைப்போல் எனக்கு தென்படவில்லை. ஏனென்று எனக்குத் தெரியவில்லை, இதை நான் “சாண்டாக்ளாஸ் தினம்” என்று அழைக்க விரும்புகிறேன் (பாருங்கள்?) ஏனெனில் உண்மையில் அதில் அதிகம்... 64. இது கிறிஸ்து பிறந்த நாளாக இருக்க முடியாது. முற்றிலுமாக இருக்கவே முடியாது. அவர் ஆட்டுக்குட்டியானதால், மார்ச்சு அல்லது ஏப்ரல் மாதத்தில் பிறந்திருக்க வேண்டும். அவர் ஆண் ஆடாக இருந்தார். எனவே அவர் ஆட்டுக்கடாவின் அடையாளமாகிய “ஏரிஸ்” (Aries) அடையாளத்தில் பிறந்திருக்க வேண்டும். அது அப்படித்தான் இருக்கவேண்டும், பாருங்கள். அது அப்படித்தான் இருக்கவேண்டும், பாருங்கள். ஆட்டுக்குட்டிகள் ஒரு போதும் டிசம்பர் மாதத்தில் பிறப்பதில்லை, அவை வசந்த காலத்தில் பிறக்கின்றன. வேறொரு காரியம் என்னவெனில், இப்பொழுது யூதேயா மலைகளில் இருபது அடி உயரத்துக்கு பனிக்கட்டி பெய்திருக்கும். அப்படியானால், மேய்ப்பர்கள் இக்காலத்தில் எவ்வாறு அங்கு இருந்திருக்க முடியும்? 65. 20 66. எனவே உண்மையில் அது ரோமக் கட்டு கதையிலிருந்து தோன்றினது. அது சூரிய பகவானின் பிறந்த நாள். சூரியன் கடந்து செல்லும்போது, பகல் நேரம் நீண்டு கொண்டே வந்து, இரவு நேரம் குறுகுகின்றது. ரோமக் கட்டுக் கதையின்படி சூரிய பகவானின் பிறந்த நாள் டிசம்பர் 20-க்கும் 25-க்கும் இடையே. அவர்களுடைய தெய்வங்கள்... அவர்கள் சூரிய பகவானின் பிறந்த நாளைக் கொண்டாடினார்கள். கான்ஸ்டன்டைன் அரசன் நாட்டின் சட்ட திட்டங்களையும் சபையின் சட்ட திட்டங்களையும் வகுத்துக் கொண்டிருந்த போது, ''இதை மாற்றிப் போடுவோம்'' என்று சொல்லி (அது எந்த நாள் என்று அறியாதபடியால்), “அதை சூரிய பகவானின் (sun-god's) பிறந்த நாளாக மாற்றிவிடுவோம்'' என்றான். பாருங்கள்? அவர் எந்த நாளில் பிறந்தார் என்று நமக்குத் தெரியாது. 67. ஆனால் இப்பொழுது, அவர்கள் கிறிஸ்துவை அதிலிருந்து அதிகமாக விலக்கி, முடிவில் அது எல்லாமே... சிலர் பரி. நிக்கோலாஸ் அல்லது க்ரிஸ்க்ரிங்கில் என்னும் பெயர் கொண்ட ஒருவர் வாழ்ந்ததாக கூறப்பட்டுள்ள ஜெர்மானிய கட்டுக் கதையை உள்ளே புகுத்திவிட்டனர். அது வெறும் கட்டுக்கதை, கிறிஸ்து அதில் இல்லவே இல்லை. 68. ஜனங்கள் விஸ்கி மதுவை வாங்குவதற்கும், சூதாட்டத்துக்கும் நாகரீகத்துக்கும் திரும்பிவிட்டனர். ஒரு மனிதன்... கிறிஸ்துமஸ் காலத்தின்போது தன் சரக்குகளை விற்கும் ஒரு வியாபாரி, ஏறக்குறைய அந்த ஆண்டு முழுவதும், கிறிஸ்துமஸின் போது அவன் சம்பாதித்த இலாபத்தைக் கொண்டு வாழ்ந்துவிடலாம். பாருங்கள்? அது அவ்வளவு பெரிய விடுமுறை, வர்த்தக ரீதியானது. தெருவிலுள்ள ஏழை பிள்ளைகள், அவர்களுடைய பெற்றோர் அவர்களிடம் வெகுமதிகளோடு செல்ல முடிவதில்லை - அவை சாண்டாக்ளாஸிடமிருந்து கிடைத்தது போல. இந்த பிள்ளைகள் அழுக்கான கைகளுடனும் சிவந்த கண்களுடனும் தெருக்களில் நடந்து செல்கின்றனர். அது வருவதைக் காண எனக்குப் பிடிக்கவில்லை. அது மன வேதனையும் தலைவலியும் அளிக்கும் ஒன்றாக இருப்பதற்கு பதிலாக, அது தேவனை ஆராதிக்கும் பயபக்தியுள்ள நாளாக இருக்க வேண்டும். அதில் கிறிஸ்துவைக் குறித்து ஒன்றுமேயில்லை. இருப்பினும் அதன் நடுவில் நாம் சிக்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். 69. 21 70. அன்று அவர்களிருந்த ஒரு சூழ்நிலையில் இன்று நாம் இருப்பதைக் காண்கிறோம். பாருங்கள், அவர் ஒரு பெரிய பண்டிகைக்கு வருகிறார். இயேசு பஸ்கா பண்டிகைக்கு வந்தார். அவர் எருசலேமுக்குள் பிரவேசித்துவிட்டார்... இல்லை, பிரவேசித்துக் கொண்டிருக்கிறார். அவரைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் நிறைவேற வேண்டும். வேதாகமத்திலுள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் உண்டு. நிறைய அர்த்தம் இல்லாமல் வேதாகமத்தில் ஒன்றுமே எழுதி வைக்கப்படவில்லை. 71. அன்றொரு இரவு நான் டூசானில், அது வேத பண்டிதர்களுக்குப் பதிலாக ஏன் மேய்ப்பர்களாக இருக்க வேண்டியதாயிருந்தது? என்பதன் பேரில் பேசினேன். அவர் தேவாலயத்தின் அருகில் பிறந்தார். பரிசுத்த ஆவியானவர் வனாந்தரத்துக்கு சென்று, வேத பண்டிதர்களையல்ல, மேய்ப்பர்களை தெரிந்து கொண்டார். அது அப்படித்தான் இருக்க வேண்டியதாயிருந்தது. வேத பண்டிதர்கள் அப்படிப்பட்ட ஒரு செய்தியை விசுவாசித்திருக்க மாட்டார்கள். எனவே அவர்கள்... அது மேய்ப்பர்களாய் இருக்க வேண்டியதாயிருந்தது. 72. சில ஆண்டுகளுக்கு முன்பு (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு), அது ஏன் சிறு பெத்லகேமாக இருக்க வேண்டியதாயிருந்தது? என்பதன் பேரில் இங்கு பேசினேன். கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த கிறிஸ்துமஸின்போது, அது ஏன் சாஸ்திரிகளாக இருக்க வேண்டியதாயிருந்தது? என்பதன் பேரில் பேசுவேன். இந்த 'ஏன்'களுக்கு பதில்கள் வேதாகமத்திலேயே உள்ளன. நாம் அற்புதமான காலத்தில், எல்லா காலங்களிலும் மிகப் பெரிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில், எந்த நேரத்திலும் காலம் என்பது முடிவடைந்து நித்தியம் அதனுடன் இணைந்து தொடர்ந்து செல்லக்கூடும். எல்லா தீர்க்கதரிசிகளும் ஞானதிருஷ்டிக்காரர்களும் அவர்கள் காலத்தில் இதை எதிர்நோக்கியிருந்தனர். நாம் ஒவ்வொரு மணி நேரமும் கவனமாக, அவருடைய வருகைக்காக விழிப்புடன் காத்திருக்க வேண்டும். 73. 22 74. முதலாம் கிறிஸ்துமஸின்போது அவர்கள் இருந்த நிலையிலே இப்பொழுது நாமிருப்பதைக் காண்கிறோம். உலகம் இப்பொழுது உடைந்து விழுந்து போகும் நிலையில் உள்ளது. ஒருமுறை எங்கோ ஓரிடத்தில் உலகம் விழுந்து போதல் என்னும் கிறிஸ்துமஸ் செய்தியை நான் பிரசங்கித்தேன். உலகம் மறுபடியும் சுக்கு நூறாக உடைந்து போகவிருக்கிறது. கலிபோர்னியாவில் ஏற்படும் பூமியதிர்ச்சிகளைப் பாருங்கள். கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கு முன்பு தேவன் அந்த இடத்தை தண்ணீரில் மூழ்கச் செய்வார் என்று நான் முன்னுரைக்கிறேன். ஹாலிவுட் லாஸ் ஏஞ்சலிஸ் போன்ற அங்குள்ள ஆபாசமான இடங்களை சர்வ வல்லமையுள்ள தேவன் மூழ்கச் செய்வார் என்று நான் நம்புகிறேன். அவை கடலின் அடிக்குள் செல்லும். அங்கு பாவம் நிறைந்துள்ளது, பாருங்கள், அது தடை. 75. நாகரீகம் சூரியனுடன் பிரயாணம் செய்துள்ளது. அது கிழக்கில் புறப்பட்டு மேற்கு நோக்கி சென்றது. இப்பொழுது அது மேற்கு கடற்கரையில் உள்ளது. அது மேலும் சென்றால், மறுபடியும் கிழக்குக்கு வந்துவிடும். எனவே அதுதான் தடை. பாவம் நாகரீகத்துடன் கூட பிரயாணம் செய்து, அது எல்லா காலங்களைக் காட்டிலும் சாக்கடை நீர் தேங்கும் ஸ்தலமாக இப்பொழுது உள்ளது. வேறெந்த காலத்திலுள்ள மானிடர் இப்படிப்பட்ட காரியத்தை நினைத்தும் கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஸ்திரீகள் தங்களை இவ்வளவு அசுத்தத்தில் ஆழ்த்திக் கொண்டுள்ளனர். இன்றைக்கு அவர்கள் செய்வது போல், வேறெந்த காலத்திலிருந்த ஸ்திரீ அதை நினைத்தும் கூட பார்த்திருக்கமாட்டாள். இவையெல்லாவற்றிற்குப் பிறகும், நம்மை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கிறோம். என்ன ஒரு அவமானம்! 76. 23 77. அந்த மகத்தான தீர்க்கதரிசி எழும்பி, “நான் தீர்க்கதரிசியல்ல, தீர்க்கதரிசியின் குமாரனுமல்ல, ஆனால்...'' என்று கூறினதில் வியப்பொன்றுமில்லை. அவன்: சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்? என்றான். (பாருங்கள்? ஏதாவதொன்று கூக்குரலிட வேண்டும்). 78. நாம் ஒரு முக்கியமான நேரத்தில் இருக்கிறோம். சபை, உண்மையான சபை (ஸ்தாபனமல்ல), உண்மையான சபை இதுவரை அதற்கு நிகழ்ந்ததைக் காட்டிலும் மிகச் சிறந்த வெற்றிக்கு இப்பொழுது ஆயத்தமாயுள்ளது. மணவாட்டியிடம் மணவாளன் வருகைக்கு. 79. நாம் பிரிந்து வந்து, நம்மை இரட்சிக்க, நம்மனைவரையும் இவையெல்லாவற்றினின்றும் விடுவிக்க, ஒரு மேசியாவுக்காக (அப்படி ஏதோ ஒன்றுக்காக காத்திருக்கிறோம்). நாம் காண்கிறோம், கிழக்கு பாகத்தில் நேரிடும் கலவரத்தை. நாம் ஆப்பிரிக்காவில் நடந்து கொண்டிருக்கும் கிளர்ச்சிகளையும், இன சம்பந்தமான பிரச்சினைகளையும், ஒருமைப்பாடு (Integration). ஒதுக்கீடு (Segregation) இவைகளைக் காண்கிறோம். அண்மையில் நமது கறுப்பு சகோதரர்களினிமித்தம் நாம் சந்தடி செய்து, கூச்சலிட்டு, ''நமக்கு ஒருமைப்பாடு அவசியம். அதுதான் நமக்கு அவசியம். நமக்கு ஒருமைப்பாடு அவசியம். மனிதர் அனைவரும் சமமானவர்கள், ஒவ்வொரு மனிதனும்...'' என்றோம். அது முற்றிலும் நல்லது, அது முற்றிலும் நல்லது. எனக்கு அடிமைத்தனத்தில் நம்பிக்கை கிடையாது. அந்த ஜனங்கள் தொடக்கத்தில் அடிமைகளாயிருக்கவில்லை. அவர்கள் அடிமைகள் அல்ல. 80. 24 81. தேவன் பிரித்தெடுப்பவர். நானும் கூட பிரித்தெடுக்கப்பட்டவன். எந்த கிறிஸ்தவனுமே பிரித்தெடுக்கப்பட்டவன். தேவன் தமது ஜனங்களை மற்றவர்களிடமிருந்து பிரித்தெடுக்கிறார். அவர்கள், அவர்கள் எக்காலத்தும் பிரித்தெடுக்கப்பட்டவர்களே. அவர் ஒரு தேசத்தை தெரிந்து கொண்டார். அவர் குறிப்பிட்ட ஜனங்களைத் தெரிந்து கொள்கிறார், அவர் பிரித்தெடுப்பவர். அவர் எல்லா தேசங்களையும் உண்டாக்கினார். இருப்பினும், உண்மையான கிறிஸ்தவன் எவனும் பிரித்தெடுக்கப்பட்டவனாயிருக்க வேண்டும். அவன் உலகத்தின் காரியங்களிலிருந்தும் மற்றவைகளிலிருந்தும் தன்னை வேறு பிரித்துக் கொண்டு, அந்த ஒரே நோக்கத்துக்கு இயேசு கிறிஸ்துவினிடம் வர வேண்டியவனாயிருக்கிறான். 82. அவர்கள் கூச்சலிடுகின்றனர். நான் அவர்களிடம், ''இது நமது நாட்டைக் காப்பாற்றாது. இது ஒரு அரசியல் திட்டம். இது கம்யூனிஸத்தை பின்னணியாகப் பெற்றுள்ளது“ என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். மார்டின் லூத்தர் கிங் தன் ஜனங்களை அவர்களுக்கு இதுவரைக்கும் நேரிடாத மிகப்பெரிய படுகொலைக்கு நடத்தப்போகிறாரென்பது என் கருத்து. அவர்கள்... பாருங்கள், அவர்கள் உலகத்தை ஒன்றாக இணைக்கப் போவதில்லை. நாம் அவர்களுக்கு ஒருமைப்பாட்டை கொடுத்தோம். ஆனால் இப்பொழுது அது முன்னைவிட மோசமாய் உள்ளது. பாருங்கள், அதுவல்ல... அதுவல்ல பிரச்சினை. ஒரே ஒரு காரியம் மாத்திரம் உண்டு, அது தான் தேவன். அவர்களுக்கு அது நிச்சயம் வேண்டாம். 83. அன்று அவர்கள் அவரை வேண்டாமென்று தள்ளினர். அவர்கள் பிரிந்து விழுந்தனர், அவர்களுடைய அரசியல் உடைந்து போனது, அவர்களுடைய நாடுகள் உடைந்தன, அவர்களுடைய சபைகள் உடைந்தன. அவர்கள் மேசியாவுக்காக கதறினர். அவர்களுக்கு அவர் தேவையாயிருந்தார். “ஓ, மேசியாவை அனுப்பும்” என்று அவர்கள் கதறினர். ஆனால் அவர் வந்த போதோ... 84. 25 85. தேவன் அளித்தார். அவர் உங்கள் ஜெபத்துக்கு பதில் அளிக்கிறார். நீங்கள் கேட்டீர்கள், ஆகையால் பெற்றுக் கொள்வீர்கள். அது... மனிதர்களும், ஸ்திரீகளும், கிறிஸ்தவர்களும் கூட, ஏதாவதொன்றிற்காக ஜெபித்து, தேவன் அதற்கு உத்தரவு அருளும் போது அதை அறிந்து கொள்வதும் கூட இல்லை. இதைக் குறித்து நான் மணிக்கணக்காக பேசிக் கொண்டே போகலாம். 86. இப்பொழுது, தேவன் அவர்களுக்கு பதில் அருளினார். அவர்கள் மேசியா வேண்டுமென்று கேட்டனர். அவர்களுக்கு ராயர்கள், தாவீதுகள், சாலொமோன்கள் (அந்த ஞானி), தாவீதுகள் (பராக்கிரமசாலிகள்) போன்ற எல்லா வகையினரும் இருந்தனர். ஆயினும் அவர்களுக்கு பரலோகத்திலிருந்து உதவி வரவேண்டுமென்று அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள்... தேவன் அவர்களுக்கு மேசியாவை வாக்களித்திருந்தார். அவர்கள் ஏறெடுத்த ஜெபத்துக்கு மாறுத்தரமாக அவர் அவர்களுக்கு மேசியாவை அனுப்பினார். ஆனால் அவர்களோ அவரை வேண்டாமென்று தள்ளினர். 87. 26 88. நான் வியக்கிறேன், “இன்றைக்கு, நம்முடைய ஜெபங்கள்...'' ஒரு பெரிய எழுப்புதலுக்காக ஜெபியுங்கள். இதற்காக ஜெபியுங்கள். பரிசுத்த ஆவி விழுவதற்காக ஜெபியுங்கள். ”ஒற்றுமைக்காக ஜெபியுங்கள்'' என்று அவர்கள் கூறக் கேட்டிருக்கிறீர்கள். தேவன் அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை அனுப்புவாரானால், அதை நாம் ஏற்றுக் கொள்வோமா என்று வியக்கிறேன். அவர் நமக்கு அனுப்புவதை நாம் ஏற்றுக் கொள்வோமா என்று வியக்கிறேன். பாருங்கள், அவர்... நாம் இவைகளுக்காக ஜெபிக்கும் காரணம்... அது தேவையென்று நாம் அறிந்திருப்பதால். ஆனால் தேவன் அதை அவர் விரும்பும் வழியில் அனுப்பும் போது, அது நம்முடைய சுவைக்கு ஏற்றவாறு இல்லை. எனவே அதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். அந்த நாளிலும் அது அப்படித்தான் இருந்தது. அவர்களுடைய விசுவாசத்தின் சுவைக்கு ஏற்றவாறு அவர் இல்லாததனால்... இன்றைக்கும் அவர்கள் அதே காரணத்தினால் அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஆகையால்தான் அவர்கள் 'இவர் யார்? வருகிற இந்த ஆள் யார்?' என்னும் கேள்வியைக் கேட்டனர். பாருங்கள், அது ஒரு பயங்கரமான காலம். ஓ, எல்லோருமே... இறுக்கத்தில் இருந்தனர். ஏதோ ஒன்று நடக்கவிருந்தது. 89. 27 90. இன்றைய உலகத்தைப் பாருங்கள், முழு உலகமும் எத்தகைய இறுக்கத்தில் வாழ்கிறதென்று. நீங்கள் தெருவில் செல்லும் போது... நீங்கள் காரோட்டி செல்வதும் கூட அபாயகரமானது. நான்கு வழிகொண்ட நெடுஞ்சாலையில் செல்வதும் கூட அபாயகரமானது. எல்லோருமே இறுக்கத்தில் இருக்கின்றனர்... என்ன நேர்ந்தது. நீங்கள் அமைதியான நிலையை அடைய வேண்டும். நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்? இதுதான் மனநிலை மருத்துவமனைகள் நிறையும்படி செய்கிறது. இதுதான் சபையை இப்படிப்பட்ட கலக்கத்துக்குள் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட காரியத்தை நோக்கி தலைதெறிக்க செல்கின்றனர். அவர்கள் நின்று, தேவனுடைய வார்த்தையையும் நாம் வாழும் நேரத்தையும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. எல்லாமே இறுக்கத்தில் உள்ளது. 91. 28 92. இப்பொழுது, நாம் அறிந்திருக்கிறோம். நமக்கு நன்றாகத் தெரியும். அண்மையில் இந்த பூமிக்கு பிரசவ வேதனை உண்டானது. இப்பொழுது சபை பிரசவ வேதனை அடைந்துள்ளது. அது பிரசவிப்பதற்கு முன்பு பிரசவ வேதனை அடையவேண்டும்... தீர்க்கதரிசிகள் ஒவ்வொருவரும் இவ்வுலகில் தோன்றினபோது, அது சபைக்கு பிரசவ வேதனையாக இருந்தது. உலகமானது முதலாம் மகாயுத்தம், இரண்டாம் உலக மகாயுத்தம் இவைகளின் வழியாய் கடந்து சென்று, இப்பொழுது மூன்றாம் உலக மகாயுத்தத்துக்கு ஆயத்தமாயுள்ளது. அது மறுபடியுமாக பிரசவ வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒருவர் மாத்திரமே சமாதானத்தைக் கொண்டு வரமுடியும். அவர் தான் கிறிஸ்து. 93. நம்முடைய திட்டங்கள் அனைத்தும், நம்முடைய கருத்துக்கள், நம்முடைய மத சம்பந்தமான அமைப்புகள், நம்முடைய அரசியல் அனைத்தும், நம்முடைய விஞ்ஞானம் அனைத்தும், எல்லாமே மூடத்தனம் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. இவையெல்லாவற்றிற்குப் பிறகும் நாம் தேவனிடம் இடைபட்டு நமக்கு உதவி செய்யுமாறு ஜெபிக்கிறோம். ''நீர் வந்து ஏதாவதொன்றை எங்களுக்குச் செய்யும் என்று முறையிடுகிறோம்“. அவர் அப்படி செய்யும் போது, அதை நாம் புரிந்துகொள்ள முடிகிறதா, அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா, அல்லது அதை நாம் சிந்தித்தாவது பார்க்கிறோமா என்று வியக்கிறேன். 94. 29 95. அந்நாட்களிலும் கூட இதுதான் நடந்தது. அவர்கள் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள், அவர்களுக்கு பலவகையான பெரிய தலைவர்கள் இருந்தனர். அவர்கள் அரசாங்கத்தின் கீழும், இராஜாக்களின் கீழும், எல்லாவற்றின் கீழும், நியாயாதிபதிகளின் கீழும் இருந்தனர். ஆனால் அவர்களை ஒன்றே ஒன்று தான் காப்பாற்ற முடியும், அதுதான் மேசியாவின் வருகை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். மேசியா என்றால் 'அபிஷேகம் பண்ணப்பட்டவர்' என்று பொருள் - அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு மானிடர். அப்படியானால் வார்த்தையினால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு மானிடர் - நமது மத்தியில் வார்த்தை மாம்சமானவர். அவர் வந்த போது, அவர்கள் விரும்பின சுவைக்கு ஏற்றவாறு அவர் இருக்கவில்லை, அவர்கள் பெற்றிருந்த சுவைக்கு ஏற்றவாறு அல்ல. அவர் அவ்விதமாக வரவில்லை. எனவே அவர்கள், ''இந்த ஆள் யார்? இந்த சந்தடியெல்லாம் என்ன?“ என்று கூச்சலிடத் தொடங்கினர். ஒரு கூட்டம் விவசாயிகள் வாசலினருகே குருத்தோலைகளை உடைத்து... 96. அவர்கள், “இவர்களை அதட்டும். இவர்கள் கூச்சலிட்டுக் கொண்டு இவ்விதமாய் போவது எங்களுக்கு பயத்தை விளைவிக்கிறது'' என்றனர். 97. அவரோ, “இவர்கள் பேசாமலிருந்தால் இந்த கல்லுகள் கூப்பிடும்'' என்றார். 98. 30 99. ஓ, காலம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது தீர்க்கதரிசனம் நிறைவேறிக் கொண்டிருந்தது வியப்பொன்றுமில்லை. ''சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்“? தேவன் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்? 100. “இல்லை, அவர் எங்கள் சுவைக்கு ஏற்றவாறு இல்லாமல் போனால்... நாங்கள் விரும்பின விதமாக அவர் இல்லாமல் போனால், அவர் எப்படி வருவாரென்று நினைத்திருந்தோமோ, அந்த விதமாக அவர் வராமல் போனால், அவரை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம். அப்படியானால் அவர்களுடைய கோட்பாடுகளே அவர்களை எழுதப்பட்ட வார்த்தையிலிருந்து அதிக தூரம் விலகும்படி செய்தது. அவர்கள் மிகவும் தூரமாயிருந்தபடியால், யார் வர வேண்டுமென்று அவர்கள் ஜெபித்தார்களோ, அவர் வந்தபோது, அவரை அடையாளம் கண்டுகொள்ளத் தவறினர். அவர்களுடைய சபைகள் அவர்கள் அதிக தூரம் விலகும் படி செய்திருந்த காரணத்தால், அவர்கள் யார் வரவேண்டுமென்று ஜெபித்தார்களோ, அவர் அவர்கள் நடுவில் இருந்தபோது, அது அவர்களுடைய சுவைக்கு ஏற்றவாறு இல்லாதிருந்த காரணத்தால், அவர்களால் அவரை விசுவாசிக்க முடியவில்லை. அவர்கள் அவரை விட்டு தூரம் செல்ல வேண்டியதாயிருந்தது. அவர்கள் அதை அகற்றினர். அவர்கள் நீங்கள் கிறிஸ்துவை சந்திக்கும் போது செய்யவேண்டியது ஒன்றே ஒன்று மாத்திரமே. அதாவது அவரை ஏற்றுக் கொள்ளவேண்டும், அல்லது அவரைப் புறக்கணிக்க வேண்டும். நீங்கள் நடுநிலை வகிக்க முடியாது. அப்படி நீங்கள் செய்யமுடியாது. அப்படி செய்ய உங்களால் கூடாது. அப்படித்தான் அது அமைந்துள்ளது. 101. 31 102. சற்று கவனியுங்கள், அவரை அந்நாளின் அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையாக அடையாளம் கண்டுகொண்டவர். எவ்வளவு சொற்ப பேர் என்று. பாருங்கள், ஆதியில் தேவன் அவர் முடிவற்றவராய் உள்ளதால், தொடக்கத்திலிருந்து எல்லாவற்றையும் அறிந்திருந்தார். இவை அனைத்துமே அவருடைய தன்மைகளை வெளிக் காட்டுபவைகளாய் உள்ளன. தன்மை என்பது... உங்களுக்கு ஒரு தன்மை உள்ளது. அது உங்கள் சிந்தனை. நீங்கள் ஏதாவதொன்றை சிந்திக்கிறீர்கள், பிறகு அதை பேசுகிறீர்கள், பிறகு அதை எடுத்துக் கொள்கிறீர்கள். அப்படித்தான் தேவன் இருக்கிறார். அவர் தொடக்கத்தில்... நீங்கள்... நீங்கள் எப்பொழுதாவது பரலோகத்தில் இருந்தீர்களானால் அல்லது இருப்பீர்களானால், நீங்கள் தொடக்கத்திலேயே பரலோகத்தில் இருந்தீர்கள். நீங்கள் தேவனுடைய ஒரு பாகமாயிருக்கிறீர்கள். நீங்கள் அவருடைய சிந்தனையாயிருந்தீர்கள். அவர் உங்கள் பெயரை அறிந்திருந்தார். ஒரு மூலக்கூறு, வெளிச்சம் இவை இருப்பதற்கு முன்பே நீங்கள் யாரென்பதை அவர் அறிந்திருந்தார். ஏதாவதொன்று இருப்பதற்கு முன்பே அவர் உங்களையும் உங்கள் பெயரையும் அறிந்திருந்தார். உலகம் உண்டாவதற்கு முன்னமே அவர் உங்கள் பெயரை ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதி வைத்தார். பாருங்கள், நீங்கள் அவருடைய சிந்தனையாயிருந்தீர்கள். அதன் பிறகு... நீங்கள் வார்த்தையானீர்கள். சிந்தனையை வெளிப்படையாக அறிவிப்பதே வார்த்தை. அப்பொழுது நீங்கள் வெளிப்படுகின்றீர்கள். 103. 32 104. அவர் அப்படித்தான் இருந்தார். அவர் ஆதியில் தனிமையில் இருந்தார். தேவன் தமது சிந்தனைகளுடன் தனிமையில் வாசம் செய்தார். அவர் மறுபடியும் அப்படி இருக்கப் போவதில்லை. ஏனெனில் அவருடைய சிந்தனைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆகையால்தான் நாம் இந்நாளில் இங்கிருக்கிறோம்... தேவன் வெளிப்பட்ட தமது சிந்தனைகளுடன் ஐக்கியம் கொண்டிருக்கிறார். பாருங்கள்? பார்த்தீர்களா? எனவே நீங்கள் கவலைப்படுகிறதினால் உங்கள் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்ட முடியாது (மத். 6:27). நீங்கள் இதை, அதை, மற்றதை செய்ய முடியாது. இரக்கம் செய்கிறவர் தேவனே. அது தேவன். ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்'' (யோவான் 6:37,44). அத்துடன் அது முடிவு பெறுகிறது. 105. 33 106. இப்பொழுது, சற்று கவனியுங்கள், அவர் நாட்களில் கோடிக் கணக்கானவர்களில், எவ்வளவு சொற்ப பேர் அவரை அறிந்து கொண்டனர். அவர் பூமியிலிருந்ததை மற்றவர்கள் அறியவும் கூட இல்லை. சற்று யோசித்துப் பாருங்கள், அன்றிருந்த... கோடிக்கணக்கானவர்கள் அதைக் குறித்து ஒன்றுமே அறியவில்லை. அந்த காலத்தில் இஸ்ரவேல் தேசத்தில் - பாலஸ்தீனாவில் இருபத்தைந்து லட்சம் இஸ்ரவேல் ஜனங்கள் இருந்தனர். அவர்களில் நூறில் ஒரு பாகம் கூட அதை அறியவேயில்லை என்பதை எண்ணிப் பார்க்கும் போது “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டு பிடிக்கிறவர்கள் சிலர்” (மத். 7:14) என்று அவர் சொன்னதில் வியப்பொன்றுமில்லை. எத்தனை பேர் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்! அது அவர்தான் என்பதை அவர்கள் அறியவில்லை. அவர்கள் அவரிருந்த இடத்தை சுற்றிலும் இருந்தனர். அதுதான் மிகவும் பரிதாபகரமான பாகம். 107. அவரோடு கூட நடந்து, அவரைத் தெருவில் கண்டவர்கள்... அவர் யாரென்பதை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் அவருக்கு மிகவும் இழிவான பெயர் கிடைக்க வேண்டுமென்பதை சாத்தான் கவனித்துக் கொண்டான். அவர் உலகத்தாரால் (மாம்சப் பிரகாரமான உலகத்தாரால்)... முறைதவறிப் பிறந்தவர் என்றழைக்கப்பட்டார் (ஏனெனில் மரியாளுக்கு யோசேப்புடன் விவாகமாவதற்கு முன்பே அவள் அவருக்குத் தாயானாள்). எனவே சாத்தான் அவருக்கு முறை தவறிப் பிறந்தவர் என்னும் பெயரைச் சூட்டினான். 108. 34 109. மறுபடியுமாக - அவர் தம் மிகுந்த வல்லமையுடன் வெளிப்படுத்துவதை சபை கண்டது. அவர் எதை வெளிப்படுத்தினார்? ஒரு கோட்பாட்டை அவர் வெளிப்படுத்தவில்லை! அவர் வார்த்தையை வெளிப்படுத்தினார். அவரே அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையாக இருந்தார். அது நடப்பதை அவர்கள் கண்டபோது (வெளிப்படுதலை, அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியா), அவர்கள் அதைப் புறக்கணித்தனர். அவர்கள் அதை வேண்டாமென்று தள்ளினர். அது அவர்களுடைய சுவைக்கு ஏற்றவாறு இருக்கவில்லை. அது பரிதாபகரமான பாகம். எத்தனை பேர்...? இதை சற்று யோசித்துப் பாருங்கள். மற்ற நாட்களில் இருந்தது போல. 110. பாருங்கள், ஒவ்வொருவரும் வார்த்தையின் தங்களுடைய சொந்த வியாக்கியானத்தை பெற்றிருந்தனர். ஆகையால்தான்... இஸ்ரவேலர் மோசேயை அடையாளம் கண்டுகொள்ளாததன் காரணம் அதுவே. ஆகையால்தான் உலகம் நோவாவை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஆகையால் தான் தீர்க்கதரிசிகள் அடையாளம் கண்டுகொள்ளப்படவில்லை. அவர்கள் வார்த்தையின் தங்கள் சொந்த வியாக்கியானத்தைப் பெற்றிருந்தனர். ஆனால் தேவன், ஒவ்வொரு காலத்திலும் தமது மேசியாவைக் கொண்டிருந்தார் (பாருங்கள்?) நோவாவின் செய்தியைப் புறக்கணிப்பது தேவனைப் புறக்கணிப்பதாகும். நோவாவைப் புறக்கணித்தல் அழிவை விளைவிக்கும். மோசேயைப் புறக்கணித்தல் அழிவை விளைவிக்கும். அது... அவர்கள் தங்கள் தங்கள் காலத்தில் அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியாக்களாக - அந்த காலத்திற்கென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையாக - விளங்கினர். இயேசு வந்தபோது, அவர் வார்த்தையின் பரிபூரணமாக இருந்தார். 111. தேவனே, மனித உருவில் அமைக்கப்பட்டு எலும்புகளும் மாம்சமும் கொண்டவராய் தோன்றினார் - அபிஷேகம் பண்ணப்பட்டவர். அவர்கள் அதை கண்டிருக்க வேண்டும். ஆனால் பாருங்கள், அவர்களுடைய சபை உலகம் இங்கே சேர்த்து அங்கே எடுத்துப்போட்டு, எல்லாவற்றையும் குழப்பிவிட்டு, முடிவில் அவர்கள் வார்த்தைக்குப் பதிலாக தங்கள் சபை கூறுவதை விசுவாசித்தனர். அவர்களுடைய சபை அபிஷேகம் பண்ணப்பட்டதை அவர்கள் கண்டபோது, ஏதோ பெரிய காரியம் நடக்கிறதென்று அவர்கள் எண்ணினர். ஆனால் வார்த்தை அபிஷேகம் பண்ணப்பட்டதை அவர்கள் கண்டபோது, அவர்கள், “அது மூடபக்தி வைராக்கியம். இந்த மனிதன் பெயல்செபூல், பிசாசு'' என்றனர். ஏனெனில் அது அவர்களுடைய சபைக்கு... சபை கோட்பாடுகளுக்கும் அவர்களுடைய செயல்களுக்கும் முற்றிலும் முரணாயிருந்தது. தீர்க்கதரிசி தோன்றின ஒவ்வொரு முறையும் சபை அந்த விதமான குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. 112. 35 113. தேவன் தமது நியாயப்பிரமாணங்களை அனுப்பி, அவர்களுக்கு ஒரு உடன்படிக்கையை கொடுத்தார். ஆனால் ஆசாரியன் அங்கு வந்து சிறிது எடுத்துப்போட்டு, சிறிது இங்கு சேர்த்து, இங்கு சிறிது எடுத்துப் போட்டு, அதிலிருந்து ஒரு கோட்பாட்டை உண்டாக்கிக் கொண்டான். அதன்பிறகு தேவன் எங்கோயிருந்து அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு மனிதனை, ஆவியின் வல்லமையைக் கொண்டவனாய் எழுப்பினார். அவன் எப்பொழுதும் ஆசாரியர்களாலும் ராஜாக்களாலும் பகைக்கப்பட்டான். கள்ளத் தீர்க்கதரிசிகள் மெல்லிய வஸ்திரம் தரித்தவர்களாய், ராஜாக்கள் ஆசாரியர் மத்தியில் தாழ்மையுடனும் மிருதுவாகவும் நடந்து, புகழைப் பெற்றுக் கொண்டிருந்தனர். அப்பொழுது, அவர்களுடைய ஸ்தாபனங்கள் எதையும் சேர்ந்திராத உண்மையான தீர்க்கதரிசி எங்கோயிருந்து புறப்பட்டு வந்தான். 114. தேவன் ஒரு ஆசாரியனைத் தெரிந்து கொண்டு அவனை தீர்க்கதரிசியாகச் செய்ததாக வேதத்தில் எங்குள்ளது? தேவன் எப்பொழுதாவது மதசம்பந்தமான ஒரு வேத பண்டிதனை (வேத சாஸ்திரத்தில் பயிற்சி பெற்றவனை) தெரிந்து கொண்டு அவனை தீர்க்கதரிசியாகச் செய்திருக்கிறாரா? அவர் அப்படி எந்த காலத்திலும் செய்ததாக எந்த வரலாற்றிலும் இல்லை. அவர் அப்படி ஒருக்காலும் செய்யவேயில்லை. அவர் அந்த முறைமையை விட்டு விலகி, அதை கொண்டு வரவேண்டும். அதைத்தான் அவர் இங்கு செய்தார். 115. 36 116. இயேசு யூதேயாவிலுள்ள பெத்லகேமில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தபோது, அவருக்கு எந்த நன்மதிப்பும் இருக்கவில்லை. அவர் யூதா கோத்திரத்தில் பிறந்தார் என்றும், அவருடைய தாயும் தகப்பனும் தாவீதின் வம்சத்தில் பிறந்தார்கள் என்று மாத்திரமே தெரியும். குடிமதிப்பு எழுதப்பட்ட அவர்கள் செல்ல வேண்டியதாயிற்று. அவர் வாலிபனாக... சபைகளை கிழித்துக் கொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பகைத்தனர். அந்த மனிதன் அற்புதங்களைச் செய்தார் என்பதை அவர்களால் மறுக்க முடியவில்லை. பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு, ''நசரேயனாகிய இயேசுவை தேவன் நிர்ணயித்திருந்து, அவரோடு கூட தேவன் இருக்கிறார் என்பதை நமக்கு வெளிப்படுத்தினார்'' என்றான். அவனுடைய வார்த்தையுடன் நான் ஒன்றையும் கூட்ட கருதவில்லை. ஆனால் அதை சிறிது தெளிவாக்க “அவர் நம்மோடு கூட இருந்த மாம்சத்தில் தோன்றிய தேவன். தேவன் நம்மோடு இருந்தார்.'' 117. 37 118. அன்றொரு இரவு இதை கூறினேன். மோசே அங்கு நின்று கொண்டு தன் கையை தன் இருதயத்தின் மேல் வைத்தான். அவன்... அது மோசேக்குள் இருந்த தேவன். அவர் (அவனுடைய இருதயத்தின் இரகசியங்களை அறிந்தவராய்) இதை குஷ்டரோகத்தால் வெண்மையாக்கினார். அதை மறுபடியுமாக தன் மார்பின் மேல் வைத்தபோது அதை சுகப்படுத்தி, அதை பரிசுத்த ஆவியாக நமக்கு மீண்டும் அளித்தார். அது பெந்தெகொஸ்தே நாளில் வேறொரு உருவில் வந்த தேவன். அதை நாம் புறக்கணிக்கிறோம். அது நமக்கு வேண்டாமென்று தள்ளிவிடுகிறோம். அப்படித்தான் அவர்கள் அன்று செய்தனர். ஒருக்கால் இன்றும் நாம் அப்படித்தான் செய்கிறோம். 119. 38 120. ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த வியாக்கியானத்தைக் கொண்டுள்ளதை நாம் காண்கிறோம். ஆகையால்தான் அது மிகவும் குழப்பமாயுள்ளது. ஆனால் இந்த வார்த்தையை தனிப்பட்ட விதத்தில் வியாக்கியானம் செய்யக்கூடாது என்று வேதம் கூறுகிறதென்று உங்களுக்குத் தெரியும். அதற்கு பிரஸ்பிடேரியன் வியாக்கியானம் தேவையில்லை. அதற்கு பாப்டிஸ்டு வியாக்கியானம் தேவையில்லை. அதற்கு பெந்தெகொஸ்தே வியாக்கியானம் தேவையில்லை. தேவனே தமது சொந்த வியாக்கியானி. அவர் அப்படி செய்வதாகக் கூறினார், அப்படியே செய்கிறார். அத்துடன் அது முடிவு பெறுகிறது. ஆகையால்தான் அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை அபிஷேகம் பண்ணப்பட்டுள்ளதைக் கண்டபோதிலும், அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பாருங்கள், ஏனெனில் அது அவர்களுடைய கோட்பாடுகளுக்கு முரணாயுள்ளது. 121. 39 122. மேசியா (அபிஷேகம் பண்ணப்பட்டவர்) காண்பதற்கு எப்படியிருப்பார், அவர் என்ன செய்வார் என்பதெல்லாம் அவர்களுடைய அறிவுக்கு எட்டாததாயிருந்தது. அவர் என்ன செய்வாரென்று அவர்களுக்கு வேதத்திலிருந்து படித்துக் காண்பித்த போதும், அவர்களால் அதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. இந்த சாஸ்திரிகள் பாபிலோனிலிருந்து வந்தபோது, அவர்கள் எருசலேமுக்கு ஒருவாறு வட கிழக்கில் இருந்தனர். அவர்கள் பார்த்தபோது, அந்த நட்சத்திரம் மேற்கு திசையில் வழி நடத்துகிறதைக் கண்டனர். அவர்கள் அதை இரண்டு ஆண்டுகளாக பின்பற்றி, டைக்ரீஸ் நதியைக் கடந்து, பள்ளத்தாக்குகளின் வழியாகவும் சிநேயார் தேசம் வழியாகவும் வந்து எல்லா மதங்களுக்கும் தலை நகராக விளங்கிய இடத்தை அடைந்தனர். உலகிலுள்ள மதங்கள் அனைத்திலும் மிகப் பெரியது எருசலேமின் தேவாலயத்தில் இருந்தது. அவர்கள் தெருக்களில் இங்கும் அங்கும் சென்று, ''அவர் எங்கே? யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?'' என்று கேட்டார்கள். அதைக் குறித்து யாருக்குமே ஒன்றும் தெரியவில்லை. அது விசித்திரமாயிருந்தது. 123. 40 124. அது சனகரீப் சங்கத்தையும் கலக்கினது... அவர்கள் அறிவாளிகளைக் கூப்பிட்டு, “வேதத்தைப் படித்து மேசியா எங்கு...'' என்றனர். 125. அவர்கள் சென்று வேத புத்தகத்தைக் கொண்டுவந்து, ''அங்கு... யூதேயா... யூதேயாவிலுள்ள பெத்லகேமே, நீ ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்படுவார்'' என்று மீகா எழுதி வைத்துள்ளதை படித்தார்கள் (மீகா 5:2). 126. பாருங்கள், அதை விசாரித்துப் பார்ப்பதற்கு பதிலாக, அவர்கள் அதை தூக்கி எறிந்துவிட்டு, ''அது மூடபக்தி வைராக்கியம்“ என்றனர். பாருங்கள்? ஆகையால் தான் மேய்ப்பர்கள் செய்தியைக் கொண்டு சென்றனர். பாருங்கள், அவர்களுக்கு... அவர்களுக்கு சொந்த வியாக்கியானம் உள்ளது, எனவே அவர்கள் உண்மையானதை இழந்து போகின்றனர். 127. 41 128. ஆனால் எப்பொழுதும் போல, அவர் வரும்போது, அவர் எப்படி வருவார் என்று வார்த்தை கூறியுள்ள அதே விதத்தில் வருகிறார். இன்று காலை நாம் தெரிந்து கொண்ட பொருளில், அவர் எவ்விதமாக வருவார் என்று வார்த்தை உரைத்துள்ளதோ, அதே விதமாக அவர் எருசலேம் நகரத்துக்குள் பிரவேசிக்கிறார். அவர்களோ, 'இவர் யார்?' என்று கேட்கிறார்கள். நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? அவர் யாரென்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இங்கே... வெளிப்புற உலகம் அல்ல, சபை உலகம், ''இவர் யார்? இவர் யார்?' என்று கேட்கிறது. அவர் எப்படி வருவாரென்று வேதம் வெளிப்படையாக கூறின பிறகும், அவர்கள், ''இவர் யார்? இந்த ஆள் யார்? ஏன் இந்த உணர்ச்சிவசப்படுதல் எல்லாம்? சத்தம் போடுவதை நிறுத்துங்கள். அது எங்களுக்கு பயத்தை விளைவிக்கிறது“ என்றனர். (உ, ஊ ). பாருங்கள்? அந்த... பாருங்கள்? அவர்கள் எதற்காக ஜெபித்தார்களோ, அது அவர்கள் அருகில் இருந்தது. அவர்களோ அதை அடையாளம் கண்டுகொள்ளாமல் போனார்கள். அவர் எப்படி வருவார் என்று வேதம் கூறியுள்ளதோ அதே விதமாக அவர் வந்தார். இன்றைக்கு அவர் வருவாரானால், வேதம் கூறியுள்ள விதமாகவே அவர் வருவார். அவர் எப்பொழுதும் தேவனுடைய வார்த்தையின் சுவையிலே வருவாரேயன்றி, அதைக் குறித்து ஏதோ ஒரு வேதபண்டிதன் கொண்டுள்ள கருத்தின் சுவையில் வரமாட்டார். 129. 42 130. தேவனுடைய வார்த்தை ஒருபோதும் வேத பண்டிதனிடத்தில் வரவில்லையென்று உங்களுக்குத் தெரியுமா? அது அப்படி வந்துள்ளதா என்று வேதத்தை ஆராய்ந்து பாருங்கள். வார்த்தை வேத பண்டிதர்களிடம் வருவதில்லை, ஒருபோதும் இல்லை. ஆனால் பாருங்கள், இன்று வார்த்தை வெளிப்படுமானால் - நமது நாளுக்கான வார்த்தை - அது தேவனுடைய வார்த்தையின் சுவையில் அமைந்திருக்கும், ஏதோ ஒருவரின் கருத்தின் சுவையில் அல்ல. தேவன் இந்நாளுக்கென வாக்களித்துள்ள தமது வார்த்தையை எடுத்து அதை அபிஷேகிப்பார். அது நிறைவேறும். அவ்வளவு தான். அதை நிறைவேறாமல் தடுக்க ஒரு வழியும் இல்லை. சபை என்ன கூறின போதிலும், மற்றவர்கள் என்ன விசுவாசித்தாலும், பண்ணப்பட்ட வார்த்தை அபிஷேகம் பண்ணப்பட்டுள்ளதைக் கண்டபோதிலும், அவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. பாருங்கள், ஏனெனில் அது அவர்களுடைய கோட்பாடுகளுக்கு முரணாயுள்ளது. அது நிறைவேறியே தீரும். அது... தேவன் அதை எப்படியும் நிறைவேற்றுவார். அதை அறிபவர் வெகு சிலரே. அது உண்மை, வெகு சிலரே. அது எப்பொழுதும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. 131. 43 132. பாருங்கள், தங்கள் சொந்த வியாக்கியானத்தைக் கொண்டு அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனெனில் அவர்கள், சபை அவர்களுக்கு கூறினதின் பேரில் சார்ந்திருந்தனர். ஆனால் அவர் வருவது... அவர் எப்பொழுதும் எப்படி வருகிறார் என்றால்... அன்றைக்கு அவர் வந்தது, அவர் ஒவ்வொருமுறை வரும்போதும், அவர் செய்யும் ஒவ்வொன்றும் வார்த்தையின் சுவையில் அமைந்திருக்கும். எனவே மற்றவர்கள் கூறுவதில் நாம் நம்பிக்கை கொள்ள முடியாது. நாம் நம்பிக்கை வைக்கக் கூடிய ஒன்றே ஒன்று, வார்த்தையாகும். வார்த்தை என்பது தேவன். வார்த்தை அபிஷேகம் பண்ணப்படும்போது அது மேசியாவைத் தோன்றச் செய்கிறது - அந்நேரத்துக்கான அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தை. எவ்வளவு அழகாயுள்ளது! அவர்கள் அதை இழந்தனர், வார்த்தையை. உண்மையான... அவர்கள்... வார்த்தை எப்பொழுதும் உண்மையாயுள்ளது. ஆனால் அவர்கள் அதற்கு அளித்த வியாக்கியானம் தான் தவறாயிருந்தது. 133. 44 134. நான் வியக்கிறேன், இன்று நாம் உலகில் காணும் மத சம்பந்தமான ஆலோசனை சங்கம், எல்லோரையும் ஒன்று சேர்த்து உருவாக்கியுள்ள உலக சபைகளின் ஆலோசனை சங்கம்... அவர்கள் உணருகிறார்களா என்று வியக்கிறேன். அதைத்தான் அவர்கள் செய்வார்கள் என்று வேதம் உரைக்கிறது. எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒன்றாயிருப்பதென்பது உலகிலே மிகவும் அற்புதமான செயல் என்று அவர்கள் எண்ணுகின்றனர். ''நாமெல்லாரும் ஒன்றாயிருக்க வேண்டுமென்று இயேசு ஜெபித்தார் என்று அவர்கள் கூறுகின்றனர். அது உண்மைதான். ஆனால் இந்த விதமாக ஒன்றாயிருக்க வேண்டுமென்றல்ல. 135. அவர், ''நானும் பிதாவும் ஒன்றாயிருப்பது போல நீங்கள் ஒன்றாயிருங்கள்“ என்றார். ஆம், அந்த விதமாக ஒன்றாயிருக்க அது எப்படி முடியும்? வார்த்தையும் நாமும் அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையாவதன் மூலமே. அதுதான் தேவன் ஒன்றாயிருத்தல். பாருங்கள், தேவன் ஒன்றாயிருப்பதென்பது வார்த்தை உங்களில் அபிஷேகம் பண்ணப்படுவதாகும். பாருங்கள்? அப்பொழுது நீங்கள் அந்த காலத்து குமாரன் (மேசியா) ஆகின்றீர்கள் 136. 45 137. ஜனங்கள் அதேவிதமாக இருக்கக் காண்கிறோம். அவர்கள் மாறவேயில்லை. இந்த ஜனங்கள் மூன்று பிரிவுகளாக பிரிந்திருந்தனர். அதை சில நிமிடங்கள் இப்பொழுது பார்ப்போம். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், நான் சிறிது நீண்ட நேரம் பிரசங்கம் செய்வேன் என்று நினைக்கிறேன். நான் மெள்ள பேசுபவன். நான் - நான் - நான்... எனக்குத் தெரியவில்லை. நான் உள்ளே சென்று வேத வாக்கியங்களையும் சிறு குறிப்புகளையும் எழுதிக் கொள்கிறேன். நான் மேடைக்கு வரும் போது, பரிசுத்த ஆவியானவர் ஒன்றை இறுகப் பற்றிக் கொள்கிறார். நான் - நான் - நான் - நான்... அதற்கு முடிவே இல்லாதது போல் தோன்றுகிறது. அது போய்க் கொண்டேயிருக்கிறது. இப்பொழுது, நம்முடைய பொருள். 138. 46 139. அவர்கள் மூன்று பிரிவுகளாக, மூன்று வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டவர்களாக பிரிந்திருந்தனர். சிலர் அவரை விசுவாசித்தனர், சிலர் அவரைப் பகைத்தனர், வேறு சிலருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 140. பாருங்கள்? நாமும் அதே விதமான பிரிவுகளைத் தான் கொண்டுள்ளோம். ஒருமுறை இந்த சபையில்: விசுவாசிகள், பாவனை விசுவாசிகள், அவிசுவாசிகள் என்பவர்களைக் குறித்து பிரசங்கம் செய்தேன் என்று நினைக்கிறேன். அந்த மூன்று பிரிவுகள். அவைகளை எங்கு பார்த்தாலும் காணலாம். இதுவும் மூன்று பிரிவுகளே. எப்பொழுதும் ஜனங்களின் நிலை அவ்வாறே இருந்து வந்துள்ளது என்பதை நாம் முன்காலத்துக்குச் சென்று அதை நிரூபிக்கலாம். அவர்கள் எப்பொழுதுமே அவ்விதமான நிலையில் இருந்து வந்துள்ளனர். 141. ஜனங்கள் அவ்வாறே இருந்து வந்துள்ளனர். என்பதை நாம் காணும் போது, தேவன் ஜனங்களை அந்த விதமாகவே படைத்துள்ளார் என்று நம்மை நினைக்கும்படி செய்கிறது. அவர் தமது சத்துருக்கள் தம்மை துதிக்கும்படி செய்வார். எல்லோருமே... பவுல் ரோமருக்கு எழுதின நிருபம் 8-ம் அதிகாரத்தில், “ஓ, மதிகேடனே, உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா? மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தை கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின் மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?'' என்கிறான் (ரோமர் 9: 20-21). அவர் இரவை உண்டாக்கவில்லையென்றால் எப்படியிருக்கும்? உனக்கு சூரிய வெளிச்சத்தின் அருமையை ரசிக்க முடியாது. எல்லாமே சூரிய வெளிச்சமாக இருந்திருக்குமானால், உனக்கு அதை ரசிக்கத் தெரிந்திருக்காது. வியாதியே இல்லாமல் போயிருந்தால் எப்படியிருந்திருக்கும்? ஆரோக்கியத்தின் அருமையை உனக்கு ரசிக்கத் தெரிந்திருக்காது. பொல்லாங்கானவர்களே இல்லையென்றால் எப்படியிருந்திருக்கும்? பொல்லாத பெண்கள்? ஒரு நல்ல பெண்மணியை நாம் கனப்படுத்தியிருக்க மாட்டோம். பாருங்கள்? அவர்கள்... அவளுக்கு கனம் செலுத்தப்பட்டிருக்காது. ஏனெனில் அது முழுக்க முழுக்க ஒரே மட்டமாக இருந்திருக்கும். ஆனால் அது முரண்பாடுகளின் விதி (Law of contrasts). 142. 47 143. தேவன் அவ்விதமாக உண்டாக்குகிறார்: கனமான பாண்டத்தை உயர்த்துவதற்கென கனவீனமான பாண்டத்தை. ஒன்று மிகுந்த தவறாக இருக்கும்போது, அது மற்றதை உயர்த்துகிறது... இல்லையென்றால், தவறானதே சரியானது போன்றிருக்கும். இல்லாமல் போயிருந்தால், கள்ள டாலர் இருந்திருக்க முடியாது. அப்பொழுது கள்ள டாலர்... தொடக்கத்திலே கள்ள டாலர் மாத்திரம் இருந்திருந்தால், அது உண்மையான டாலராக இருந்திருக்கும். ஆனால் அது போலி. இருக்க முடியாது... நீதி இல்லாமல் பாவம் இருக்கமுடியாது. நீதி என்பது சரியானது, பாவம் என்பது நீதி சீர்குலைதலாகும். வேறுவிதமாகக் கூறினால், உண்மை உண்மையே. ஆனால் முதலில் உண்மை இல்லாமல், பொய் பொய்யாகக் கருதப்படாது. உண்மையை சீர்குலைத்தால் பொய் உண்டாகிறது. எனவே பாவம் அனைத்துமே நீதி சீர்குலைந்ததால் உண்டானதேயன்றி வேறல்ல. எனவே, உலகில் ஒரு முறைமை உள்ளது. 144. 48 145. இரண்டு முறைமைகள். ஒன்று சரியான முறைமை, மற்றது சீர்குலைந்த முறைமை. ஒன்று தேவனுடைய வார்த்தை, அது சரியானது. ஒவ்வொரு மனிதனின் வார்த்தையும் பொய். இன்று நாம் பெற்றுள்ள ஸ்தாபன முறைமை, ஸ்தாபனங்களை ஒன்று சேர்த்து உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தை நிறுவி, மிருகத்தின் முத்திரையை உண்டாக்குவதென்பது தவறான காரியம். மனிதர் குருட்டுத்தனமாக அதற்குள் செல்கின்றனர். 146. அவர்களை அதிலிருந்து விடுவிக்க தேவன் பூமியில் ஒன்றை வைத்திருக்கிறார். ஆனால் அவர்களோ அது மூடபக்தி வைராக்கியம் என்று எண்ணுகின்றனர். அவர்களுக்கு அது வேண்டாம். அவர்கள் அதைப் புறக்கணிக்கின்றனர். அவர்கள் அதைக் குறித்து ஏதாவதொன்று செய்ய வேண்டுமென்று நினைக்கின்றனர். அவர்கள் தங்கள் சொந்த முறைமையை உண்டாக்கிக்கொள்ள வேண்டுமென்று எண்ணுகின்றனர். தேவன் ஏற்கனவே அவருடைய வார்த்தை என்னும் முறைமையை இங்கு வைத்திருக்கிறார். நமக்கோ அது வேண்டாம். எனவே அவர்கள் அன்றிருந்த நிலையிலே இன்று நாமிருப்பதைக் காண்கிறோம். 147. 49 148. ஜனங்கள் அந்த விதமாக இருக்க உண்டாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அறிந்தவர்களாய்... கவனியுங்கள், நீங்கள் கூறலாம்... நான் நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறேன் என்று எனக்குத் தெரியும். எனக்கு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கப் பிடிக்கவில்லை, அது எனக்கு பயத்தை உண்டாக்குகிறது. பாருங்கள்? 149. அரசியல். இப்பொழுது நாம். இதை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஜனங்கள் மூன்று வகுப்பினராக உண்டாக்கப்பட்டிருக்கிறார்களா என்று காண நாம் அரசியலை எடுத்துக் கொள்வோம். சிலர் ஒரு மனிதனை அதிகமாக ஆதரிக்கின்றனர். மற்றொரு வகுப்பினர் அவரை வெறுக்கின்றனர். இன்னும் மற்றொரு வகுப்பினருக்கு அவரைக் குறித்து என்ன செய்வதென்றே தெரியவில்லை. அது அவர்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. 150. இந்த சாரார், ''ஓ, அவர் பெரியவர். அவர் சிறந்த ஜனாதிபதியாயிருப்பார்'' என்கின்றனர். 151. மற்றொரு சாரார், 'அவர் துரோகியேயன்றி வேறல்ல'' என்கின்றனர். 152. இவ்விரு சாராருக்கும் இடையேயுள்ளவர், “எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை'' என்கின்றனர். பாருங்கள்? பாருங்கள், நாம் அந்த விதமாக உண்டாக்கப்பட்டிருக்கிறோம். மானிடர் அப்படித்தான் இருக்கின்றனர். தேவனுடைய மகத்தான திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அது அப்படித்தான் இருக்க வேண்டும். அவர் பூமியில் புரிய வேண்டிய சாதனைகளைப் புரிவதற்கென, மனிதன் அவ்விதம் உண்டாக்கப்பட வேண்டியதாயிருந்தது. ஒரு சாரார் சரியாயிருக்கின்றனர். வேறொரு சாரார் தவறாயுள்ளனர். மற்றவர் இவர்கள் இருவருக்கும் இடையே உள்ளனர். அது எப்பொழுதும் அவ்விதமாகவே இருந்து வந்துள்ளது. 153. 50 154. கவனியுங்கள், அவர்கள் செய்யும் ஒவ்வொரு முறையும் அவர்களுக்குத் தெரிவதில்லை... இடையேயுள்ள சாராருக்கு அது மோசமான இடம். ஏனெனில் ஒரு சாரார் விஷயத்தைக் காண்பித்து, அவர்கள் ஏன் அதை சரியென்று கருதுகின்றனர் என்று விளக்கம் கூறமுடியும். மற்ற சாராரும் கூட அவர்கள் ஏன் அதை தவறென்று கருதுகின்றனர் என்பதற்கு விளக்கம் கூறமுடியும். ஆனால் இடையேயுள்ள சாராருக்கு விஷயத்தைக் குறித்து ஒன்றுமே தெரியாது. அவர்களுக்கு எந்த பக்கம் திரும்புவதென்று தெரியாது. மார்க்க சம்பந்தமான விஷயத்திலும் அவ்வாறேயுள்ளது. ஜனங்கள் தாங்கள் சேரவேண்டிய நித்திய ஸ்தலத்தைக் குறித்தும் இன்று அதையே செய்து கொண்டிருக்கின்றனர். 155. நாங்கள் ஒரு நிமிடம் வேதனைப்படுத்தப் போகிறோம். அவர்கள் தங்கள் நித்திய ஸ்தலத்தைக் குறித்து அவ்வாறு செய்கின்றனர். ஒரு மனிதன் இங்குள்ள இடத்திற்கு செல்கிறான்... உணவு உண்பதற்கு. உங்கள் 'சூப்' பாத்திரத்தில் ஒரு சிலந்தியைக் காண்பீர்களானால், உணவு விடுதியின் மேல் நஷ்ட வழக்கு தொடுக்க நீங்கள் முனைவீர்கள். அந்த 'சூப்'பை நீங்கள் குடிக்க மாட்டீர்கள். அதில் விஷம் ஏறியிருக்கும். ஒரு கறப்பான் பூச்சியுடன் 'சூப்' கொதிக்க வைக்கப்பட்டிருந்தால், நீங்கள் அதை ஒருக்காலும் குடிக்கமாட்டீர்கள். அதை நினைத்தாலே உங்களுக்கு குமட்டல் உண்டாகும். இருப்பினும், ஒரு கூட்டம் வேத பண்டி தர்கள் உங்கள் தொண்டைக்குள் திணிப்பதை உங்களுக்கு விழுங்க ஆட்சேபனையில்லை. அது உங்களை தேவனிடமிருந்து கோடிக் கணக்கான மைல்கள் தூரம் அகற்றிவிடுகிறது. “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்'' உங்கள் ஆத்துமா அந்த சங்கிலியில் கட்டப்பட்டு நரகத்தின் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. நான் உங்களுக்கு முன்பு கூறியது போல், ”ஒரு சங்கிலி மிகவும் பலவீனமுள்ள பாகத்தில் மிகவும் பலமுள்ளதாயிருக்கிறது. அதன் ஒரு இணைப்பு அறுந்தாலும் கூட... அந்த ஒரு இணைப்பை நீங்கள் அறுத்துவிட்டால் போதும். அவ்வளவு தான். சங்கிலியின் மற்ற பாகம் கீழே விழுந்துவிடும். அதன் மிகுந்த பலவீனமுள்ள பாகம் எவ்வளவு பலமுள்ளதாயிருக்கிறதோ, அவ்வளவு பலமுடையதுதான் அது. 156. 51 157. இப்பொழுது... விஷமுள்ள சிலந்தி கொண்ட 'சூப்'பை குடித்தால் அது உங்களை வியாதிப்படுத்திவிடுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் மருத்துவமனைக்குச் சென்று உங்கள் வயிற்றைக் கழுவ வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். உங்களுக்கு அதிக தொல்லைகள் உண்டாகும். அது உங்கள் உயிரையும் கூட போக்கிவிடும். ஆனால், என்னை நீங்கள்... நீங்கள் அப்படிப்பட்ட இடத்திற்கு ஒருக்காலும் செல்லமாட்டீர்கள். நீங்கள் மறுபடியுமாக கதவை அடைத்து அந்த இடத்தை இருளாக்கமாட்டீர்கள். ஏனெனில் உங்களுக்கு விஷமேறி நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்னும் பயம் உங்களுக்கு இருக்கும். அப்படியிருக்க, நீங்கள் ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்து கொண்டு, ''அது உங்கள் சரீரத்தை அல்ல, உங்கள் ஆத்துமாவை நரகத்தில் அழிக்கவல்லது'' என்று வேதம் கூறியுள்ளதை நீங்கள் ஆதரித்து அதற்காக போராடுகின்றீர்கள். பாருங்கள்? ஜனங்கள் எவ்வளவு விசித்திரமாக நடந்து கொள்கின்றனர். அவர்கள் தாங்கள் செல்லும் நித்திய ஸ்தலத்தை ஏதோ ஒரு வேத சாஸ்திரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கின்றனர். நீங்கள் அவர்களிடம் வேதாகமத்தைக் கொண்டு வந்து, ''இதோ பாருங்கள், வேதாகமம் இவ்வாறு இங்கு உரைக்கிறது'' என்று கூறினால், 158. வேத பண்டிதன் அதை பார்த்துவிட்டு, “அது வேறொரு காலத்துக்குரியது'' என்கிறார். பாருங்கள்? நீங்களும் அதற்கு செவி கொடுக்கிறீர்கள். தேவன் என்ன கூறுகிறார் என்பதைதான் நீங்கள் காணவேண்டும். உண்மையான கிறிஸ்தவன் எவனும் வார்த்தைக்கு மாத்திரமே செவி கொடுக்கிறான், அவ்வளவுதான். தேவனுடைய மனிதன் அந்த அப்பத்தினாலே பிழைக்கிறான். 159. 52 160. கவனியுங்கள், சிலர் - சிலர் வார்த்தையை விசுவாசிக்கின்றனர். வேறு சிலர் ஸ்தாபன வியாக்கியானத்தை விசுவாசிக்கின்றனர். இன்னும் சிலர் குழப்பத்துக்குள்ளாகி, எதை விசுவாசிப்பதென்றே அவர்களுக்கு தெரியவில்லை. 161. சிலர், “ஓ, இந்த உலக சபைகளின் ஆலோசனை சங்கம், அது முக்கியமான ஒன்றாக இருக்கும். அது நம்மெல்லாரையும் ஒன்றாக இணைக்கும். ஓ, அது அதைத்தான் செய்யும் என்கின்றனர். 162. மற்றவர்கள், “ஓ, அது பிசாசினால் உண்டானது! இதோ அப்படி வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது என்கின்றனர். 163. ஜெபம் செய்து அது என்னவென்று தேடிக் கண்டுபிடிக்க நேரத்தை செலவழிக்காத மனிதன், “ஓ, அதை பெரிதுபடுத்தாமல் மறந்துவிடுங்கள்'' என்கிறான். (உ, ஊ ). மறந்துவிடுவதா? அது உன்... சகோதரனே, உன் அறிக்கை, நீ எடுத்துக்கொள்ளும் உன் நிலை, நீ நித்தியத்தை எங்கு கழிக்கப் போகிறாய் என்பதை தீர்மானிக்கும். அப்படி செய்யாதே! 164. 53 165. இப்படி ஏதாவதொன்று எழும்பும் போது, நாம் உட்கார்ந்து அதைக் குறித்து யோசித்துப் பார்க்க கடமைப்பட்டவர்களாயிருக்கிறோம். ஒரு கேள்வி எழும்போது... உதாரணமாக, இயேசுவின் நாட்களில், சபையானது, “ஓ, அவர் மதத் துரோகி. அவர் ஒன்றுமற்றவர்'' என்றனர். 166. ஆனால் அவர், “வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, நான் யாரென்று உரைப்பவைகளும் அவைகளே'' என்றார். 167. அப்படியானால் கிறிஸ்தவ ஸ்தானத்தைப் பெற்றுள்ள எந்த மனிதனும், ஸ்திரீயும், நித்தியத்துக்கு போகுமிடத்தைக் குறித்து சிரத்தை கொண்டுள்ள எவரும், வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து அவர் யாரென்பதை அறிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது ''இவர் யார்?'' என்னும் கேள்வி எழாமல், “இதோ அவர்!'' என்று அவர்கள் கூறுவார்கள். அதுதான் வித்தியாசம். பாருங்கள், அந்த மனிதர் அவ்வாறிருப்பதற்கென்றே நியமிக்கப்பட்டுள்ளனர். அதைக் கூறுவது கடினமாயுள்ளது, ஆனால் அது உண்மை. அது அதைக் காண்பிக்கிறது. பாருங்கள்? 168. 54 169. இன்றைக்கு சிலர், ''நான் வார்த்தையை விசுவாசிக்கிறேன். வசனமே சத்தியம். ஒவ்வொரு வசனமும் சத்தியம்'' என்கின்றனர். 170. மற்றவர், ''ஆ, எங்கள் போதகர்கள் சென்று, இந்த விதமாகப் படித்து... அதைக் குறித்து என்ன செய்ய வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும்'' என்கின்றனர். 171. வேறு சிலர், “நல்லது, எனக்குத் தெரியவில்லை. நான் சென்று இதை சேர்ந்து கொண்டேன். அது எனக்குப் பிடிக்கவில்லை. பிறகு நான் சென்று அதை சேர்ந்து கொண்டேன். நான் எதை சார்ந்திருக்க வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை'' என்கின்றனர். பாருங்கள்? அன்றும் கூட அதே விதமாகத்தான் இருந்தது, அதே விதமான கூட்டம். தொடக்கத்திலிருந்தே அது அப்படித்தான் இருந்து வந்துள்ளது. அது எப்பொழுதும் அப்படித்தான் இருக்கும். 172. 55 173. இந்த விஷயத்தில் வேத சத்தியம் என்னவென்று கண்டு, அது உண்மையாவென்று பார்ப்போம். இப்பொழுது சில நிமிடங்களுக்கு... ஆதாம்... ஆதியில், இப்பொழுது நாம் பெற்றுள்ள விதமாகவே அது தொடங்கினது. அது சிறிதேனும் மாறவில்லை. ஆதாம் ஒரு 'விசுவாசி' சாத்தான் ஒரு அவிசுவாசி அவன் வார்த்தையை விசுவாசிக்கவில்லை. எனவே அவன், அது சரியா இல்லையாவென்று 'நிச்சயமாக அறிந்திராத' ஏவாளை அடைந்தான். பாருங்கள், அவிசுவாசியாகிய சாத்தான்... ''நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்'' என்று தேவன் கூறியிருந்தார். 174. சாத்தான், ''அது உண்மையல்ல'' என்றான். பாருங்கள், அவன் அதை விசுவாசிக்கவில்லை. ஆதாம் அதை விசுவாசித்தான். எனவே இவை இரண்டிற்கும் இடையே இருந்தவளின் மூலம் சாத்தான் கிரியை செய்தான். அவர்களால் அதை சொல்ல முடியவில்லை... ஏவாளுக்கு வித்தியாசம் என்னவென்று சொல்ல முடியவில்லை. 175. 56 176. இப்பொழுது, கவனியுங்கள், இங்குள்ள ஸ்திரீ மணவாட்டி என்று அழைக்கப்படும் வருங்கால ஸ்தாபன சபைக்கு எடுத்துக் காட்டாயிருக்கிறாள். அதெல்லாம் ஆதியாகமத்தில் தொடங்குகிறது. அது ஒரு விதை. நீங்கள் ஆதியாகமத்தில் தொடங்குவீர்களானால், உங்களுக்கு சரியான காட்சி கிடைக்கும். பாருங்கள்? அவள் இந்நாளின் சபைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறாள். ஏனெனில் சிலர் சொல்லுகிறார்கள் (நாம் பிரஸ்பிடேரியன்கள், லூத்தரன்கள், இன்னும் மற்றவர் அனைவரையும் எடுத்துக் கொள்வோம்). அவர்கள் எல்லோரும் வருகின்றனர், இந்த வர்த்தகர் குழு போன்றவர். அவர்கள் வந்து, “நாங்கள் பெற விரும்புகிறோம். எங்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தேவை. அதை பெற்றுக் கொள்ள நாங்கள் விரும்புகிறோம்'' என்கின்றனர். 177. நாம் வாழும் நாளை உங்களால் உணர முடிகிறதா? பாருங்கள்? ஒருக்கால் அவர்கள் அதை பெறாமலே இருந்து விடலாம். உங்களுக்குத் தெரியுமா, “அந்த உறங்கும் கன்னிகைகள்...'' என்று இயேசு கூறினார் என்று? 178. இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், உறங்கும் கன்னிகைகள் எண்ணெயைப் பெற வருகின்றனர். அவர்கள் வெளியே இருக்கும்போது, அது முத்தரிக்கப்படுகிறது. அவள் அதைப் பெறவேயில்லை. அவள் பெற்றுக் கொள்ளவேயில்லை. மணவாட்டி சென்றுவிட்ட பின்பு, அவள் பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு, சபைகள் தங்கள் வழியிலேயே சென்று கொண்டிருக்கும், ஜனங்கள் இரட்சிக்கப்படுவதாக நினைத்துக் கொள்வார்கள், அவர்கள் எப்பொழுதும் செய்ததையே செய்து கொண்டிருப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நோவாவின் நாட்களில் நடந்தது போல, அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள் புசித்து, குடித்து, எப்பொழுதும் போல எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை, ஆனால் கதவு அடைபட்டிருந்தது. நண்பர்களே, கதவு எந்த நேரமும் அடைபடக் கூடும். ஒருக்கால் ஏற்கனவே அடைபட்டிருக்கலாம், நமக்குத் தெரியாது. 179. 57 180. ஒரு சிலர் மாத்திரமே உள்ளே பிரவேசிப்பார்கள். அது நமக்குத் தெரியும். நோவாவின் காலத்தில் நடந்தது போல (அப்பொழுது எட்டு பேர் மாத்திரமே காப்பாற்றப்பட்டார்கள்), “மனுஷ குமாரன் வருகையிலும் நடக்கும்''. சில ஆத்துமாக்கள் மாத்திரமே இரட்சிக்கப்படும். நான் எட்டு பேர் என்று சொல்லவில்லை. ஒருக்கால் அது எண்ணூறு பேராயிருக்கலாம் அல்லது... எத்தனை பேர் என்று எனக்குத் தெரியாது. எட்டாயிரம்... எனக்குத் தெரியவில்லை. எண்பது லட்சம்... நான்... 181. ஆனால் பாருங்கள், மணவாட்டி என்பவள் இப்பொழுது பூமியிலுள்ள சிறு குழுவை மாத்திரம் கொண்டவளாக இருக்கமாட்டாள். ஏழாம் ஜாமத்தில் அவர் வந்தபோது, அந்த கன்னிகைகள் அனைவரும் எழுந்து தங்கள் தீவட்டிகளை சுத்தப்படுத்தினர். முன் காலங்களில் இருந்தவர்கள், காலங்கள் தோறும் அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையை விசுவாசித்த ஒவ்வொருவரும் உயிரோடெழுவார்கள். கூர்நுனிக் கோபுரம் போல (கீழ்பாகம்), மேலே வருகின்றது. ஆனால் தலைக்கல் வந்து, எல்லாவற்றையும் சேர்த்து, கூர்நுனிக் கோபுரத்தை முழுமைப்படுத்தும். பாருங்கள், அவைகளை ஒன்று சேர்க்கும். மணவாட்டி என்பவள், காலங்கள் தோறும் விசுவாசித்து கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்களை கொண்டவளாக இருப்பாள். 182. 58 183. இப்பொழுது, ஏவாள் நிச்சயமுடையவளாய் இருக்கவில்லை. ஆதாம், அவளிடம், “தேனே, 'நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்' என்று தேவன் உரைத்திருக்கிறாரே'' என்றான். 184. ஆனால் அவர்கள் சொன்னார்கள்... சாத்தான், அது நிச்சயமாக உண்மையாயிருக்க முடியாது. பிதா தம் பிள்ளைகளை அப்படி நடத்துவாரென்றா நினைக்கிறாய்... அவர் அதை விளையாட்டுக்கு சொல்லியிருப்பார். நிச்சயமாக அது அப்படியல்ல'' என்றான். பாருங்கள்? 185. அவள் முடிவில் எதற்கு திரும்பினாள்? நிச்சயமாக என்பதற்கு சபையும் இன்று அதைதான் செய்து கொண்டிருக்கிறது. ''ஓ, நிச்சயமாக நாங்கள் ஒரு பெரிய சபை. நாங்கள் பெரியவர்கள். நாங்கள் நீண்ட காலமாக அவர்கள் கூறுவதெல்லாம் மூடபக்தி வைராக்கியம்... பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்று அவர்கள் அழைப்பதெல்லாம்... அது மூடத்தனம் பாருங்கள், அது... அப்படி ஒன்றும் கிடையாது. ஆ, நிச்சயமாக நான் தசம பாகம் செலுத்துகிறேன். நான் சபைக்கு செல்கிறேன். என் தாயார் அங்குதான் சென்றார்கள். நிச்சயமாக தேவன்... ஆனால் தேவன் வித்தியாசமாக கூறியுள்ளார்! (ஒலி நாடாவின் இரண்டாம் பக்கம் - ஆசி). பாருங்கள், இந்த லவோதிக்கேயாவைக் குறித்து, அது ஏற்கனவே முடிந்துவிட்டதென்று காண்பிக்க, அவள் ஏற்கனவே அங்கு முத்தரிக்கப்பட்டுவிட்டாள். கிறிஸ்து வெளியே இருக்கிறார். அவர் மறுபடியும் உள்ளே வருவாரென்று ஒருக்காலும் கூறவில்லை, உங்களுக்குத் தெரியுமா? எனவே இன்று நாம் காண்பது என்னவெனில், எப்பொழுதும் போல வார்த்தை வெளியே துரத்தப்பட்டுவிட்டது. 186. 59 187. இப்பொழுது, கவனியுங்கள், அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையாகிய மோசே... அல்லது நாம் அவனை இப்படி அழைக்கலாம்... அவன் மேசியாவாயிருந்தான் என்று நான் கூறினால் நீங்கள் புரிந்து கொள்வீர்களென நம்புகிறேன். அவன் அக்காலத்திற்கென்று வாக்களிக்கப்பட்ட அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையாயிருந்தான். மோசே அப்படியிருந்தான். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக. மேசியா என்னும் சொல் ''அபிஷேகம் பண்ணப்பட்டவன்'' என்னும் அர்த்தம் கொண்டது. பாருங்கள்? நோவா அவன் காலத்தில் அபிஷேகம் பண்ணப்பட்டவனாய் இருந்தான். ஆபிரகாமிடம் பேசி... இப்படி இருக்குமென்று... அவனுடைய ஜனங்கள் நானூறு ஆண்டுகள் அடிமைத்தனத்தில் சஞ்சரிப்பார்கள் என்றும், அவர் பலத்த கரத்துடன் அவர்களை வெளியே கொண்டு வருவார் என்றும், அவர் என்ன காண்பிப்பார் என்றும் அவருடைய அடையாளங்களையும் அற்புதங்களையும்... வரப்போகும் சந்ததிகளுக்கு அவர் என்ன செய்வாரென்றும் கூறப்பட்டது. மோசே அந்நாளின் அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையாக அங்கு நின்றான். ஆகையால்தான் அவனுடைய கரத்தை அவன் மார்பின் மேல் போட முடிந்தது. ஏன்? அவன் தேவனுடைய சமுகத்தில் நின்று கொண்டிருந்தான். 'ஆமென்' அவனைச் சுற்றிலும் ஷெகினா மகிமை இருந்தது. அவனுடைய அசைவு ஒவ்வொன்றும் தேவனுக்கு எடுத்துக்காட்டாய் இருந்தது. அங்குதான் சபை இன்று நின்று கொண்டிருக்க வேண்டும். உண்மை! ஆனால் அதற்கு பதிலாக நாம் கோபாவேசம் கொண்டு, ஏதோ ஸ்தாபன ஒன்றுக்குள் விலகி சென்றுள்ளோம். 188. 60 189. மோசே கவரப்பட்டு, ஒரு புறம் சென்றான். அங்கு முட்செடியில் அந்த அக்கினி ஸ்தம்பம் தொங்கிக் கொண்டிருந்தது. இதோ மோசே அபிஷேகம் பண்ணப்பட்டவனாய் நின்று கொண்டிருந்தான். அந்த மனிதனுக்கு, தான் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று தெரியவேயில்லை என்பதில் சந்தேகமேயில்லை. மேய்ப்பனின் கோலைத் தன் கையில் கொண்டவனாய் அவன் அங்கு நின்று கொண்டிருந்தபோது, அவனுக்கு அடையாளங்கள் கொடுக்கப்பட்டன. அது வனாந்தரத்திலிருந்த கோல் என்பதை அவன் அறிந்திருந்தான். அது சர்ப்பமாக மாறினது. அதன் பிறகு அது பாவப் பரிகாரமாக ஆனது. வனாந்தரத்தில் சர்ப்பம் அவ்வாறு ஆனது. அவன் செய்த அனைத்துமே... அடையாளங்களும் சத்தங்களும் ஜனங்களிடம் பேசின. பாருங்கள், ஏதோ ஒன்று அவனிடம் தொடர்பு கொண்டிருந்தது. ஒருக்கால் மோசே அதை அறியாமல் இருந்திருக்கக் கூடும். ஆனால் அவன் அந்நாளின் அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையாக இருந்தான். அவன் அபிஷேகம் பண்ணப்பட்ட செய்தியாளன். அவன் அந்நேரத்து செய்தியாளன் என்றால், அவன் அந்நேரத்து மேசியா. அவன் அபிஷேகம் பண்ணப்பட்டவனாயிருந்தான். 190. இப்பொழுது, அவனும் யோசுவாவும், காலேபும் அந்த கூட்டத்தில் விசுவாசிகளாயிருந்து (கவனியுங்கள்) மற்றவர்களுக்கு சத்தியத்தைப் போதிக்க முயன்றனர். ஆனால் பாருங்கள், சாத்தான் மற்றவர்கள் (தாத்தானும் கோராவும்) வனாந்தரத்தில் அழிந்து போகும்படி செய்தான். அங்கு நேர்ந்த தொல்லை என்ன? 191. 61 192. தேவன் மோசேயை அழைத்தார். அவனுக்கோ போகப் பிரியமில்லை. அந்த தீர்க்கதரிசிகள் அப்படிப்பட்ட காரியங்களை செய்ய வேண்டியதாயிருந்து, முடிவில் அவர்கள்... அதைச் செய்வது மிகவும் கடினம். அவர்கள் அங்கு சென்று பரியாசம் பண்ணப்பட விரும்பவில்லை. அவர்கள் சகோதரர்களான மற்றவர்களுடன் சேர்ந்து ஐக்கியங்கொண்டு, இப்படியாக சென்று கொண்டிருக்க விரும்பினர். ஆனால் பாருங்கள், இதுபோன்று... நான் நினைக்கிறேன்... இப்படி சொன்ன தீர்க்கதரிசி யாரென்று எனக்கு ஞாபகம் வரவில்லை. அவன், ''இதை நான் செய்யாமல் போனால்'' (வேறு விதமாகக் கூறினால்) “என் முழு இருதயமும் தீ பிடித்துவிடும். தேவன் உரைத்திருக்கிறார், அதை நான் சொல்லியாக வேண்டும்'' என்றான். அவர்களுக்கு ஏற்றுக்கொள்ள விருப்பம் இருந்தாலும், அவர்கள் அவனை சிலுவையில் அறைந்தாலும், அவனை அவர்கள் கல்லெறிந்தாலும், அவர்கள் என்ன செய்தாலும்... தேவன் அவன் இருதயத்தில் பேசினார், அவன் அதை உரைத்தே ஆக வேண்டும். வித்தியாசமாக இருக்கவேண்டும் என்றல்ல, ஆனால் கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காக. ''பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம்” (1சாமு. 15:22).பாருங்கள், அது அவன் இருதயத்தில் இருந்தது, அவன் அதை செய்தாக வேண்டும். அது அவன் ஜீவன். அதை அவனால் நிறுத்த முடியாது. ஏதோ ஒன்று, ஒரு துடிப்பு, அவனை உந்தித் தள்ளிற்று. அவர்களால் அதை ஆசீர்வதிக்கவோ அல்லது சபிக்கவோ முடியாது. தேவன் அவர்கள் மேல் முழு ஆதிக்கம் செலுத்தி, அவர்கள் அவருடைய சத்தமாகத் திகழ்ந்தனர் - அவர்களுடைய செய்கைகள். அல்லேலூயா! 193. அபிஷேகம் பண்ணப்பட்டு தேவனை முழுவதுமாக தங்களுக்குள் கொண்டவர்களாய், அவர்களுடைய ஒவ்வொரு செய்கையும் அசைவும் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக அமைந்திருந்து, அந்த ஷெகினா மகிமையில் நடந்து கொண்டிருக்கும் ஒரு சபையை எனக்குத் தாருங்கள். அப்பொழுது பூமியின் மேல் ஒரு மேசியா (தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்) நின்று கொண்டிருப்பதை உங்களுக்கு காண்பிப்பேன். 194. 62 195. ஷெகினா மகிமையைக் கொண்டிருந்த எரிகிற முட்செடியின் அருகில் மோசே நின்று கொண்டிருந்தான். அவன் அபிஷேகம் பண்ணப்பட்டவனாய் இங்கு நின்றுகொண்டு, தான் என்ன செய்கிறான் என்பதை அறியாமல் இருந்தான். அவன் சத்தம் கூறினதற்கு கீழ்ப்படிந்து கொண்டிருந்தான். ''உன் கையை மார்பிலே போடு. அதை வெளியே எடு. அந்த கோலை எடு. அதை சர்ப்பமாக மாற்று. அதை மறுபடியும் தரையிலே போடு.'' யார் என்ன கூறின போதிலும், அவன் அதை செய்தான். 196. அவன், “ஆண்டவரே, உமது மகிமையை எனக்குக் காண்பியும். நான் எகிப்துக்குப் போக ஆயத்தமாயிருக்கிறேன். நான் சிறந்த பேச்சாளன் அல்ல. எனக்கு சரியாக பேச வராது. உமது மகிமையை நான் காணும்படி செய்யும்'' என்றான். அவர் அதை அவனுக்குக் காண்பித்தார். அவன் எகிப்துக்கு சென்று, அவன் அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியா என்பதைக் காண்பிக்க, அவைகளையே கூடக்கொண்டு சென்றான். அவன் பூமியிலுள்ள புழுதியை கையிலெடுத்து ஆகாயத்தில் எறிந்த போது, பேன்களும் வண்டுகளும் புழுதியிலிருந்து பறந்து வந்து பூமியை நிரப்பின. தேவனைத் தவிர வேறு யார் சிருஷ்டிக்க முடியும்? அவன் நதியிலிருந்த தண்ணீரை மொண்டு கரையில் ஊற்றினான். எகிப்திலிருந்த ஒவ்வொரு துளி தண்ணீரும் இரத்தமாக மாறினது. தேவனைத் தவிர வேறு யார் அதை செய்ய முடியும்? அது என்ன? அவன் தேவனுடைய அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தைக்கு தன்னை முழுவதும் ஒப்புவித்த காரணத்தால், அவன் மேசியாவானான். 197. எகிப்தியர்கள் அதை இவ்விதம் புறக்கணிக்க முயன்றனர். அவிசுவாசிகள் அதை புறக்கணிக்க முயன்றனர். பாவனை விசுவாசிகள் தங்கள் திட்டங்களை முயன்று பார்த்தனர். ஆனால் தேவனுடைய வார்த்தை அவர்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு நேராக கொண்டு சென்றது. அது உண்மை. அவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தனர். அவர்கள்... அவன் மேசியாவாக இருந்தான். 198. 63 199. இப்பொழுது வனாந்தரத்தில் அந்த பிரச்சினை எழுகிறது. அங்குதான் அது கொண்டு வருகிறது... (பாருங்கள், இப்பொழுது, நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன், என் சகோதரரே). இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், இந்த ஜனங்கள் ஆசீர்வாதங்களை அனுபவித்தனர். அவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்ட இந்த தீர்க்கதரிசியின் பிரசங்கத்தைக் கேட்டு அனுபவித்தனர். அவர்கள் அவனை விசுவாசித்தனர். அவர்கள் அவனைப் பின்பற்றினர். ஆனால் வனாந்தரத்திலே தாத்தான் என்னும் பெயர் கொண்ட ஒருவனும், கோரா என்னும் பெயர் கொண்ட ஒருவனும் எழும்பினர். அவர்கள், ''இது ஒரு மனிதன் விவகாரமாக இருக்க வேண்டுமா என்ன? மோசே, அவன் ஒருவனை மாத்திரமே தேவன் அழைத்தார் என்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறான்'' என்றனர். 200. அந்த ஒரு - மனிதன் செய்தியை அவர்கள் வேண்டாமென்று தள்ளினர். இல்லை, அவர்கள் அதை விரும்பவில்லை. தேவன் ஒரு நேரத்தில் ஒரு மனிதனுடன் மாத்திரமே ஈடுபட்டுக்கொண்டு வந்தார். அது எப்பொழுதுமே ஒரு மனிதனின் செய்தியாயிருந்தது. அவர் எப்பொழுது ஒரு மனிதனைத் தவிர அதிக நபர்களுடன் ஈடுபட்டார்? அது தனிப்பட்ட நபர். அது ஒரு குழுவல்ல. நீங்கள் ஒவ்வொருவருமே தனிப்பட்ட விதத்தில் தேவனுக்கு உத்தரவாதமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள், “ஓ, அதை நான் விசுவாசிக்கிறேன்'' எனலாம். நீங்கள்... நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால், அதைக் கொண்டவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் அந்த எண்ணத்தைக் கொண்டவர்களாயிருக்கிறீர்கள். 201. 64 202. இங்கு ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றும், நான் விவாகம் செய்வதற்காக காத்துக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன் என்றும் வைத்துக் கொள்வோம். அவள் எல்லா வகையிலும் எனக்குத் தகுதியுள்ளவளாயிருக்கிறாள். அவள் அருமையான கிறிஸ்தவள். அவள் அவ்விதம் காணப்படுகிறாள், அவ்விதம் உடுத்துகிறாள், அவ்விதம் நடந்து கொள்கிறாள், அவ்விதம் வாழ்ந்து வருகிறாள். அவள் எனக்கு ஒரு நல்ல மனைவியாக அமைவாள் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அவளை என் மனைவியாக ஏற்றுக் கொள்ளும் வரைக்கும் அவள் என்னுடையவளாக ஆகமாட்டாள். செய்தியும் அவ்வாறே உள்ளது. நீங்கள் அதை ஆதரித்து அது சரியென்று கூறலாம். ஆனால் நீங்கள் அதன் பாகமாக வேண்டுமென்றால், அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். அப்பொழுது நீங்களும் செய்தியும் ஒன்றாகிவிடுகிறீர்கள். அப்பொழுது அபிஷேகம் மற்றவர்களுடன் தங்கியுள்ளது போல உங்களுடனும் தங்கியுள்ளது. 203. 65 204. இப்பொழுது, சாத்தான், அதை விசுவாசிக்கவில்லை. தாத்தான்... அவன் தாத்தானும் மற்றவர்களும் அதை விசுவாசிக்காதபடி செய்து, அவர்கள் எல்லோரும் அழிந்து போகக் காரணமாயிருந்தான். 205. நீங்கள், ''ஒரு நிமிடம் பொறும், சகோ. பிரன்ஹாமே. நீங்கள் மூன்று பேர் என்று கூறினீர்கள்: மோசே, யோசுவா, காலேப் என்று'' எனலாம். அது முற்றிலும் உண்மை. அது அப்படித்தான் இருந்தது. ஆனால் இங்கு இரண்டு பேர் என்கிறீர்களே. இங்கு நீங்கள்...'' 206. நீங்கள், “இயற்கைக்கு மேம்பட்ட சாத்தான்'' என்கிறீர்கள். ஆனால் இயற்கைக்கு மேம்பட்ட தேவனும் அங்கிருந்து, இந்த மூன்று பேர்களையும் அபிஷேகம் பண்ணினார். சாத்தான் அபிஷேகம் பண்ணின வேறொருவன் வருகிறான், சில நிமிடங்கள் பொறுத்திருங்கள். அவன் காட்சியில் வருகிறான். அவனுடைய பெயர் பிலேயாம். அவன் பணத்தின் மேல் ஆசை கொண்டிருந்த தீர்க்கதரிசி (தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்டவன்), கள்ளத் தீர்க்கதரிசி. 207. 66 208. எப்பொழுதுமே எல்லாவிதமான தீர்க்கதரிசிகளும் இருந்து வந்துள்ளனர். இஸ்ரவேல் ஜனங்களுடன் வெவ்வேறு வகையான தீர்க்கதரிசிகள் இருந்து வந்துள்ளனர். முகஸ்துதி செய்யும், எதையும் ஆணித்தரமாக கூறாத தீர்க்கதரிசிகள்... ராஜாவின் நன்மதிப்பையும் ஆதரவையும் பெற வேண்டுமென்று காலங்கழித்தவர்கள்... சரி, ஆகாபுக்கு இருந்த நானூறு தீர்க்கதரிசிகளைப் போல், எல்லாருமே தங்கள் மத சம்பந்தமான பாணியில் உடுத்தியிருந்தவர்கள். அவன் உங்களிடம் சொன்னான்... யோசபாத்திடம் அந்த மகத்தான ராஜா, ''என்னிடம் நன்கு பயிற்சி பெற்ற நானூறு எபிரெய தீர்க்கதரிசிகள் உள்ளனர்'' என்றான். 209. அவர்கள் எல்லோரும் அங்கு வந்து தீர்க்கதரிசனம் உரைத்தனர். ஆனால் அது தவறென்று அறிந்து கொள்ள யோசபாத் தேவனை தனக்குள் போதிய அளவில் பெற்றிருந்தான். ஏனெனில் எலியா அந்த ராஜாவை சபித்தான் என்று அவனுக்குத் தெரியும். தேவன் சபித்ததை எப்படி ஆசீர்வதிக்க முடியும்? அவரால் முடியாது. அவன், ''நாம் விசாரித்து அறிய வேறு யாராகிலும் இருக்கிறானா?'' என்று கேட்டான். 210. ஆகாப், ''ஆம், ஒருவன் இருக்கிறான். அவன் இம்லாவின் குமாரனாகிய மிகாயா. அவனை நான் வெறுக்கிறேன். அவன் எப்பொழுதுமே என்னில் குற்றம் கண்டுபிடித்து எனக்கு பொல்லாப்பை கூறுகிறவன்'' என்றான். சிங்கம் எப்படி கெர்ச்சிக்காமல் இருக்கமுடியும்... தேவன் பேசிவிட்டார். யார் சத்தியத்தைக் கூறாமல் இருக்கமுடியும்? அது தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருந்தபோது, அவன் அதை சபித்தே ஆகவேண்டும். அவர்கள் எப்பொழுதுமே இந்த கள்ளத் தீர்க்கதரிசிகளைக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் உண்மையான தீர்க்கதரிசிகளையும் கொண்டிருந்தனர். ஞாபகம் கொள்ளுங்கள், அவர்கள் அநேகம் பேர்களாய் இருக்கவில்லை, ஒருவன் மாத்திரமே இருந்தான். எக்காலத்திலும் அது அவ்வாறே இருந்து வந்துள்ளது. இன்றைக்கும் அது அவ்வாறேயுள்ளது. 211. 67 212. ஒவ்வொரு காலத்தின் தீர்க்கதரிசியும் இந்த வார்த்தையாயிருக்கிறான். அது உண்மை. இந்த காலத்தின் தீர்க்கதரிசியும் கூட நாம் பெற்றுள்ள வெவ்வேறு தீர்க்கதரிசிகள் அல்ல... ஒரு மெதோடிஸ்டு தீர்க்கதரிசி, ஒரு பாப்டிஸ்டு தீர்க்கதரிசி, ஒரு பெந்தெகொஸ்தே தீர்க்கதரிசி, இவ்வாறு விதவிதமான தீர்க்கதரிசிகள் நாடு முழுவதிலும் உள்ளனர். ஆயினும் ஒரு உண்மையான தீர்க்கதரிசி - நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறவர் - இருக்கிறார். அது உண்மை. இயேசு கிறிஸ்து! அவர் வார்த்தையாயிருக்கிறார். அது உண்மை. அவர் வார்த்தையாயிருக்கிறார்: இக்காலத்தின் அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தை. 213. 68 214. நாம் இவ்வாறு பயணம் செய்து கொண்டு போகும்போது, அவரை கவனியுங்கள். நாம் காண்கிறோம், யோசுவாவும் காலேபும்... அதன் பிறகு கூலிக்கு அமர்த்தப்பட்ட பிலேயாம் இங்கு வருகிறான். அவன் என்ன செய்தான்? தேவன் அவனுக்கு வார்த்தையை எடுத்துக் காண்பித்த பிறகும், அவன் ஒவ்வொரு வார்த்தையையும் மீறிச் சென்றான். அவன் இன்றைய ஸ்தாபனத்துக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறான். இன்னும் சில நிமிடங்களில் அதை நாம் காண்பிப்போம் (தாத்தான் என்னவாய் இருந்தான் என்றும் மற்றவர்கள் என்னவாய் இருந்தனர் என்றும்). பிலேயாம் ஸ்தாபனத்துக்கு எடுத்துக்காட்டாய் விளங்கினான். அவன் அதை செய்திருக்கக் கூடாது... அவன் அதைக் காட்டிலும் அதிகமாக அறிந்திருக்க வேண்டியவன். அது தவறென்று அவன் அறிந்திருந்தான். இருப்பினும் அதன்பிறகு அவன் என்ன செய்தான்? தேவன் அவனை எச்சரித்தார். இருப்பினும் அவன் எச்சரிப்பை மீறிச் சென்றான். அவன் பணத்தையும் புகழையும் அதிகமாக விரும்பினதால், அவர்களைச் சேர்ந்திருந்தான். இன்றைக்கு சபைகளும் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன. அவை உலக சபைகளின் ஆலோசனை சங்கத்துக்குள் பிரவேசித்துக் கொண்டிருக்கின்றன. எச்சரிப்பின் சத்தம் ஒவ்வொன்றாக, அடையாளங்கள் அற்புதங்கள் இவையாவும், இந்தக் கடைசி நாட்களில் நாடு முழுவதும் முழங்கிக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் அவர்கள் அதற்குள் பிரவேசித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் காட்டிலும் மனிதருடைய புகழை அதிகமாக விரும்புகின்றனர். 215. 69 216. எனக்கு ஒரு நல் நண்பர் இருக்கிறார். அவர் பெந்தெகொஸ்தேகாரர். அவர் ஜனங்களிடம் இந்த செய்தியைப் பிரசங்கித்து, சபைகளை ஒன்றாக இணைக்க முயன்று வருகிறார். அவர், ''நாம் இந்த மத சம்பந்தமான அசைவுக்குள் வரவேண்டும்'' என்று சொல்லி வருகிறார். ஏன், அவர்களில் சிலர்... கிறிஸ்துவின் சபை, கன்னிகை பிறப்பிலும் இன்னும் அநேக போதகங்களிலும் நம்பிக்கையில்லாத அநேக ஸ்தாபனங்கள் அதை சேர்ந்துள்ளன. இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய எப்படி ஒருமித்து நடந்து போக முடியும்? முன்பு இதற்கு 'ஆமென்' என்று கூறினீர்கள், இப்பொழுது என்ன கூறுவீர்களோ என்று வியக்கிறேன். ஒரு மனிதன் தன்னைக் கிறிஸ்தவன் என்றும் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டவன் என்றும் கூறிக்கொண்டு, வார்த்தை நேற்றும் இன்றும் என்றும் மாறாத்தாயுள்ளது என்பதை எப்படி மறுதலிக்க முடியும்? உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவி ஒவ்வொரு வார்த்தைக்கும் ''ஆமென், ஆமென், ஆமென்'' என்று சொல்லி ஆமோதம் தெரிவிக்கும். வார்த்தை ஒன்றைக் கூறினால் நீங்கள், ''அது சத்தியம், 'ஆமென்' என்பீர்கள். அது... ஏனெனில் நீங்கள் வார்த்தையுடன் இணங்கியிருக்கிறீர்கள். நீங்கள் தேவனுடன் இணங்கியிருக்கிறீர்கள். நீங்களும் தேவனும் ஒன்றாயிருக்கிறீர்கள். தேவன் உங்களுக்குள் இருக்கிறார். நீங்கள் அவருடைய குமாரன் அல்லது குமாரத்தியாயிருந்து, அவருக்காக மேசியாவாக இருந்து, அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தை உங்களுக்குள் வாழ்ந்து தன்னை வெளிப்படுத்துகிறதாயுள்ளது. 217. 70 218. கவனியுங்கள், பிலேயாம் இவைகளை மீறிச் சென்றான். அவன் ஒரு பூரண ஸ்தாபனமாக, அவர்களுடைய சுவைக்கு பூரண பதிலாக இருந்தான். அதுதான் தாத்தானுக்கு தேவையாயிருந்தது. அதுதான் கோராவுக்கு தேவையாயிருந்தது. அவர்கள் அதிலிருந்து ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்க விழைந்தனர். அவர்கள், ''எங்களுக்கு இங்கு எல்லாவிடங்களிலும் பரிசுத்த மனிதர் இருக்கின்றனர்'' என்றனர். 219. இரண்டு பேர் எவ்வளவு நன்றாக ஒருமித்து நடந்து போனாலும் எனக்குக் கவலையில்லை, அவர்களிடையே கருத்து வேற்றுமை இருக்கத்தான் செய்யும். நமது மூக்குகள் ஒன்றாக இல்லை. நமது கைவிரல் ரேகைகள் ஒன்றாக இல்லை. நம்முடைய காரியங்கள் எத்தனையோ... இருப்பினும் நாம் ஒருவருக்கொருவர் இரத்த தானம் செய்ய முடிகிறது, இரட்டை பிள்ளைகளுக்கு இடையேயும் கூட வித்தியாசம் உள்ளது. ஆகையால், பாருங்கள். தேவன் அந்த அசைவுக்குள் ஒருவனை தெரிந்து கொள்கிறார், மற்றவன் அதை விசுவாசிக்கிறான். 220. 71 221. அவர் முதலில் ஒரு மனிதனை உண்டாக்கினார். அந்த ஒரு மனிதனிலிருந்து பல மனிதர்களை உண்டாக்கினார். ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறது போல், கிறிஸ்துவுக்குள் எல்லோரும் பிழைக்கிறார்கள். அவன் மரணத்துக்கான ஒரு வழியை உண்டாக்கினான். அவர்கள் எல்லோரும் அதற்குள் நடந்தார்கள். அவர் ஜீவனுக்கான ஒரு வழியை உண்டாக்கினபோது, பலர் அதற்குள் நடந்து ஜீவனைப் பெறுகின்றனர். ஒரு மனிதனின் மூலமாக - ஒரு டஜன் மனிதர் அல்ல - மரணம் பிரவேசித்தது. அதற்கு ஒரு டஜன் மனிதர் பாவம் செய்ய வேண்டிய அவசியமிருக்கவில்லை. ஒரு மனிதன் ஒரு பாவத்தை செய்தான். ஒரு மனிதர் அதற்கான தண்டனையை ஏற்றுக் கொண்டார். நீங்கள் இனி ஒருபோதும் முழங்காலில் நடந்து சென்று, மரியாளே வாழ்க போன்றவைகளை உச்சரித்து, மரித்தவர்களின் புகழைப் பாட வேண்டிய அவசியமில்லை. தேவனுடைய ஈவு இலவசமாகக் கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காக இயேசு மரித்தார். ஆனால் பாருங்கள், நாமோ அதற்காக வேறெதாவதொன்றைக் கூற விரும்புகிறோம். 222. 72 223. இதை இப்பொழுது கவனியுங்கள். இந்த மனிதர் மோசேயிடம் நடந்து சென்று, “இந்த கூட்டத்தில் நீ ஒருவன் மாத்திரமே இருப்பதாக உன்னை பாவித்துக்கொள்ள முயல்கிறாய். நீ ஒருவன் மாத்திரமே இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறாய்'' என்றனர். 224. மோசேக்கு அவர்கள் நிமித்தம் களைப்பு ஏற்பட்டது. அவன் திரும்பி சென்று, “பிதாவே...'' என்றான். 225. அவர், ''அவர்களிடமிருந்து பிரிந்து வா. நான் - நான் - நான்...'' என்றார். 226. அப்பொழுது மோசே, “தேவனுடைய பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாரும் இங்கு வாருங்கள்” என்றான். தேவன் பூமியைப் பிளந்து அவர்களை விழுங்கிப்போட்டார். அது சரியா? அதை யோசித்துப் பார், சகோதரனே (ஓ என்னே). அவர்கள் ஏன் அவனை விசுவாசிக்கவில்லை? அவர்கள் ஏன் இந்த மோசே தேவனால் நியமிக்கப்பட்ட தலைவன் என்று விசுவாசிக்கவில்லை? அவர்கள் ஏன் அவனோடு வாதாடினர்? தேவனுடைய கரத்தை அவர்கள் கண்டு அக்கினி ஸ்தம்பத்தின் கீழ் அவர்கள் சென்ற போதிலும், எப்பொழுதும் முறுமுறுத்துக் கொண்டும் குற்றம் சொல்லிக் கொண்டுமிருந்தனர். மோசே. மோசே அவருடைய அபிஷேகம் பெற்ற மேசியா என்பதை நிரூபித்திருந்தார். பாருங்கள்? அதன் பிறகும் அவர்கள்... பாருங்கள், அவர்களுடைய இருதயத்தில் அவர்கள் வித்தியாசமான ஒன்றை விரும்பினர். 227. 73 228. பெந்தெகொஸ்தேகாரரே, உங்களுக்கு என்ன நேர்ந்தது? சில ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஸ்தாபனம் என்றழைக்கப்படும் குழப்பத்தை விட்டு வெளிவந்து பெந்தெகொஸ்தேகாரராக ஆனீர்கள். நீங்கள் ஏன் அதற்கே திரும்பிச் செல்ல விரும்பினீர்கள்? உமி வரவேண்டியதாயிருந்தது (அப்பொழுது தானியம் இன்னும் தோன்றவில்லை). பாருங்கள்? கவனியுங்கள், அவர்கள் அப்படித் தான் செய்தனர். அது அவர்கள் இருதயத்தில் இருந்தது. அவர்கள் அதை செய்ய வேண்டியதாயிருந்தது. 229. இப்பொழுது, பாருங்கள், அவர்கள் அனைவரும் அதிலிருந்து ஒரு பெரிய மதத்தை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று தாத்தான் எண்ணம் கொண்டிருந்தான். உங்களுக்குத் தெரியுமா, அப்போஸ்தலனாகிய பேதுருவும் கூட மறுரூப மலையின்மேல் அதே எண்ணமுடையவனாயிருந்தான். அவன், ''இங்கு நாம் மூன்று கூடாரங்களைப் போடுவோம், ஒன்று மோசேக்கு - நியாயப்பிரமாணத்துக்கு, ஒன்று தீர்க்கதரிசிகளுக்கு, ஒன்று...'' என்றான். 230. அவன் இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்த போது, ஒரு சத்தம் உண்டாகி, ''இவர் என்னுடைய நேசக்குமாரன், இவருக்குச் செவி கொடுங்கள்“ என்றுரைத்தது. அவர்கள் பார்த்தபோது, இயேசுவை மாத்திரம் கண்டனர். அவர் அங்கு நின்று கொண்டிருந்தார். அவர் வார்த்தையாயிருந்தார். நீங்கள் செவிகொடுக்க வேண்டியது அந்த வார்த்தைக்கு மாத்திரமே. எந்த காலத்திலும் அது அவரே. இந்த காலத்தில் வார்த்தை என்ன சொல்லுகிறது என்பதை கண்டு, தேவன் அதை அபிஷேகிப்பதை கவனித்து, அதனுடன் செல்லுங்கள். அவ்வளவுதான். 231. 74 232. அவர்கள் அக்கினி ஸ்தம்பத்தை பின்தொடர்ந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைந்தனர். அதை வழிநெடுக பின் தொடர்ந்தவர்கள் அந்த தேசத்தை அடைந்தனர், மற்றவர்களோ அழிந்து போயினர். கவனியுங்கள், அவர்கள் வார்த்தையுடன் உலகம் கலந்திருக்க விரும்பினர். அது அவர்கள் தவறு செய்யக் காரணமாயிருந்தது. அது அவர்களுக்கு என்ன செய்ததென்று கவனியுங்கள். வார்த்தை... அவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையை ஏற்றுக் கொள்ளாததனால் அதை இழந்து போயினர். பாருங்கள், கள்ள நாணயம் இருக்கவேண்டும். முதலில் உங்களிடம் உண்மையான நாணயம் இருந்தால் மாத்திரமே அதிலிருந்து கள்ள நாணயம் உண்டாக்க முடியும். அவர்கள் கள்ள நாணயத்தைப் பெற்றிருந்தனர். தேவன் அதனுடன் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பதை காண்பித்தார். 233. 75 234. வார்த்தை அவர்களுக்கு உறுதிப்பட்டதன் மூலம், அது எவ்வளவு பூரணமாக அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது என்பதை சிந்தித்துப் பாருங்கள். மோசே தீர்க்கதரிசனம் உரைத்ததெல்லாம் நிறைவேறி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு அவர்களைக் கொண்டு செல்ல அவன் அழைக்கப்பட்டான் என்பதை அது உறுதிப்படுத்தினது. மோசே தீர்க்கதரிசனம் உரைத்த அனைத்தும் அங்கேயே நிறைவேறினது. அதில் ஒரு வார்த்தை கூட தவறவில்லை. நீங்கள் வனாந்தரத்தில் நடந்து கொண்டிருந்தீர்கள் என்பதை அறிந்திருப்பது எவ்வளவு பெரிய சிலாக்கியமாக இருந்திருக்கும். மற்றும் அங்கே, அதற்கு பிறகு... அவன் அவர்களிடம் செய்தியை உரைத்தபோது, அவர்கள் அதை முதலில் விசுவாசிக்க வேண்டியதாயிருந்தது. அவன் அவர்களை வெளியே கொண்டு வந்தபிறகு தேவன், ''நீ வனாந்தரத்தில் சந்தித்த அக்கினி ஸ்தம்பம் நானே என்பதை அவர்களுக்கு நிரூபித்துக் காண்பிப்பேன்'' என்றார். 235. எனவே அவர், ''அவர்கள் எல்லோரையும் மலையடிவாரத்தில் கூடி வரும்படி செய்'' என்றார். அவர் சீனாய் மலையின் மேல் இறங்கி வந்து இடி முழக்கமிட்டார். 236. அப்பொழுது ஜனங்கள், ''தேவன் எங்களோடு பேச வேண்டாம். மோசே எங்களோடு பேசட்டும். அவர் பேச வேண்டாம்...'' என்றார்கள். 237. அப்பொழுது தேவன், ''இனிமேல் நான் இவர்களோடு இப்படி நேரடியாக பேசமாட்டேன். அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவேன். அவன் என் நாமத்தில் பேசுவான்'' என்றார். பாருங்கள்? எனவே தேவன் எப்பொழுதும் அதைதான் செய்து வந்திருப்பதாக நாம் காண்கிறோம். அதை ஏன் அவர்களால் தொடக்கத்தில் காணமுடியவில்லை? இதை எல்லாவற்றையும் அவர்கள் கண்ட பின்பும், அவர்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு கொண்டுசெல்லும் செய்திக்கு விரோதமாக அவர்கள் ஏன் முறுமுறுக்கவேண்டும்? அந்த செய்தி அவர்களை முதலில் வெளியே கொண்டுவந்து, அவர்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு கொண்டு சென்று கொண்டிருந்தது. இருப்பினும் அவர்கள்... அதற்கு விரோதமாக முறுமுறுத்தனர். அவர்கள் எவ்வளவு பூரணமாக... தினந்தோறும் தேவனுடன் நடந்து சென்றிருக்க முடியும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். வனாந்தரத்திலே அது எவ்வளவு அருமையான வாழ்க்கையாக அமைந்திருக்கும் இரவு நேரத்தில்... இரவில் விழுந்த மன்னாவை அவர்கள் காலையில் சேகரித்து புசித்தனர். 238. 76 239. உங்களுக்குத் தெரியுமா, அது அவர்களுக்கு மிகவும் சர்வ சாதாரணமாய் ஆன காரணத்தால், அவர்கள், ''இந்த அப்பம் எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது'' என்றனர். நமக்கும் அது அப்படித்தான் உள்ளது. நான் அந்த சிறு குழுக்களை நினைத்துப் பார்க்கிறேன்... என் சொந்த சிறு ஊழியத்தில், நாடு முழுவதிலும் தெய்வீக சுகம் பெறுதலைக் கண்டது மாத்திரமல்ல, அது எப்பொழுதும் இருந்து வருகிறது - தெய்வீக சுகம் பெறுதல். சுகம் பெறுதலுக்கென தேவன் எப்பொழுதும் எங்காவது ஒரு வாய்க்காலை வைத்திருந்தார். ஒருமுறை அவர் தேவதூதனையும் கூட அனுப்பி குளத்தைக் கலக்கச் செய்தார். அவர்... எல்லாவிதமான காரியங்களும். வனாந்தரத்தில் வெண்கல சர்ப்பம் இருந்தது. நாம் தெய்வீக சுகமளித்தலுக்கான அடையாளங்களை எப்பொழுதும் பெற்று வந்திருக்கிறோம். (அதைக் குறித்து இப்பொழுது நான் பேசவில்லை). தெய்வீக சுகமளித்தல் என்பது ஜனங்களின் கவனத்தைக் கவரும் ஒன்று. யாருமே தெய்வீக சுகமளிக்கும் ஆராதனைக்கு நன்கொடை கொடுப்பார்கள். எவரும் பாடல் ஆராதனைக்கு நன்கொடை கொடுப்பார்கள். ஆனால் இழந்து போன ஆத்துமாவைக் குறித்து வரும்போது, அவர்கள் அதனுடன் எவ்வித தொடர்பும் கொள்ள விரும்புவதில்லை. பாருங்கள், அது ஏறக்குறைய சரிதானே? நமக்கு எல்லாம் உள்ளது... இழந்து போன ஆத்துமாவுக்கென நாம் ஒன்றையும் செய்ய விரும்புவதில்லை. அவன் இருளில் தடுமாற அனுமதிக்கின்றனர். அவர்கள், ''நல்லது, அது பரவாயில்லை. அவன் சபையைச் சேர்ந்திருக்கிறான். அதனால் பாதகமில்லை'' என்கின்றனர். 240. 77 241. இப்பொழுது, நாம் என்ன காண்கிறோம் என்றால்... (நம்மால் முடிந்தவரை நாம் வேகமாக முடிப்போம்). அது எவ்வளவு பூரணமாக அமைந்திருந்தது என்பதை சிந்தித்து பாருங்கள். நாம் இவ்வுலகில் வாழ்ந்த நாட்களை நோக்கிப் பார்க்கிறேன். கர்த்தராகிய தேவன் என்ன செய்திருக்கிறார் என்பதைப் பாருங்கள். அவர் பெரிய அடையாளங்கள், அற்புதங்களைக் கொண்டு தொடங்கினார். அவைகளை நாம் அனைவரும் அனுபவித்தோம். பிறகு கவனியுங்கள்... அதை பின்தொடர்ந்து செய்தி வருகிறது. 242. என்ன நடந்ததென்று கவனியுங்கள். நடந்து கொண்டிருந்த போது - தனியாக அல்ல, கூட மனிதர்களுடன் - ஒரு கூட்டம் தேவ தூதர்கள் வானத்திலிருந்து இறங்கி வந்து, பூமி முழுவதையும் குலுக்கி, அங்கு நிற்பதைக் கண்டேன். செய்தித்தாள்கள் அதைக் குறித்து எழுதினர். இது நடப்பதற்கு அநேக மாதங்களுக்கு முன்பே அது முன்னுரைக்கப்பட்டது. அங்கு அவர் நின்றுகொண்டு, ''காலம் சமீபமாயுள்ளது, திரும்பிப் போ. சீர்திருத்தக் காலத்திலும் மற்ற காலங்களிலும் மறைந்து கிடந்த ஏழு முத்திரைகளின் இரகசியங்களைத் திறந்து அதை வெளிப்படுத்து“ என்றார். அதன் பிறகு சர்ப்பத்தின் வித்து, இன்னும் இப்படிப்பட்ட காரியங்கள் - பிரசங்கிக்கப்பட்டது. ஆனால் குருவானவர்கள் என்ன செய்தனர்? அதை எடுத்து சொல்வதற்கு பதிலாக... ''ஏன்? லூத்தர் இதை கூறினார், இப்படி கூறினார்'' என்கின்றனர். அவர்கள். அவர்களால் அதை காணவே முடியாது. பாருங்கள்? ஆனால் அதை விசுவாசிக்கும் நமக்கு அது எத்தகைய ஒரு சிலாக்கியம் - ஒவ்வொரு நாளும் தேவனுடைய சமுகத்தில் நடப்பதென்பது. 243. 78 244. அங்கு நின்றுகொண்டு ஆகாயத்திலிருந்து ஒரு சுழல்காற்று இறங்கி வருவதைக் கண்டேன். நாங்கள் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்த ஒரு மலையை அது இரண்டாகப் பிளந்து, மரங்களின் உச்சியை முறித்துப்போட்டது. இப்படிப்பட்ட காரியங்கள் நடந்தன. அதிலிருந்து வார்த்தை முழங்கி, மூன்று முறை குலுக்கி, ''அது மேற்கு கரைக்கு செல்வதைக் கவனி'' என்றது. அது அங்கு சென்று அலாஸ்காவைக் குலுக்கினது. அது உரைத்தபடியே மேற்கு கரையை தாக்கினது. 245. அதற்கு முந்தின நாள், நான் ஒரு பாறையை எடுத்து ஆகாயத்தில் எறிந்து, கர்த்தர் உரைக்கிறதாவது, “அந்த நேரம் இங்கு வந்துவிட்டது. பூமியில் நியாயத்தீர்ப்புகள் தொடங்கும். மேற்கு கரை முழுவதும் குலுங்கும்'' என்றேன். அது எவ்வளவு பிழையின்றி நிறைவேறினது பாருங்கள். நாளுக்கு நாள், அவர் உரைத்தபடியே நடந்து வருகிறது. சகோதரரே, அதை நாம் எப்படி புறக்கணிக்க முடியும்? நம்முடைய விசுவாசத்தை நாம் அவர் பேரில் வைத்திருப்போம். 246. அவர்கள், “இவர் யார்?'' என்று கேட்கின்றனர். இவர் யாரென்று நமக்குத் தெரியும். இவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்து, அக்கினி ஸ்தம்பம். மோசேயின் காலத்தில் அது என்ன செய்ததென்று பாருங்கள். இன்றைய அக்கினி ஸ்தம்பத்துக்கு அது முன்னடையாளமாயிருந்தது. அது எப்பொழுதுமே... இயேசு கிறிஸ்து வார்த்தையாயிருக்கிறார் என்று அவர்கள் ஏன் விசுவாசிக்கவில்லை? அவர்கள் தவறாக அதை வியாக்கியானம் செய்து அதை தவறாகப் புரிந்து கொண்டிருந்தனர். ஏவாள் செய்தது போல, அவர்கள் இப்பொழுது செய்கின்றனர். 247. 79 248. பிலேயாமும் அவனுடைய போதகமும் அவர்களுக்கு சரியாக இருந்தது. அது அவர்களுடைய சுவையுடன் ஒத்துப்போனது. பண்டிகையின்போது, பாருங்கள்... மோவாபியரின் பண்டிகையின் போது, பாருங்கள்... ஓ, அவன் என்ன சொன்னான் என்று. அது எவ்வாறு இன்றைய காட்சிக்கு முன்னடையாளமாயிருந்தது என்பதைப் பாருங்கள். (உங்களை நான் நீண்ட நேரம் பிடித்து வைத்திருக்கிறேன்). ஆனால் பாருங்கள். கவனியுங்கள், இன்னும் சிறிது நேரம், மோவாபியரின் பண்டிகை. பாருங்கள், அவர்களை ஒரு வழிக்கு செலுத்த முடியவில்லை என்று பிலேயாம் கண்ட போது, அவன் அவர்களை ஒரு ஸ்தாபனமாக்கினான். அவர்களை அவனால் சபிக்க முடியவில்லை என்று கண்டபோது... அவன் அதிகமாக அவர்களை சபிக்கும் தோறும், தேவன் அவர்களை அதிகமாக ஆசீர்வதித்துக் கொண்டே சென்றார். 249. 80 250. பாருங்கள், அவர்கள் அதைத்தான் பெந்தெகொஸ்தேகாரருக்குச் செய்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் தொடங்கின போது, நீங்கள் எங்கும் செல்லமாட்டீர்கள். உங்களில் ஒன்றுமில்லை. நீங்கள் எரிந்து போய்விடுவீர்கள். “நீங்கள் மூடபக்தி வைராக்கியமுள்ள ஒரு கூட்டம்'' என்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர்கள் சபிக்குந்தோறும், நீங்கள் பெருகிக் கொண்டே வந்தீர்கள். தேவன் தமது செய்தியை வெளிப்படுத்திக் கொண்டே வந்தார். தொடக்கத்திலிருந்த பழைய அசெம்பிளி , பொதுவான ஆலோசனை சங்கத்திலிருந்து, அவர் அவர்களை தண்ணீர் ஞானஸ்நானத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைக்குக் கொண்டு வந்தார். அதன்பிறகு ஒருவர் இந்த பக்கமும், வேறொருவர் அந்த பக்கமும், மற்றுமொருவர் அந்த பக்கமும் குதித்து... இந்த, அந்த ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டனர். தேவன் அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டே வந்தார். 251. இப்பொழுது, நல்லது, அவன் உங்களை சபிக்கமுடியாது என்று கண்டுகொண்டான். பாருங்கள்? எனவே அவன் என்ன செய்யப் போகிறான்? உங்களை ஸ்தாபனமாக செய்யப் போகிறான். உங்களை கொண்டு வருவான்... “ஓ, எப்படியும் நாமனைவரும் ஒன்றுதான்'' (பாருங்கள்?) ''நாமனைவரும் ஒரே தேவனை விசு வாசிக்கிறோம். பிலேயாம் அதைத்தான் செய்தான். யூதா அதைக் குறித்து நம்மை எச்சரித்திருக்கிறான் அல்லவா?” அவர்கள் வழியிலே நடந்து... பிலேயாமின் உபதேசத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப் பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப் போனார்கள். இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய யூதா நம்மை இதைக்குறித்து வேதாகமத்தில் எச்சரிக்கவில்லையா? அவர்கள் தொடக்கத்திலிருந்தே காயீனைப்போல் கூலிக்கு வேலை செய்தவர்கள் - சபைக்கு சென்று சபைகளைக் கட்டி, பலிபீடத்தைக் கட்டி பலி செலுத்தினவன். அவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப் பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப் போனார்கள். யூதா, இன்று காலை உங்களுக்கு முன்பாக நாம் விரிப்பது போல், நாம் செய்து வருவது போல், முழுவதும் விரிக்கிறான். முழுவதும் இங்கு விரிக்கப்பட்டுள்ளது. 252. 81 253. அவர்கள் கோரா எதிர்த்துப் பேசின பாவத்திற்குள்ளாகி கெட்டுப் போனார்கள். அது எவ்வளவு மோசமென்று சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்த கோரா செய்ததை சிந்தித்துப் பார்க்கும் போது... பாருங்கள், பிலேயாம், “நாம் எல்லோரும் பண்டிகைக்கு போவோம். நாம் எல்லோரும் ஒன்றுதான்” என்றான். மோவாபியர் தேவனை விசுவாசித்தனர். அவர்கள் லோத்தின் குமாரத்தியின் சந்ததியினர். பாருங்கள்? “நாம் எல்லோரும் ஒரே தேவனை விசுவாசிக்கிறோம்'' அடிப்படையில் நோக்கும்போது, அவர்கள் கூறினது முற்றிலும் உண்மையே. பிலேயாமைக் கவனியுங்கள். அவன் இன்றைய நல்ல பாப்டிஸ்டு அல்லது பிரஸ்பிடேரியனைப் போல அடிப்படையில் சரியானவன். அவன் அங்கு வருகிறான். அங்கு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்ளாத இஸ்ரவேல் ஜனங்கள் இருந்தனர்... மோவாப் ஒரு தேசம், இஸ்ரவேல் ஒரு தேசமல்ல. அந்த காலத்தில் அவர்கள் ஜனங்களாய் மாத்திரம் இருந்தனர். ஆனால் சிறிது கழிந்து அவர்கள் தேவனுடைய வழியில் செல்ல விரும்பவில்லை. அவர்கள் மற்ற தேசங்களைப் போல் இருக்க விரும்பினர். அப்பொழுதுதான் அவர்கள் தவறினர். அவர்கள் தேவனோடு நிலைத்திருக்க விரும்பின வரைக்கும் சரியாயிருந்தனர். 254. 82 255. பிலேயாம் வந்து நோக்கினான். அவன், “நல்லது, என்னே! போதகர்களில் ஒருவர் வேறொருவரின் மனைவியை விவாகம் பண்ணினார் என்று எனக்குத் தெரியும்'' என்றான். இப்படிப்பட்ட காரியங்கள் அனைத்தும் அங்கு நிறைய இருந்தன என்பது நிச்சயம். அவன் பாளையத்தில் ராஜாவின் சத்தத்தைக் கேட்க மறந்து போனான். அவன் அடிக்கப்பட்ட கன்மலையையும், பாவ நிவாரணத்துக்காக அங்கு தொங்கிக் கொண்டிருந்த வெண்கல சர்ப்பத்தையும் காணவில்லை. அவர்கள் எந்த ஸ்தாபனத்துடனும் இணைந்திருக்கவில்லை என்பதை அவன் உணரவில்லை. அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையோடு இணைந்திருந்து, அதில் நடந்து கொண்டிருந்தனர். பாருங்கள்? பிலேயாம், ”எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டுங்கள்'' என்றான் (அடிப்படையாக). அது தான் யேகோவாவுக்கு தேவையாயிருந்தது. அதுதான் யேகோவா இரு சாராரிடமிருந்தும் பெற்றுக் கொண்டிருந்தார். ''சரி, அதன் மேல் ஏழு கன்று குட்டிகளைக் கிடத்துங்கள்“. அதைதான் அவர்கள் பாளையத்தில் செய்து கொண்டிருந்தனர். ”எனக்காக ஏழு ஆட்டுக் கடாக்களை அதன் மேல் வையுங்கள். ஏனெனில் என்றாவது ஒருநாள் மேசியா வரப்போகிறார்''. சரி. 256. 83 257. பாருங்கள், அடிப்படையில் இருவரும் சரியே - அடிப்படையில். பாருங்கள்? ஆனால் ஒருநாள் அவர்களை அதில் பிடிக்க முடியவில்லை என்று அவன் கண்ட போது, அவன், “நாம் ஒன்று சேர்ந்து ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்ளலாம் என்றான். அங்குதான் அவர்கள் தவறு செய்தனர். 258. பெந்தெகொஸ்தே மற்ற சபைகளைப் போல் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டபோது, அங்குதான் அது தவறு செய்தது. நான் உங்கள் சத்துரு அல்ல. நான் உங்கள் சகோதரன். இந்நாட்களில் ஒன்றில் அது உண்மை என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அது ஒருக்கால் சிறிது நாட்கள் பிடிக்கும் (சூரியன் இன்னும் சில சுற்றுகள் சுற்ற வேண்டியிருக்கும்). ஆனால் என்றாவது ஒருநாள் அது உண்மை என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 259. பிலேயாமின் போதகம் அவர்களில் பதிந்தது... ''நாம் எல்லாம் ஒன்றுதான்“ என்பதை அவர்கள் விரும்பினர். பாருங்கள்? எனவே அவர்கள் சென்றனர். அவர்களுடைய தீர்க்கதரிசிகளும் மற்றும் எல்லோருமே அவர்களுடன் சென்றனர். பண்டிகையின்போது, பிலேயாம், ”ஒரே தேவன் உண்டென்று நாமெல்லோரும் விசுவாசிக்கிறோம். அதை நாம் விசுவாசிப்போம் என்றான்“. அவர்கள் எதை எதிர் நோக்கியிருந்தனரோ, அது அப்படியே. 260. 84 261. மெதோடிஸ்டுகளும் பாப்டிஸ்டுகளும் அவர்களுடைய ஸ்தாபனத்தின் காரணமாக ஒன்றாக இணைய முடியவில்லை. ஆனால் ''நாமெல்லோரும் ஒன்று கூடி மிகப்பெரிய ஸ்தாபனம் ஒன்றை உண்டாக்குவோம்'' என்றால் அதற்கு சரி என்று ஆமோதம் தெரிவிக்கின்றனர். நீங்கள், “ஓ, பெந்தெகொஸ்தேகாரர் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் எனலாம். ஏற்றுக் கொள்ளமாட்டார்களா? அன்றொரு நாள் அவர்கள் மிஸ் ஸெளரியில் என்ன செய்தனர்? நீங்கள் செய்தித்தாளை நிச்சயமாகப் படிக்கிறீர்கள். பாருங்கள்? நீங்கள் மாட்டீர்களா? இல்லை, பெந்தெகொஸ்தேகாரராகிய நீங்கள் அல்ல, ஜனங்கள் அல்ல. அது நீங்கள் அல்ல. அங்குள்ள அரசாங்கம் உங்களைத் தூண்டுகிறது. அந்த தலைவர் உங்களைத் திசை திருப்புகிறார். அது உண்மை. அதனுடன் செல்லாதீர்கள். அதிலிருந்து விலகி நில்லுங்கள், அது மிருகத்தின் முத்திரை. உங்களால் முடியும் வரைக்கும் வேகமாக அதிலிருந்து விடுபடுங்கள். பாருங்கள்? அது மதசம்பந்த... அந்த அரசாங்கத் தலைவரின் தூண்டுதல் அது. 262. 85 263. நாம் ஜெர்மனியுடனோ அல்லது வேறு எந்த நாட்டுடனோ போருக்கு சென்றிருக்க மாட்டோம். இது மாத்திரம். இங்குள்ள சில பெரிய அரசியல்வாதிகள் துப்பாக்கி உற்பத்தி செய்வதால் போரை தொடங்கி... அப்படிப்பட்ட காசு எனக்கு வேண்டாம்... என் பிள்ளை அங்கு சென்று அதற்காக இறந்து, அவ்வாறு கிடைக்கக் கூடிய இரத்தம் தோய்ந்த காசு எனக்கு வேண்டாம். பாருங்கள்? அதுதான் அது, அரசியல்தான், அவ்விதம் செய்கிறது. முழு உலகமும் பிசாசின் ஆதிக்கத்தில் உள்ளது. அப்படித்தான் இயேசு கூறினார். இயேசு வந்து ஆயிரம் வருட அரசாட்சியின் போது ஆட்சியை எடுத்துக்கொள்ளும் வரைக்கும் இந்நிலை சரியாகாது. இப்பொழுது நமக்கு இந்த தொல்லைகள் உள்ளன (நாம் வேகமாக சென்று இதை முடித்துவிடுவோம்). 264. 86 265. அவர்கள் எதிர்நோக்கியிருந்த அதே காரியம். அதைத்தான் அவர்கள் விரும்பினர். மோவாபியரின் பண்டிகையில் சாத்தான் வெற்றி பெற்றான். அவனுக்கு வேறொன்றும் கூட வருகிறது. அவன் அவர்கள் எல்லோரையும் அதேவிதமாக ஒன்று சேர்க்கிறான். காத்திருங்கள்... திடீரென்று அவர்கள் என்ன செய்தனர் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். அது முன்பு நடந்தது போலவே. அது நிறைவேற நீண்ட காலம், மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் பிடிக்கவில்லை. அவர்கள்... கள்ளத் தீர்க்கதரிசியாகிய அந்த மனிதன் தேவனுடைய வார்த்தையை மீறி... தேவன் நாடு முழுவதும் எச்சரிக்கையை அனுப்பி அவர்களிடம் ''அதை விட்டு வெளியே வாருங்கள், அதை விட்டு வெளியே வாருங்கள், அதை விட்டு வெளியே வாருங்கள்!'' என்று கூறினார். அவர்களோ அதை செய்யமாட்டார்கள். அவர்கள் அங்கேயே இருப்பார்கள். 266. அவர்கள் தேவனுடைய வார்த்தையை அசட்டை செய்கின்றனர். அவர்கள் வார்த்தைகளை அசட்டை செய்கின்றனர். அடையாளங்களை அசட்டை செய்கின்றனர், நமக்கு இப்பொழுது உள்ள காரியங்களை அசட்டை செய்கின்றனர். அவர்கள் அப்படியே சென்று, “நாங்கள் எப்படியும் அதை பெறப்போகிறோம். நாங்கள் அதற்காக முன் சென்று கொண்டிருக்கிறோம். நாம் அதை பெறத்தான் வேண்டும். அவ்வளவுதான். நாமெல்லாரும் ஒன்று'' என்கின்றனர். பிசாசின் மதியீனத்தைப் பார்த்தீர்களா? அதையே தான் அவர்கள் ரோமாபுரியிலுள்ள நிசாயாவில் நிகழ்ந்த நிசாயா பண்டிகையில் செய்தனர். அவர்கள் அதிலிருந்து ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டனர். அதுதான் அங்கு நிகழ்ந்தது. சாத்தானுக்கு நிசாயாவிலிருந்து உண்டாயிருந்தது. ஓ, என்னே அன்று முதற்கொண்டு... கவனியுங்கள், இப்பொழுது நான் ஒரு பெரிய வார்த்தையை கூறப் போகிறேன். ஒலிநாடாவில் இதைக் கேட்பவர்கள், இதைக் குறித்து நீங்கள் வாதிக்க விரும்பினால், அதை வரலாற்றோடும், வேதத்தோடும் ஒப்பிட்டு பார்த்து நீங்களே வாதித்துக் கொள்ளுங்கள், பாருங்கள், என்னிடம் வாதிக்காதீர்கள். 267. 87 268. கவனியுங்கள் ஒவ்வொரு முறையும் தேவன் ஒரு செய்தியாளனை அனுப்பி ஒரு செய்தியைத் தொடங்கினபோது... அந்த சபை, அந்த ஜனங்கள் கொண்ட கூட்டம் ஸ்தாபன பண்டிகைக்கு சென்றபோது... அவர்கள் அங்குதான் செய்கின்றனர். அங்குதான் அசெம்பளீஸ் சபையாகிய நீங்களும் செய்தீர்கள். அங்குதான் ஒருத்துவக்காரராகிய நீங்களும் செய்தீர்கள். அங்குதான் மற்றவர்களாகிய நீங்களும் செய்தீர்கள். அந்த ஸ்தாபன பண்டிகையில் நீங்கள், தேவன் ஆதி முதற்கொண்டு சபித்த அதே காரியத்துக்கு திரும்பச் சென்றீர்கள். அது முற்றிலும் உண்மை. சபைக்கு எழுப்புதல் உண்டான எந்த நேரத்திலும்... லூத்தரின் காலத்தில், அப்பொழுது ஒரு... என்ன நேர்ந்தது? மெதோடிஸ்டுகள்... காலங்கள் தோறும்... ஸ்விங்லி, பின்லே, பின்னி, மற்றவர் அனைவரும், அவர்களுக்கு எழுப்புதல் உண்டானபோது, அவர்கள் அதைக் கொண்டு என்ன செய்தனர்? அவர்கள் அதை ஸ்தாபன பண்டிகையில் எறிந்து, மற்றவர்களுடன் ஊர்ந்து சென்று, மற்றவர்களுக்கு உள்ளது போல உங்களுக்கும் ஒரு பிராண்டு (brand) பெயரைச் சூட்டினர். அப்பொழுது ஒரு கூட்டம் மனிதர் உங்களை ஆளுகை செய்தனர். பரிசுத்த ஆவி அதற்கு மேல் செல்ல முடியவில்லை. அது முற்றிலும்... வேதம் போதிக்கும் ஒன்றை நீங்கள் போதிக்கத் தொடங்குவீர்களானால்... ஸ்தாபனம் அதை விசுவாசிப்பதில்லை. அது உங்களை வெளியே துரத்திவிடுகிறது. அதை ஒருமுறை முயன்று பார்த்து, அது சரியா இல்லையா என்பதை அறிந்து கொள்ளுங்கள். அது உண்மை என்று உங்களுக்குத் தெரியவரும். பாருங்கள், ஒவ்வொருமுறையும் அவர்கள் ஸ்தாபன பண்டிகைக்கு - பிலேயாமின் பண்டிகைக்கு அழைக்கப்படும்போது, தொல்லை தொடங்குகிறது. ஓ, லூத்தர், வெஸ்லி, பெந்தெகொஸ்தே, இவர்கள் அனைவருமே அதற்கு இரையானார்கள். 269. 88 270. கவனியுங்கள், அப்பொழுதுதான் (அல்லேலூயா!) மோசே முன்னால் காலடி எடுத்துவைத்து,''என் சார்பிலும் தேவன் சார்பிலும் இருப்பவர்கள் யார்?“ என்று கேட்டான். அப்பொழுது தான் லேவியர் பட்டயத்தை உருவி பாளயம் எங்கும் சென்று, அதனுடன் சம்பந்தப்பட்ட எல்லாரையும் கொன்றுபோட்டனர். 'ஆமென்' எல்லோரையுமே. மோவாபிய பெண்ணைக் கொண்டிருந்த ஒவ்வொரு மனிதனையும் அவர்கள் ஒன்றாக சேர்த்து உருவக் குத்திக் கொன்று போட்டனர். அந்த வேளை வந்துவிட்டது. அந்த மனிதர் எங்கே? ஆரோனின் குமாரர் எங்கே? தேவனுடைய வசனமாகிய இருபுறமும் கருக்குள்ள இந்த பட்டயத்தை உறையிலிருந்து வெளியே எடுக்க சித்தம் கொள்ளும் ஆசாரியர்கள்? அப்படிப்பட்டவர் எங்கே? எவ்வளவுதான் அழைத்தாலும், அழைத்தாலும், யாரும் பதில் கொடுப்பதில்லை. நான் கூறுவது புரிகிறதா? நமக்கு புரிவதில்லை. நாம்... ஏதோ தவறுள்ளது. கவனியுங்கள், அங்கே அவர்கள். அப்பொழுதுதான் மோசே எழுந்து நின்று இவைகளைக் கூறினான். 271. 89 272. கவனியுங்கள், அவர்களுடைய பாவம், அவர்கள் அங்கு செய்த பாவம், அவர்கள் மோவாபியருடன் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு அவர்களுடன் ஒரே சரீரமாக ஆனபோது... அந்த பாவம் அவர்களுக்கு மன்னிக்கப்படவேயில்லை. இதை ஒரு நிமிடம் வலியுறுத்தப் போகிறேன். (நேரமாகிவிட்டது, ஆனால் ஒரு நிமிடம் மாத்திரம்). அவர்களுடைய பாவம் அவர்களுக்கு மன்னிக்கப்படவேயில்லை. அவர்களில் ஒருவராவது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிக்கவேயில்லை. பரி. யோவான் 6-ல் இயேசு (என்னை ஒரு நிமிடம் மன்னித்துக் கொள்ளுங்கள்)... பரி. யோவான் 6-ல் இயேசு சொன்னார். அவர்கள், ''எங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்தார்கள்'' என்று சொன்னார்கள். அவர்கள் பெந்தெகொஸ்தேகாரர்கள். சகோதரனே, அவர்கள் மன்னாவைப் புசித்தார்கள். அவர்கள் உண்மையானதைப் பெற்றிருந்தார்கள். 273. இயேசு, “அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தார்கள். அவர்கள் அழிந்து போனார்கள், அவர்கள் நித்திய காலமாக அழிந்துவிட்டார்கள்'' என்றார். அவர்களுடைய பாவம் அவர்களுக்கு மன்னிக்கப்படவேயில்லை. அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் தேவனுடன் செய்திருந்த உடன்படிக்கையை முறித்துப்போட்டு, தேவனுடைய எச்சரிக்கையை ஏற்றுக் கொள்ளாத, கூலிக்கு அமர்த்தப்பட்ட தீர்க்கதரிசியாகிய பிலேயாமுடன் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். பிலேயாம் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ள மறுத்தான். அவன் தேவனுடைய எதையுமே ஏற்றுக்கொள்ள மறுத்தான் ஆனால் அவன் அவர்கள் எல்லோரையும் ஒன்று சேர்க்க தீர்மானம் கொண்டான். மதிகேட்டை உங்களால் காணமுடிகிறதா? இதில் நீண்ட நேரம் என்னால் நிலைத்திருக்க முடியும். ஆனால் நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று எண்ணுகிறேன். பாருங்கள்? கவனியுங்கள், அவர்களுடைய பாவம் அவர்களுக்கு மன்னிக்கப்படவேயில்லை - அந்த ஆசீர்வாதத்தின் கீழ் தங்கியிருந்து, மன்னாவைப் புசித்து, மற்றவைகளைச் செய்த அவர்கள் எவருக்குமே. 274. 90 275. உண்மையான செய்தி பலப்பரீட்சைக்கு வந்த நேரத்தில், அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். ''நாம் மோவாபியரோடு ஒன்று சேர்ந்துவிடுவோம். அவர்கள் ஒரு பெரிய ஸ்தாபனம், ஒரு பெரிய தேசம். நான் ஒன்றுமே... நாம் ஒரு தேசமாகக் கூட இல்லை. நாம் ஒருவருக்கொருவர் விவாகம் செய்து கொள்வோம். அப்பொழுது நாம் நன்றாகிவிடுவோம். நாம் அவர்களுடன் இருந்துவிடுவோம். அது மன்னிக்கப்படவேயில்லை, அது அவர்களுக்கு ஒருக்காலும் மன்னிக்கப்படவேயில்லை. 276. இயேசு, ''அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தார்கள்'' என்றார். 'மரித்தார்கள்' என்பதன் மூல சொல்லை நாம் எபிரெய மொழி அல்லது கிரேக்க மொழியில் காண்போமானால் - ஆங்கிலத்திலும் கூட - அது, ''நித்திய பிரிவினை“ என்று பொருள்படும். நித்திய காலமாக அழிந்து போதல். அது உண்மை. 277. ஓ, ஆமாம், அவர்கள் அற்புதங்களைக் கண்டனர். அவர்கள் வார்த்தை அபிஷேகம் பண்ணப்பட்டதைக் கண்டனர். அவர்கள் வானத்திலிருந்து விழுந்த மன்னாவைப் புசித்தனர். அவர்கள் பாவ நிவாரணத்தின் ஆசீர்வாதங்களை அனுபவித்தனர். அடிக்கப்பட்ட கன்மலை தண்ணீர் கொடுப்பதை அவர்கள் கண்டனர். அதன் தண்ணீரை அவர்கள் பருகினர். அவர்கள் தனிப்பட்ட முறையில் அதனுடன் பழகியிருந்தனர். ஆனால் வார்த்தையை மீறும் நிலையை அவர்கள் அடைந்தபோது... அதை மறந்துவிடாதீர்கள். இயேசு “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்'' என்றார். அவர் மூன்று பேர்கள் இருப்பதாக கூறவில்லை (ஹா?). வேத வாக்கியங்களின் மகத்தான அடிப்படைகள் யாவுமே... 278. 91 279. அன்றொரு இரவு ஒரு மனிதன் என்னிடம் வந்து திரித்துவத்தைக் குறித்து பேசி, நான் எங்கு தவறாயிருக்கிறேன் என்று காண்பிக்க முயன்றார். எனக்கு ஆயிரக்கணக்கான நல்ல திரித்துவ நண்பர்கள் உண்டு. அவர்கள் அந்த பாபிலோனில் உள்ளனர். எனக்கு அந்த பாபிலோனில் நிறைய ஒருத்துவக்கார நண்பர்களும் உண்டு. பாருங்கள்? என்ன நேர்ந்தது? அவர், ''அது குறியீட்டுச் சொல் (terminology), சகோ. பிரன்ஹாமே. நீங்கள் திரித்துவத்தை விசுவாசிக்கிறீர்களா?'' என்று கேட்டார். 280. நான், “நிச்சயமாக. நீர் சொல்லுகிறபடியே அது குறியீட்டுச் சொல் என்று வைத்துக்கொள்வோம். அதை எந்த விதமாக நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்?'' என்றேன். 281. அவர், ''நான் ஒரே தேவனை விசுவாசிக்கிறேன்'' என்றார். 282. நான், ''அது நல்லது'' என்றேன். பாருங்கள்? 283. அவர், ''நான் ஓரே தேவன் உண்டென்றும், தேவத்துவத்தில் மூன்று ஆட்கள் உள்ளதாகவும் விசுவாசிக்கிறேன்“ என்றார். 284. நான், “நீங்கள் பயோலாவில் (Biola) படித்த மாணாக்கன் அல்லவா?'' என்றேன். 285. அவர், “ஆம்” என்றார். 286. நான், ''அப்படித்தான் எனக்கு தோன்றினது. ஆனால் அது நீங்கள் பெற்றுள்ள உயர்தர கல்விக்கு பொருத்தமானதல்லவே. மூன்று ஆட்களும் ஒரு தேவனுமா? வெப்ஸ்டர் அகராதியின்படி, ஒரு ஆளுக்கு ஆள் தன்மை (personality) இருக்க வேண்டும். மிஸ்டர், அப்படியானால் நீங்கள் மூன்று கடவுள்களில் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்“ என்றேன். ஆள் தன்மை இல்லாமல் நீங்கள் ஒரு ஆளாக இருக்கமுடியாது. ஒரு ஆள் என்று சொல்வதற்கு ஆள் தன்மை இருக்க வேண்டும். 287. அவர்கள் அப்படி சொல்லுகிறார்கள். அவர், ''நல்லது, சகோ. பிரன்ஹாமே, உங்களுக்குத் தெரியுமா, வேத பண்டிதர்களால் கூட அதற்கு விளக்கம் தர முடியவில்லை'' என்றார். 288. நான், ''அது முற்றிலும் உண்மை. வார்த்தை வேதபண்டிதனிடம் வருவதில்லை (உ, ஊ). வேதம் அனைத்துமே வெளிப்படுத்தலுடன் இணைந்துள்ளது. இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை'' என்றேன். பாருங்கள்? ஆமென், பார்த்தீர்களா? ஆனால் இந்த காரியங்களுக்கு வரும் போது... ஓ, என்னே! 289. 92 290. நாம் துரிதப்பட்டு, நம்மால் முடிந்தால் வேகமாக முடிக்க பிரயாசப்படுவோம். சில வேத வாக்கியங்களையும் குறிப்புகளையும் நான் கூறாமல் விட்டுவிட வேண்டியதாயிருக்கும், பாருங்கள். இப்பொழுது, கவனியுங்கள், அவர்கள் செய்த கிரியைகளுக்கு அவர்கள் மன்னிக்கப்படவேயில்லை. அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் ஆசீர்வாதங்களை அனுபவித்தனர். அதை மறந்துவிடாதீர்கள். இதை மறுபடியும் கூறுகிறேன். அவர்கள் அதற்காக மன்னிக்கப்படவேயில்லை. இந்த ஒலிநாடா உலகம் முழுவதும் செல்கின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாருங்கள்? இது ஆப்பிரிக்காவிலுள்ள முகாம்களிலும், இந்தியாவிலும், உலகம் முழுவதிலும் போட்டு கேட்கப்படுகிறது. இது வெவ்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகிறது - வெவ்வேறு முகாம்களில், வெவ்வேறு இடங்களில். அந்த பாவம் ஒருக்காலும் மன்னிக்கப்படவேயில்லை. என்ன? அவர்கள்... 291. நீங்கள், “நல்லது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் இதை செய்தேன், அதை செய்தேன். நான் பரலோக மன்னாவைப் புசித்தேன். நான்...'' எனலாம். 292. ஆம், அவர்களும் கூட புசித்தனர். ''அவர்கள் ஒவ்வொருவரும் மரித்தார்கள்'' என்று இயேசு கூறினார். உடன்படிக்கையை மீறி மற்றொரு தேசத்துடன் சம்பந்தம் கலவக் கூடாது என்னும் அந்த சரியான செய்திக்கு அவர்கள் வரும் போது... தேவன் ஒதுக்குபவர், அவர் அந்த ஜனங்களை தனியே ஒதுக்கினார். அவர்கள் வேறு எவரையும் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. உண்மையான சபையாகிய கிறிஸ்துவின் மணவாட்டி, கிறிஸ்துவாகிய வார்த்தையுடன் இணைக்கப்பட்டிருக்கிறாள். நீங்கள் எந்த ஸ்தாபனத்துடனும் சம்பந்தம் கலவக் கூடாது. நீங்கள் கிறிஸ்துவுடனும் வார்த்தையுடனும் எப்பொழுதும் போல நிலைத்திருங்கள். நீங்கள் அவ்வாறு சம்பந்தம் கலந்தால், அது தேவனிடமிருந்து நித்திய பிரிவினையை உண்டாக்கிவிடும். நீங்கள் எல்லோரும் புரிந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன். 293. 93 294. இப்பொழுது, நாம் வாசித்த வேத பாகத்தில், அது பஸ்கா பண்டிகைக்கு அருகில், அது நடந்துகொண்டிருந்தபோது - அது ஒரு கடினமான நேரம். ஜனங்கள் வாசலுக்குப் புறம்பே உறங்கிக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு பஸ்கா பண்டிகையின் போதும் இப்படி நடந்தது. அவர்கள் வெளியே தரைகளில் படுத்திருந்தனர். சத்திரங்கள் அனைத்துமே ஜனங்களால் நிறைந்திருந்தன. அது பஸ்கா பண்டிகை. அங்கு பெரிய எதிர்நோக்குதல் இருந்தது. அந்த இடம் எதிர் நோக்குதலால் நிறைந்திருந்தது (இன்னும் ஐந்தே நிமிடங்களில் முடித்து விடுகிறேன்), கர்த்தருக்கு சித்தமானால், அல்லது பத்து நிமிடங்களில் எல்லோருமே எதிர்நோக்குதல் நிறைந்தவர்களாயிருந்தனர். 295. பாருங்கள், அங்கு மூவகை ஜனங்கள் இருந்தனர். பாருங்கள், அங்கு பெரிய எதிர்நோக்குதல் காணப்பட்டது. இந்த விசித்திரமான மனிதன் இந்த பண்டிகைக்கு வருகிறார் என்று ஜனங்கள் அறிந்திருந்தனர். சிலர் அவரை நேசித்தனர், அவர்கள் அவரை விசுவாசித்தனர். சிலர் அவரை வெறுத்தனர். பெரும்பாலோர் அவரை வெறுத்தனர். ஒரு சாரார் அவரை நேசித்து, வேறொரு சாரார் அவரை வெறுத்த போது, இவர்களுக்கு இடையே உள்ள சாராருக்கு என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. பாருங்கள்? அவர்களுக்குத் தெரியவில்லை. கவனியுங்கள், அந்த இடம் எதிர்நோக்குதலினால் நிறைந்திருந்தது. ஒரு சாரார், “அவர் அங்கு ஏறும் போது அவரை நாம் அழைப்போம். அவருக்கு நாம் வார்த்தை பரிசோதனை அளிப்போம். பிரதான ஆசாரியர்களுக்கு முன்பாக அவரை நிறுத்துவோம். காய்பாவுக்கு முன்பாக அவருடைய ஞானம் எப்படிப்பட்டதென்று காண்போம்” என்றனர். அவர் ஏற்கனவே அதை நிரூபித்துவிட்டார். பாருங்கள்? 296. 94 297. நாம் அப்படி செய்வோம். என்ன செய்கிறாரென்று காண்போம்... அந்த பெரிய தலைவர்களில் சிலர் அவரைப் பிடித்துக் கொள்வார்கள் என்று எனக்குத் தெரியும். அவரைக் கேள்விமேல் கேள்வி கேட்டு, அவர் ஆசாரியர்களிடம் தவிக்கும்போது, அவர் யாரென்பதை அம்பலப்படுத்திவிடுவார்கள். என்ன செய்ய வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும். அவர்கள் அறிவாளிகள். என்ன செய்யவேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும்.'' 298. மற்றுமொரு சாரார், ''அந்த மனிதனை அவர்கள் என்ன செய்யப்போகிறார்களென்று வியக்கிறேன்'' என்றார்கள். 299. வேறொரு சாரார், “ஓ ஓ ஓ ஓ, அவர் வருவதற்காக நான் காத்திருக்கிறேன். தேவன் அவரோடு கூட இருக்கிறார். அவரே அந்த வார்த்தை. ஓ, அவரை நான் காண விரும்புகிறேன்” என்றனர். பாருங்கள்? ஓ, அவர்களுக்குள்ளே பிரிவினை உண்டாயிருந்தது. இப்பொழுது, பாருங்கள், அவரை அறிந்து விசுவாசித்தவர்கள், எந்த வாசலில் காத்திருக்க வேண்டுமென்று அறிந்திருந்தனர். பாருங்கள்? அவர் எந்த வழியாய் வருகிறார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். பெரிய எதிர்நோக்குதல் உண்டாயிருந்தது. ஆனால் உங்களுக்குத் தெரியுமா, அவரைக் கண்டவர் அநேகர் இல்லை. பாருங்கள், அநேகர் அவரைக் காணவில்லை. இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது. 300. 95 301. அவர்களில் சிலர், “அவர் நல்லவர். ஓ, அவரில் எந்தவித தவறும் இல்லை. நெப்போலியன், வாஷிங்டனைப் போல் இவரும் நல்லவர். ஆனால் ஓ, போதகர் என்னும் விஷயத்தில், அவர் சரியேயல்ல, அல்லவே அல்ல'' என்றனர். 302. வேறு சிலர், “ஓ, அவர் நல்லவர், ஓ, அவர் குழம்பியுள்ளார், அவ்வளவுதான். அவர் நல்ல ஆள். அவரைக் குறித்து யாருமே தவறான எதையும் கூற முடியாது.'' என்றனர். 303. இன்னும் சிலர், “இல்லை, அவர் ஒரு பிசாசு. அதை என்னால் கூற முடியும் - மனோதத்துவத்தினால் மனதிலுள்ளதை அறிந்து கூறுதல் போன்றவை. அது கள்ளத் தீர்க்கதரிசனம். அது நம்முடைய கோட்பாட்டுக்கு முரணானது. அப்படிப்பட்ட ஒன்றை நம்பாதீர்கள்'' என்றனர். 304. வேறொருவர், “தேவனுக்கு மகிமை. அவர் தேவன். அவரை நான் அறிந்திருக்கிறேன். அவரைக் காண்கிறேன்'' என்றனர். அவர்கள் அவருக்காகக் காத்திருந்தனர். அப்படித்தான் இன்றைக்கு நாம் நின்றுகொண்டிருக்கிறோம், அதே காரியம்: இந்த வேளைக்காக அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தை, லவோதிக்கேயா சபையின் காலத்துக்காக. 305. 96 306. இதைக் கூறி நாம் முடிக்கப்போகிறோம். (சிறிது நேரம்). மூன்று வகையினர் அவருக்காக காத்திருந்தனர். இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது. அது உண்மை. மூவகையினர். கவனியுங்கள், விசுவாசிகள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். பாருங்கள், பாருங்கள்? அவருடைய ஊழியம், அவரை சிலர் நேசிக்கவும், சிலர் வெறுக்கவும், சிலர் அவரைக் குறித்து வியக்கவும் காரணமாயிருந்தது. பாருங்கள்? அவருடைய ஊழியம்... அதை மறுபடி யும் கூறுகிறேன். அவருடைய ஊழியம், அது என்னவாயிருந்தாலும்... அது என்னவென்று இப்பொழுது நாம் அறிந்திருக்கிறோம். அது வார்த்தையாயிருந்தது. அவருடைய ஊழியம் அவரை சிலர் நேசிக்கக் காரணமாயிருந்தது. அவர்கள் அவ்வாறு செய்ய முன் குறிக்கப்பட்டிருந்தனர். பாருங்கள், அவர்கள் அதை விசுவாசித்தனர். அவர்கள் அதைக் கண்டனர். அவர்களுக்கு எந்தவித... நாத்தான்வேல் அங்கு வந்தபோது, அவன் அதை செய்தான் என்று அவர் கூறினார். உடனே நாத்தான்வேல், ''ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா'' என்றான். அவனுக்கு மனதில் எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை. 307. சீமோன் அங்கு நின்றுகொண்டு, “ஓ, அந்திரேயாவே, நான் வரமாட்டேன். இதையெல்லாம் நான் முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன்'' என்றான். 308. ஆனால் அந்திரேயாவோ, “நீ வந்துதான் ஆகவேண்டும். ஒருமுறை என்னுடன் வா'' என்றான். 309. இயேசு அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தபோது, அவன் வருவதைக் கண்டு, “உன் பெயர் சீமோன். நீ யோனாவின் குமாரன்'' என்றார். அதன்பிறகு அவனுடைய மனதில் எந்த கேள்வியும் இல்லை. பாருங்கள், அவ்வளவேதான். அவர்கள் அங்கிருந்தனர், அவர்கள் விசுவாசித்தனர், அவர்கள் அதைக் கண்டனர். மேசியா வரும் போது இதைத்தான் செய்வார் என்று அவர்கள் அறிந்திருந்தனர். 310. 97 311. அவர் தீர்க்கதரிசியாயிருக்க வேண்டியதாயிருந்தது. ஏனெனில் மோசே, ''அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார்'' என்றான். அவர்கள் குழப்பமுற்று நானூறு ஆண்டுகளாக தீர்க்கதரிசி இல்லாமல் இருந்தனர். அதை நேராக்க ஒவ்வொரு காலத்திலும் தீர்க்கதரிசி அவசியமாயிருந்தது. இதோ அவர் அங்கு நின்று கொண்டிருந்தார். 312. அவர்களுக்கு எந்தவிதமான கேள்வியும் இருக்கவில்லை. அவர்கள் குருத்தோலைகளைக் கைகளில் பிடித்துக்கொண்டு, ''இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார்'' என்று சொல்லிக் காத்திருந்தனர். 313. நகரம் முழுவதுமே இறுக்கமான நிலையில் இருந்தது. அவர்கள், “ஒரு கூட்டம் மூடபக்தி வைராக்கியமுள்ளவர்கள் வாசலருகே காத்திருக்கின்றனர்'' என்றனர். 314. மற்ற சாரார், “அவர் இங்கு வரும்போது என்ன செய்வாரென்று வியக்கிறேன். உங்களுக்குத் தெரியுமா, அவர் ஒரு போலி என்று நான் உண்மையில் நம்புகிறேன். அவருக்கு முயலின் பாதங்கள் உள்ளன. அதைக் கொண்டு தன் காதுகளைத் தேய்க்கிறார் (உங்களுக்குத் தெரியும்), அப்படி ஏதோ ஒன்று, உங்களுக்குத் தெரியும்.'' 315. இன்று அவர்கள் சொல்வது போல், “அது ஒருவிதமான மனோதத்துவத்தினால் சிந்தனைகளை அறிவது. அது ஏதோ ஒன்று...'' இப்படி விளக்கம் கூறி தட்டிக் கழிக்கின்றனர். 316. வேறொருவர், “இது ஒரு பிசாசு. நீங்கள் நகரத்தின் இந்த பக்கம் இருந்துவிடுங்கள். அதனுடன் எவ்வித தொடர்பும் கொள்ள வேண்டாம், அந்த கூட்டத்தில் ஒத்துழைக்காதீர்கள். அங்கு போக வேண்டாம். பாருங்கள். அதனுடன் நாம் எவ்வித தொடர்பும் கொள்ளக்கூடாது'' என்றார்கள். மூவகை ஜனங்கள். 317. 98 318. இப்பொழுது கவனியுங்கள். இதோ அவர் கழுதையின் மேலேறி நகரத்துக்குள் வருகிறார் - அவர் என்ன செய்வாரென்று வேதம் கூறினதோ அதேவிதமாக. ஒரு சிறு கழுதையின் மேல் சவாரி செய்து நகரத்துக்குள் வருகிறார். கோட்பாடுகளை நோக்காதவர்கள், தேவாலயத்தை நோக்காதவர்கள், மற்ற காரியங்களை நோக்காதவர்கள், ஆசாரியர்களையும் அவர்கள் சொல்வதையும் நோக்காமல் அவரை மாத்திரம் விசுவாசித்தவர்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்து முதல் அசைவுக்காக காத்திருந்தனர். அவர்கள், “வருகிற இவர் யார்?” என்று கேட்கவில்லை. ஓ, இல்லை! யார் வருகிறதென்று அவர்கள் திட்டவட்டமாக அறிந்திருந்தனர். வார்த்தை உரைத்தது என்னவென்பதை அவர்கள் அறிந்திருந்தனர். மற்ற வகுப்பினர் நகரத்தில் உள்ளதை காண்கிறீர்களா? அவர்கள், ''ராஜாவுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிற ராஜாவுக்கு ஓசன்னா ஓசன்னா! ஓசன்னா!'' என்று ஜனங்கள் ஆர்ப்பரிப்பதைக் கேட்ட போது... 319. இந்த மத சம்பந்தமான கலக்கம் என்னவென்று காண ஆசாரியர்கள் வெளியே ஓடிவந்தனர். ஜனங்கள், “இவர் யார்?'' என்று கேட்டனர். நண்பர்களே, அவர்கள் எதற்காக அங்கு வந்திருந்தனர்? மத சம்பந்தமான பண்டிகைக்காக! இந்த பண்டிகையை அவர்கள் ஆசரிக்கக் காரணமாயிருந்த அதே தேவன், அவர் அந்த விதமாக வருவார் என்று உரைத்திருந்தார். இருப்பினும், ”அவர்கள் இவர் யார்?'' என்று கூச்சலிட்டனர். 320. 99 321. காலம் மாறிவிட்ட போதிலும் ஜனங்கள் அன்று போல் இன்றும் உள்ளனர். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று எபிரெயர் 13:8 உரைக்கிறது. இதைக்கூறி நான் முடிக்கப் போகிறேன்: அந்த கேள்வி இனி அவர்களுக்கல்ல. அவர்கள், ''இவர் யார்?'' என்று கேட்டனர். ஆனால் 1964-ல் எழும் கேள்வி, “இவர் யார் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்?' என்பதே. இதெல்லாம் என்ன? வேதத்தை ஆராய்ந்து பார்ப்பதை நீங்கள் நிறுத்திவிட்டீர்களா? இவர் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இது மனோதத்துவத்தினால் சிந்தனைகளை அறிவதா? அல்லது வனாந்தரத்திலிருந்து எங்கோ புறப்பட்டு வந்த காட்டுத்தனமான ஒன்றா? யோவான் முன்னோடியாக இங்கு வருவான் என்று முன்னுரைத்த பிறகும், ”யோவான் ஒரு காட்டு மனிதன். அவன் அங்கு ஜனங்களை தண்ணீரில் மூழ்கடிக்கிறான்“ என்று அவர்கள் கூறினது போல். அந்த தீர்க்கதரிசிகள், ''அவருக்கு முன்னோடியாக இந்த தீர்க்கதரிசி எழும்புவான்” என்று முன்னுரைத்திருந்தனர். இதோ அவன் வந்தான். 322. அவர்களோ, “இவன் காட்டு மனிதன். அவனை விட்டு விலகி நில்லுங்கள். அவனுடன் எவ்வித தொடர்பும் கொள்ளாதீர்கள்'' என்றனர். இதோ மேசியா வேத வாக்கியங்கள் கூறின விதமாகவே வந்தார் - அதாவது அவர் நீதியுள்ளவரும் தாழ்மையுள்ளவரும் கழுதையின் மேல் ஏறி, வேதவசனம் நிறைவேறத்தக்கதாக, நகரத்துக்குள் வருவார் என்று. இதோ ஜனங்கள், பிலேயாம் மதசம்பந்தமான பண்டிகையில் நின்று கொண்டிருந்தது போல், மறுபடியும் மதசம்பந்தமான பண்டிகையில் நின்றுகொண்டு, ''இவர் யார்?” என்று கேட்கின்றனர். 323. நண்பர்களே, இவ்வேளைக்கென வாக்களிக்கப்பட்டுள்ள வேத வாக்கியங்கள் இன்று ஒவ்வொரு மணி நேரமும் நமது மத்தியில் நிறைவேறி வருகின்றன. இவர் யார் என்று நினைக்கிறீர்கள்? நாம் தலைவணங்கும் போது, இதைக்குறித்து ஆராய்ந்து பார்ப்போம். 324. 100 325. அன்புள்ள தேவனே, நாங்கள் அனைவரும் இதைக்குறித்து கவனமாக, ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் நாங்கள் அவ்வாறு செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம். கர்த்தாவே, அது உம் கரங்களில் உள்ளது. நாங்கள் மகத்தான ராஜாவாகிய உம்மைக் காண்கிறோம். நீர் வார்த்தையில் வாக்களித்துள்ளதை நாங்கள் காண்கிறோம். இந்த மகத்தான வேளை வருவதற்காக நாங்கள் அநேக ஆண்டுகள் காத்திருந்தோம். இப்பொழுது நாங்கள் அந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அபிஷேகம் பண்ணப்பட்ட உம்முடைய வார்த்தை உம்முடைய ஜனங்களில் வாசம் செய்து, நீர் என்ன நடக்குமென்று உரைத்தீரோ, அதே விதமாக தன்னை வெளிப்படுத்துகிறதை நாங்கள் காண்கிறோம். வேறொரு பக்கத்தில் சாத்தானின் கூட்டம் அபிஷேகம் பண்ணப்பட்டதைக் காண்கிறோம். நாங்கள் வார்த்தையின் மூலம் இதை மாதிரிபடுத்தி நாடெங்கிலும் அறிவித்து, எல்லா வழிகளிலும் முயற்சி செய்துவிட்டோம். கர்த்தாவே, நீர் யாரை ஜீவனுக்கு முன் குறித்திருக்கிறீர் என்று எனக்குத் தெரியாது. அதை அறிந்து கொள்வது என் வேலையல்ல, அது உம்முடைய வேலை. ஆனால் எல்லா வழிகளிலும் முயற்சி செய்வது என் வேலையாகும். தேவனே எனக்குதவி செய்யும். இதை விசுவாசிக்கும் மற்ற மனிதருக்கும் உதவி செய்யும். கர்த்தாவே, ஒவ்வொரு கல்லையும் நீர் புரட்டி, நீர் முன்குறித்தவர்கள் எல்லோருமே இதை கேட்கும்படி செய்யும். 326. எங்கள் சந்ததியில் நீர் வருவதைக் காண நாங்கள் விரும்புகிறோம். அதை நாங்கள் விசுவாசிக்கிறோம். வேறொரு குருத்தோலை ஞாயிறு, பெரிய வெள்ளிக்கிழமை வருமென்று விசுவாசிக்கிறோம். உமது சபை சிலுவையிலறையப்படும், ஆனால் நீர் சவாரி செய்து உள்ளே வரும் போது, அது எங்களுக்கு வெற்றியாயிருக்கும். 327. 101 328. தேவனே, இன்று நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறோம். இந்த சிறு சபையை ஆசீர்வதிப்பீராக. இங்குள்ள அந்த அருமை போதகரையும் அவருடைய மகனையும் ஆசீர்வதியும் - சகோ. அவுட்லாவையும் அவருடைய மகனையும் பெரிய ஜிம்மியையும் சிறிய ஜிம்மியையும் இங்குள்ள ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். 329. தேவனே, இக்காலை வேளையில் நாங்கள் அதற்கென வரவில்லை... நான்... நான் டூசானிலிருந்து இதற்காக காரோட்டி வரவில்லை... கர்த்தாவே, சிலரிடம் பேசும் சிலாக்கியம் எனக்கு கிடைக்குமானால், அது ஜனங்கள் யாரென்று வியந்து கொண்டிருக்கும் அந்த நபரை மகிமைப்படுத்துவதற்கேயன்றி வேறு யாரையும் அல்ல. மனிதன் இதை செய்ய முடியாது என்று அவர்கள் அறிந்துள்ளனர். இந்த காரியங்களை அறிவது மனிதனுக்கு அப்பாற்பட்டது என்று அவர்கள் அறிந்துள்ளனர். இருப்பினும் ஜனங்கள் “அது என்ன?” என்று கேட்கின்றனர். 330. ஆண்டவரே, அது நீர் என்று நாங்கள் அறிவோம். அது பரிசுத்த ஆவியின் ரூபத்திலுள்ள இயேசுகிறிஸ்து. அவரே பரிசுத்த ஆவி. ''நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன், மறுபடியும் தேவனிடத்திற்கு போகிறேன்“. கர்த்தாவே, அந்த மகத்தான அக்கினி ஸ்தம்பத்தை எங்கள் மத்தியில் காண்கிறோம். அது வேதத்தின் முதலாம் பாகத்தில் மோசேயுடன் இருப்பதை அவர்கள் கண்டனர். வேதத்தின் இடையில் பவுல் தமஸ்குவுக்குப் போகும் வழியில் அதை காண்கிறோம். அதை மறுபடியும் கடைசி காலத்தில் இங்கு காண்கிறோம். மூன்று என்பது உறுதிப்படுத்தும் எண். ஒவ்வொரு முறையும் அது செய்தியாக இருந்து வந்துள்ளது. 331. தேவனே, மனிதரும் ஸ்திரீகளும் இனிமேல் பாரம்பரியங்களிலும் கோட்பாடுகளிலும் நிலைத்திராமல், அவர்கள் அதைவிட்டு வெளியே வந்து, தங்கள் வாழ்க்கையை முழுவதும் தேவனுக்கு அர்ப்பணித்து, விசுவாசித்து, தத்துவத்திலும் மனித காரியங்களிலும் விசுவாசம் கொள்ளாமல், ஜீவனுள்ள தேவன் மேல் விசுவாசமாயிருப்பார்களாக. இந்த விடுமுறை நாட்கள் உள்ள போது, இப்பொழுதும், “இவர் யார்? அது என்ன? இதெல்லாம் என்ன?'' என்னும் கூச்சல் உண்டாகிறது. மதசம்பந்தமான ஜனங்களும் கூட அதையே கேட்கின்றனர். அது அதே கர்த்தராகிய இயேசு தமது ஜனங்களில் மாம்சமாகி, அவருடைய வார்த்தையை மணவாட்டிக்காக அபிஷேகிப்பதாகும். அவர்களால் அதை புரிந்து கொள்ள இயலவில்லை. அவர்கள் தங்களை அதிகமாக லவோதிக்கேயாவுக்கு விற்றுப் போட்டுள்ளதால், இது என்னவென்று அறியாமலிருக்கின்றனர். ஆனால் தீர்க்கதரிசியோ ”சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்'' என்று கூறினான். எனவே கர்த்தாவே, இப்பொழுது நாங்கள் அதை எதிர்நோக்கியிருக்கிறோம். கர்த்தாவே வாரும், ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். 332. 102 333. உங்கள் தலைகள் வணங்கியிருக்கும் இந்நேரத்தில் - உங்கள் இருதயங்களும் கூட - இது சத்தியமென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் கைகளையுயர்த்தி, “நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று உண்மையில் விசுவாசிக்கிறேன்”. நாம் இங்கு அடைந்திருக்கிறோம். நாம் மிகவும் குழப்பமடைந்து... அன்றொரு நாள் நடந்த கூட்டத்தில் கோதுமை, தண்டு இவைகளைக் குறித்து பேசப்பட்டபோது நீங்கள் வந்திருந்தீர்கள்... நீங்கள் கவனிப்பீர்களானால், இதைத் தொடர்ந்து நமக்கு எந்த ஸ்தாபனமும் உண்டாயிருக்கவில்லை. நான் உங்கள் போதகருடன் அடிக்கடி ஆண்டு முழுவதும் இருந்து வந்திருக்கிறேன். வழக்கமாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அது ஸ்தாபனமாகிவிடும். இம்முறை அது ஸ்தாபனமாகவில்லை. அது ஸ்தாபனமாக முடியாது. உமி அதைவிட்டு தன்னை விலக்கிக் கொண்டது. ஆனால் அதற்கு பிறகு எந்த முன்னேற்றமும் கிடையாது. கோதுமை உருவானது. ஊழியமானது தொடக்கத்திலிருந்த விதத்துக்கு திரும்பிவிட்டது. நண்பனே, அது நமது மத்தியில் இயேசு கிறிஸ்து. அது ஒரு மனிதன் அல்ல, ஆனால் கிறிஸ்து இயேசு என்னும் மனிதர் உங்களுக்குள் வாசம் செய்து உங்களில் அவர் ஒரு பாகமாகவும், நீங்கள் அவரில் ஒரு பாகமாகவும் இருக்க வேண்டுமென்று அவர் விரும்புவதாகும். இன்று அவரை ஏற்றுக் கொள்வீர்களா? 334. 103 335. ஆவியின் அபிஷேகம் இன்னும் பெறாதவர் இங்கு யாராகிலும் உண்டா? நீங்கள், “சகோ. பிரன்ஹாமே, ஒருமுறை நான் கூச்சலிட்டேன்'' எனலாம். அது மிகவும் நல்லது. ”நான் ஒருமுறை அந்நிய பாஷை பேசினேன்“. அதுவும் மிகவும் நல்லது. இருப்பினும் நான் குறிப்பிடுவது அதுவல்ல. நீங்கள் கூச்சலிட்டு அந்நிய பாஷை பேசி, அதே சமயத்தில் எப்படி வார்த்தையை மறுதலிக்கமுடியும்? பரிசுத்த ஆவியை பெற்றதன் அடையாளம் அவருடைய வார்த்தையை விசுவாசிப்பதே. ஒவ்வொரு காலத்திலும் அது வார்த்தையை ஏற்றுக் கொள்வதாகவே இருந்து வந்துள்ளது. ஆவியின் கனிகள் என்று வரும்போது அந்த ஆசாரியர்கள் இயேசுவை எவ்வளவோ மிஞ்சினவர்களாயிருந்தனர். அவர்கள் மிருதுவாயும், அமைதியாயும், சாந்தகுணமுள்ளவர்களாயும், தாழ்மையுள்ளவர்களாயும் இருந்தனர். இவரோ சபையை சின்னா பின்னமாக்கி, அவர்களை உதைத்து, ஜனங்களை கிழித்தெறிந்து, அவர்களை ”புல்லின் கீழுள்ள பாம்புகள் என்றழைத்து இப்படிப்பட்ட எல்லாவற்றையும் செய்தார்“. பாருங்கள்? அதனால் அவர் அந்த வார்த்தையாயிருந்தார். அதுதான். தேவனை விசுவாசியுங்கள். தேவன் வார்த்தையாயிருக்கிறார். வார்த்தையை விசுவாசியுங்கள். 336. 104 337. நீங்கள் இன்னும் கிறிஸ்தவ ஞானஸ்நானம் பெறாமலிருந்தால், இங்கு குளம் உள்ளது. ஒவ்வொன்றும் சத்தியம் என்று நீங்கள் அறியும்படி செய்து, அதற்கு நீங்கள் 'ஆமென்' என்றுரைத்து, உங்கள் முழு இருதயத்தோடும் அதை விசுவாசிக்கும்படி செய்யக் கூடிய பரிசுத்த ஆவியை நீங்கள் இன்னும் பெறாமலிருந்தால், இன்று காலையில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். அப்பொழுது நீங்கள், ஜனங்களை இவ்விதமாக நடந்து கொள்ளச் செய்யும் இவர் யார் என்று வியக்கமாட்டீர்கள். அது என்னவென்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அந்த அனுபவத்தை நீங்கள் பெறாமலிருந்தால், “சகோ. பிரன்ஹாமே, உங்கள் ஜெபத்தில் என்னை நினைவு கூருங்கள். என் கையை நான் உயர்த்துகிறேன்'' என்று சொல்வீர்களா? நீங்கள், நான்... தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. உன்னை... உன்னை... தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது அருமையானது. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அருமையானது. 338. 105 339. ஓ தேவனே, இசை இனிமையாக இசைக்கப்படும் இவ்வேளையில்... ஓ, அவர் அற்புதமானவர் நிச்சயமாக. ஆலோசனைக் கர்த்தா, சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா. ஆண்டவரே, இந்த ஜனங்களுக்கு நீர் அளிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். என்னால் ஜெபிக்க மாத்திரமே முடியும். எனக்குத் தெரிந்ததெல்லாம் அவர்களுக்காக கேட்பதற்கு மாத்திரமே. அவர்கள் கைகளை உயர்த்தினர். நான் அவர்களுக்கு வாக்களித்தபடி செய்கிறேன். இந்த பெரிய அனுபவத்தை நீர் அவர்களுக்குத் தரவேண்டுமென்று ஜெபிக்கிறேன் - ஏதோ ஒருவிதமான உணர்ச்சியல்ல, ஆனால் உண்மையான அனுபவத்தை. மோசே ஷெகினா மகிமையில் அவரை வனாந்தரத்தில் சந்தித்தது போல தேவனை சந்தித்தல். அங்கு மாத்திரமல்ல, அந்த வார்த்தையிலிருந்து விலகிச் செல்லாமல் அதனுடன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசித்தல். தேவனே, இக்காலையில் அதை ஒவ்வொருவருக்கும் அருளும். 340. தேவனே, இன்று எங்கள் மத்தியில் வியாதி உள்ளது. அதை சுகமாக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். வியாதியாயுள்ள, சுகம் தேவையுள்ள ஒவ்வொருவரையும் சுகப்படுத்தும். கர்த்தாவே, இதை அருளும். அவர்கள் இப்பொழுது உம்முடையவர்கள். அவர்களை உம்மிடம் இயேசுவின் நாமத்தில் சமர்ப்பிக்கிறேன். ஆமென். 341. 106 342. நான் வருந்துகிறேன், நான் இரண்டு மணிநேரம் இங்கு நின்றுவிட்டேன். ஆனால் பாருங்கள், உங்களுக்கு மாலை முழுவதும் உள்ளது. நீங்கள் வீடு சென்று, ஓய்வெடுத்து, சிறிது நேரம் உறங்கலாம். ஆனால் நான் சொன்னதை மறந்துவிடாதீர்கள். என் இருதயத்திலிருந்து உங்களிடம் கூறினேன். அது விசித்திரமாக ஒலிக்கிறது என்று அறிவேன். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பீனிக்ஸுக்கு உங்களிடம் வந்த போது, விசுவாசமுள்ள ஜெபத்தை ஏறெடுத்தேன். ஜனங்கள் சுகமடைந்தனர். அதை நான் விளக்கவேயில்லை. அதை விளக்க நான் விரும்பவில்லை. ஜனங்கள் என்ன செய்வார்களென்று கவனித்து வந்தேன். போலியான காரியங்கள் எழும்புவதை கவனித்து வந்தேன். அதை கவனித்தது எனக்கு மிகப்பெரிய காரியமாயிருந்தது. 343. ஆனால் இப்பொழுதோ, அந்த அடையாளம் உறுதிப்படுத்தும் செய்தியுடன் உங்களிடம் வந்திருக்கிறேன். சபை என்ன... இல்லை, அது ஸ்தாபனமாகவே இல்லை. ஆனால் இந்த எழுப்புதலின் விளைவாக ஸ்தாபனங்களுக்கு என்ன நேர்ந்தது? அவைகள் என்ன செய்தன? நேரடியாக லவோதிக்கேயாவுக்குள் சென்றன. கோடிக்கணக்கான டாலர்கள் அதற்காக செலவழிக்கப்பட்டு... அவள் பெரிதும் ஐசுவரியமுள்ளவளாகி, கோடிக்கணக்கான டாலர்கள் பெறுமானமுள்ள சொத்துக்களை பெற்றிருக்கிறாள். ஆனால் செய்தியை ஏற்றுக் கொள்ளும் விஷயத்தில்? இல்லவே இல்லை. அவர்கள் அதை புறக்கணிக்கின்றனர். அது என்ன? உமி கோதுமையிலிருந்து விலகிச் சென்றுவிட்டது. இப்பொழுது கோதுமை மணி குமாரனின் சமுகத்தில் கிடந்து முழு சுவிசேஷமாக மாறி, எஜமானுக்கென்று பொன்னிற மணியாக மாற, அது அப்படியாக வேண்டும். நீங்கள் அதை விசுவாசிக்கமாட்டீர்களா? இவர் யார்? இவர் யார்? அது மனிதனாக இருக்கக் கூடுமா? அது சபையாக இருக்கக் கூடுமா? அது ஸ்தாபனமாக இருக்கக் கூடுமா? அது நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்து. அவரை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 344. 107 345. நான் வியக்கிறேன், இப்படிப்பட்ட ஊடுருவும் செய்திக்கு பிறகு ஒரு சிறு ஆராதனையுடன்... சகோதரியே, இங்குள்ள சிறு பாடற்குழு பாடுவதற்கென, நான் அவரை நேசிக்கிறேன் என்னும் பாடலுக்கு சுருதி கொடுப்பீர்களா? அந்த பழைய பாடல் உங்களுக்குத் தெரியுமா? 346. நான் அவரை நேசிக்கிறேன் 347. நான் அவரை நேசிக்கிறேன் 348. முந்தி அவர் என்னை நேசித்ததால் 349. சம்பாதித்தார் என் இரட்சிப்பை 350. குளிர்ந்த, இருண்ட கல்வாரியில் 351. இந்த பாடலை என்னுடன் சேர்ந்து பாடுவீர்களா? இப்பொழுது எல்லோரும், அவரை ஆராதிக்க என்னோடு கூட அவரை ஆராதியுங்கள். 352. நான் அவரை நேசிக்கிறேன். 353. (இப்பொழுது, ஞாபகம் கொள்ளுங்கள், தொலைக் காட்சியைப்போல் அவர் உங்கள் அறையில் இருக்கிறார்) 354. முந்தி அவர் என்னை நேசித்ததால் 355. சம்பாதித்தார் என் இரட்சிப்பை 356. கல்வாரி 357. (அதன் அர்த்தம் என்னவென்பதை உணருகிறீர்களா? உங்களால் அவருடைய செயலின் ஆழத்தை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா?) 358. நான் அவரை நேசிக்கிறேன். அவரை நான் காணவில்லை, ஆனால் அவர் இங்கிருக்கிறார். ஒரு சிறு தொலைக்காட்சி பெட்டி என்னிடம் உள்ளது, என் இருதயத்தை பிரகாசிக்கச் செய்யும் சிறிய ஒன்று. அது அவரை பிரதிபலிக்கிறது என்றறிவேன். அவர் இங்கிருக்கிறார்... 359. நேசித்ததால் சம்பாதித்தார் 360. என் இரட்சிப்பை கல்வாரியில் 361. 108 362. இந்த பாடலை நாம் மெளனமாக இசைக்கும் போது, இதை நீங்கள் செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். நாம் என்னவாயிருந்தோம் என்று காணும்போது, நாம் கலந்தவர்களாயிருக்கிறோம். ஞாபகம் கொள்ளுங்கள், நான் கத்தோலிக்க பூர்வீகத்தைக் கொண்டவன். பாருங்கள்? நாம் பல ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்த கூட்டமாயிருக்கிறோம். ஆனால் அவை எல்லாவற்றையும் விட்டு இப்பொழுது நாம் வெளிவந்துவிட்டோம். நாம்... கிறிஸ்துவுக்குச் சொந்தமானவர்கள். நாம் அவருடையவர்கள். இதை நாம் பாடும் போது, நாம் திரும்பி மற்றவர்களுடன் கை குலுக்குவோம். நீங்கள் எழுந்திருக்க வேண்டியதில்லை. ''தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரனே. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே“ என்று கைகுலுக்கும் போது சொல்லுங்கள் - ஒரு உண்மையான கிறிஸ்தவ சூழ்நிலையில். தேவன் தொழுது கொள்ளப்பட விரும்புகிறார் என்று நான் நம்புகிறேன். நீங்களும் அப்படி நினைக்கிறீர்கள் அல்லவா? அவரை தொழுது கொள்ளுங்கள். அவர்... தேவன் தொழுகைக்குரியவராயிருக்கிறார். அவரை நாம் தொழுது கொள்ள விரும்புகிறோம். அதை நாம் எப்படி செய்வோம்...? நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு கூருங்கள். நீங்கள் ஒருவரையொருவர் நன்கு பாராட்டுங்கள்...” “இவைகளை நீங்கள் செய்யும்போது, எனக்கே செய்தீர்கள்.'' 363. இப்பொழுது இந்த பாடலை நாம் பாடி, ஒருவரோடொருவர் கைகுலுக்கி, ஆராதிப்போம்... முந்தி அவர்... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக ஓ, 364. நான் அவரை நேசிக்கிறேன் 365. நான் அவரை நேசிக்கிறேன் 366. முந்தி அவர் என்னை நேசித்ததால் 367. சம்பாதித்தார் என் இரட்சிப்பை 368. கல்வாரி..... 369. அது உங்கள் இருதயத்தில் கொழுந்துவிட்டு எரிகிறதா? நல்லுணர்வு தரக்கூடிய ஒன்று அங்கு உள்ளதா? உங்களுக்குத் தெரியுமா? அதை வெளியே எடுத்து கட்டித் தழுவவேண்டும் என்பது போல் தோன்றுகிறது. (ஹா?) உங்களுக்கும் அத்தகைய உணர்வு உங்கள் இருதயத்தில் உள்ளதா? இல்லையென்றால், நண்பனே, ஜாக்கிரதையாயிரு. அங்கு உண்மையான அன்பு இராவிட்டால், “நான் அவரை நேசிக்கிறேன்'' என்று சொல்லக்கூடிய அன்பு இல்லாவிட்டால், நீ ஆபத்தான நிலையில் இருக்கிறாய். அது பாடலாக மாத்திரமல்ல, உண்மையாகவே அமையவேண்டும். முந்தி அவர் என்னை நேசித்தார். இல்லாவிட்டால் இன்று நான் எங்கிருப்பேன்... எனக்கு 55 வயதாகிறது. என் வாழ்க்கை சீக்கிரம் முடிந்து போகும். பாருங்கள்? நான் என்ன... சம்பாதித்தார் என் இரட்சிப்பை ... சகோ. ட்ரோ நீங்கள் என்ன...? (சபையிலுள்ள ஒரு மனிதன் பேசுகிறார் - ஆசி). 370. 109 371. அந்த சாட்சியைக் கேட்டீர்களா? “இரட்சிக்கப்பட்டார்.'' 372. அவருடைய தெய்வீக வல்லமையினால் இரட்சிக்கப்பட்டு 373. புதிய உயரத்துக்கு இரட்சிக்கப்பட்டு சென்றேன் 374. இப்பொழுது என் வாழ்க்கை இனிமையாகவும் 375. என் சந்தோஷம் பூரணமாயும் உள்ளது 376. ஏனெனில் நான் இரட்சிக்கப்பட்டேன்! 377. உனக்கு எப்படித் தெரியும்? நான் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் பிரவேசித்துவிட்டேன் என்று என் ஆவி அவருடைய வார்த்தையுடன் கூட சாட்சியிடுகிறது. 378. உங்களுக்கு என் நன்றி, அன்பார்ந்த கிறிஸ்தவர்களே. அது எனக்கு நல்லுணர்வைத் தருகிறது. வீடு போன்ற உணர்வு பெறும் இடத்துக்கு வருவதற்கு எனக்கு பிரியம். எனக்கு பிரிந்து செல்ல கடினமாயுள்ளது. நான் சிந்தித்துக் கொண்டே, கடிகாரத்தைப் பார்க்கிறேன். என் மகள் அங்கு உட்கார்ந்து கொண்டு, என்னைப் பார்த்து தலையசைத்துவிட்டு, தலைகுனிந்து கொள்கிறாள். அங்கு உட்கார்ந்திருக்கும் என் மகன், ''எதற்காக இன்னும் பேசிக் கொண்டே போகிறீர்கள்?'' என்று கேட்கிறான். உங்களுக்குத் தெரியுமா... எனக்கு இங்கு உட்கார்ந்து கொண்டு. எனக்குத் தெரியவில்லை. எனக்கு ஐக்கியம் என்றால் பிரியம் என்று உங்களுக்குத் தெரியும். அது எனக்கு அநேக இடங்களில் கிடைப்பதில்லை (அது உங்களுக்குத் தெரியும்). அது நாளடைவில் குறைந்து கொண்டே வருகிறது. அங்கு செல்ல நாட்கள் நெருங்கிக்கொண்டு வருகிறதை நான் அறிகிறேன். பாருங்கள்? என்றாவது ஒருநாள் என் கடைசி பிரசங்கத்தை முடித்துவிட்டு, வேதாகமத்தை கடைசியாக மூடிவிடுவேன். அப்பொழுது ஒரு பயணத்தை மேற்கொள்வேன். என்னை சந்திக்க நீங்களும் என்றாவது ஒருநாள் வருவீர்கள். நீங்கள் மேலே வரும் போது, நாமெல்லாரும் நித்திய காலமாய் உட்கார்ந்து கொண்டு, சகோ. கார்ல் கூறினது போல், நித்திய காலமாய் வாழுவோம். 379. 110 380. பாருங்கள், நண்பர்களே . நீங்கள் ஒன்று செய்யும்படி உங்களைக் கேட்டுக் கொள்ளப்போகிறேன். நீங்கள் பகல் உணவுக்கு செல்லாதபடி உங்களை பிடித்து வைத்துவிட்டேன். பாருங்கள்? சற்றுமுன்பு சகோ. அவுட்லா ஒன்றை செய்துவிட்டார். எனக்கு பிடிக்காத ஒன்றை அவர் செய்வது அபூர்வமே. எனக்காக அவர் காணிக்கை எடுத்தார், பாருங்கள். உங்களில் ஒருவர் அந்த காணிக்கையை எடுத்துக்கொண்டு கதவருகில் நிற்பாரானால், நீங்கள் அந்த காசைப்பெற்று உங்கள் பகல் உணவை அதைக் கொண்டு வாங்கிக் கொள்ளுங்கள். அது நான் உங்களுக்குக் கொடுக்கும் வெகுமதி. பாருங்கள். அப்படி செய்யுங்கள். பாருங்கள்? அது நன்றாயிருக்கும். அவர் இனிமையானவர். அவர் எப்பொழுதுமே... அவர் ஒருபோதும்... எனக்கு உதவி செய்ய வேண்டுமெனும் நோக்கத்தை தவிர வேறொன்றும் அவருக்கு இல்லை. அது அவருடைய முறை. 381. 111 382. இங்கு சிலர் நின்று கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய பெயரைச் சொல்ல எனக்கு விருப்பமில்லை, அப்படி செய்வதனால் அவர்களுடைய மனது புண்படக் கூடும். சற்று முன்பு மகிமைக்குள் பிரவேசித்த ஒரு விலையேறப்பெற்ற சகோதரன் இங்கிருந்தார். அவருடைய விருப்பம்... எனக்கு காடுகள் என்றால் பிரியம் என்று அவர் அறிந்திருந்தார். எனவே அவர் எனக்கு ஒரு 'ஜீப்' வாங்கிக் கொடுக்க விரும்பினார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அவர் மறைந்த பிறகு, அவருடைய மனைவிக்கு அப்படி செய்ய வேண்டுமெனும் விருப்பம் இருந்தது. அவளையும் நான் சம்மதிக்கவில்லை. ஆனால் மற்ற பையன்கள் ஒன்றாக சேர்ந்து இங்கு வந்து... மற்றுமொரு சகோதரன் இந்த சபைக்கு வருகிறார். அவர், “சகோ. பிரன்ஹாமே”, நான் மணல் வண்டிகளை (Sand Wagons) செய்கிறவன் என்றார். உங்களுக்குத் தெரியும், மோட்டர் வாகனத்தினால் இழுக்கப்படும் வண்டிகள் (buggies). நீங்கள் 'ஹாக்ஸ்' (hacks) என்று அழைக்கும் வண்டி. அவர், ''அதை செய்து கொடுக்கிறேன்'' என்றார். அவரை நான் சம்மதிக்கவில்லை. இந்த பையன்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? அவர்கள் 'ஜீப்'பையும் ஒரு மணல் வண்டியையும் செய்து கொடுத்தார்கள். அப்படிப்பட்ட ஒன்றை நான் கண்டதேயில்லை. 383. 112 384. அன்றிரவு டூசானில் கூட்டம் முடிந்தவுடன், அவர்கள் அதை ஓட்டிக்கொண்டு என் இடத்துக்கு கொண்டுவந்து, “இது பீனிக்ஸ் மக்கள் அளிக்கும் வெகுமதி'' என்றனர். பாருங்கள், அவர்கள் தங்கள் பெயரைத் தனியாகக் கூறவில்லை. ”ஓ, நாங்கள் எல்லோரும் சேர்ந்து'' என்றனர். பாருங்கள். அது... ஓ, நான் பரலோகத்துக்கு செல்லும்போது, இப்படிப்பட்டவர்களுடன் வாழ்வேன் என்று அறிவேன். அது எனக்கு மிகவும் அருமையானதாக இருந்தது. இப்படிப்பட்டவைகள். இந்த சிறு... இப்படிபபட்டவை. 385. சகோ. அவுட்லாவிடம் நான் அதேவிதமான உணர்ச்சி கொண்டவனாய் இருக்கிறேன். அவர், ''நல்லது , சகோ. பிரன்ஹாமே, நான்... இங்கு சென்று... ஏதாவதொரு இடத்துக்கு சென்று, உம்மை நேசித்து, உம்மிடம் அளவளாவி, இயேசுவைக் குறித்து பேசலாம் என்பார். ஜனங்கள்... உங்களுக்குத் தெரியும், ''ஒரே இனத்தை சேர்ந்த பறவைகள்.'' அப்படிப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து அளவளாவி, ஐக்கியம் கொள்ள விரும்புவார்கள். 386. 113 387. அதை நான் பாராட்டுகிறேன், ஆனால் அந்த காணிக்கை எனக்கு வேண்டாம், சகோதரனே, சகோதரியே. நான்... என் சபை எனக்கு 100 டாலர் வார சம்பளம் தருகிறது. அது எனக்கு போதுமானதாயுள்ளது. அதை நான் பாராட்டுகிறேன். உங்கள் யாருக்காகிலும் பகல் உணவு வேண்டுமானால், யாராகிலும் ஒருவர் கதவண்டையில் இருப்பார். என் கணக்கில் பகல் உணவைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது மிகவும் நன்றாயிருக்கும். உங்களில் சிலரை, உங்கள் பகல் உணவிலிருந்து பிடித்து வைத்துவிட்டேன். அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் என்னையும் நேசிக்கவேண்டும். ஏனெனில் நான் அவரில் ஒரு பாகமாயிருக்கிறேன். பாருங்கள்? ஆமென். ஆகையால்தான் நான் உங்களை நேசிக்கிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 388. 114 389. இப்பொழுது நாம் எழுந்து நிற்போம். வரப்போகும் கூட்டங்களை மறந்துவிடாதீர்கள். நீங்கள் அருகில் இருக்க நேர்ந்தால், வருவதற்கு ஞாபகம் கொள்ளுங்கள். உங்களுக்கு எப்பொழுதும் வரவேற்பு உள்ளது. எனக்காக நீங்கள் ஜெபிப்பீர்களா? ஜெபம் அதிகம் தேவையாயுள்ளவன் நான். எனக்காக ஜெபிப்பீர்களா? எனக்குள்ள பாரத்தை, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை, எனக்கு முன்னால் என்ன வைக்கப்பட்டுள்ளன என்பதை எத்தனை பேர் உணருகிறீர்கள்? என்ன வரப்போகிறதென்பதை நான் அறிந்திருக்கிறேன். பாருங்கள்? மற்றவை வருகிறதை என்னால் எப்படி காண முடிகிறதோ, அதேவிதமாக இதையும் என்னால் காணமுடிகிறது. என்ன வரப்போகிறதென்பதை நான் அறிந்திருக்கிறேன். பாருங்கள்? ஆனால் அதைக் குறித்துப் பேச நேரமில்லை. இப்பொழுது நடந்து கொண்டிருப்பதைக் குறித்து நாம் பேசுவோம். நாளைய தினம் அதற்காக கவலைப்படும். பாருங்கள்? நீங்கள்... எனக்காக ஜெபிப்பீர்களா? எனக்காக ஜெபிப்பீர்கள் என்பதன் அறிகுறியாக உங்கள் கைகளை உயர்த்துவீர்களா? சரி. 390. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது ஆராதனையை நமது அருமையான போதகர், சகோ. ஜிம்மி அவுட்லாவிடம் ஒப்படைக்கப் போகிறேன். சகோ. அவுட்லா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.